Friday, March 31, 2017

•மூன்று வருடங்களுக்கு மேலாக இவர்கள் சிறையில் வாடுவது ஏன்?

•மூன்று வருடங்களுக்கு மேலாக இவர்கள் சிறையில் வாடுவது ஏன்?
கடந்த 10.03.2014 யன்று கைது செய்யப்பட்ட திருச்செல்வம், தமிழரசன், கவிஅரசு, காளை, ஜோன்மாட்டின், கார்த்திக் ஆகிய ஆறுபேரும் மூன்று வருடங்களுக்கு மேலாக மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணையை முடிக்காமல் வேண்டுமென்றே தாமதம் செய்வதுடன் இவர்களுக்கு ஜாமீன் வழங்காமலும் அடைத்து வைத்திருக்கின்றனர்.
கொடிய சிறையில் நீண்ட நாட்கள் அடைத்து வைக்க இவர்கள் செய்த குற்றம் என்ன?
அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழகம் விடுதலை பெற வேண்டும் என விரும்பியது குற்றமா?
தோழர் தமிழரசன் பாதையில் தமிழக விடுதலைக்கு போராடியது குற்றமா?
ஈழத் தமிழின அழிவுக்கு எதிராக குரல் கொடுத்தது குற்றமா?
•60 கோடிரூபா மக்கள் பணத்தை ஊழல் செய்த ஜெயா அம்மையார் விடுதலை
•சங்கர ராமனை கொலை செய்த காஞ்சி சங்கராச்சாரியார் விடுதலை
•16 ஆயிரம் கோடி ரூபா கிரினைட் கொள்ளையன் பி.ஆர்.பழனிச்சாமி விடுதலை
•6 லட்சம் கோடி ரூபா தாது மணல் கொள்ளையன் வைகுண்டராசன் விடுதலை
ஆனால் தமிழ் மக்களுக்காக போராடியவர்கள் விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைக்கப்படுகிறார்கள்.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்கிறார்கள். ஆனால் இங்கே குற்றவாளிகள் தப்புகிறார்கள். அப்பாவிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஒரு நியாயமும் தமிழ் இன உணர்வாளர்களுக்கு இன்னொரு நியாயமும் வழங்கப்படுகிறது.
இந்த ஆறு பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது. ஆனால் அதற்குரிய மருந்து சிறையில் ஒழுங்காக வழங்கப்படுவதில்லை. உறவினர்கள் வாங்கிச் சென்று கொடுக்க முனைந்தாலும் அதையும் அனுமதிப்பதில்லை.
இந்த ஆறு பேரில் ஒருவருக்கு அண்மையில் நெஞ்சுவலி மற்றும் தோல் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. அதற்குகூட சிறையில் உரிய நேரத்தில் மருத்துவம் வழங்கபப்படவில்லை.
ஜாமீனும் வழங்கப்படவில்லை. உறவினர்கள் பார்வையிடவும் இலகுவாக அனுமதிப்பதில்லை. உறவினர்கள் நீதிமன்றத்தில் சென்று பார்வையிடவோ பேசவோ அனுமதிப்பதில்லை.
தமது குழந்தைகளைக்கூட தூக்கி கொஞ்சக்கூட பொலிசார் இவர்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை.
இத்தனை கடுமையாக நடக்க வேண்டிய அவசியம் என்ன? இத்தனை கொடுமை செய்யப்படுவது எதற்காக?
இவர்களை விரக்தியடைய செய்ய வேண்டும். இவர்கள் உறவினர்களை மிரட்ட வேண்டும். இதைப் பார்த்து இன்னொருவர் போராட்டத்திற்கு வர நினைக்கக்கூடாது.
இதற்காகத்தானே கியூ பிரிவு உளவுப் பொலிசார் சட்ட விரோதமாக இத்தனை கொடுமைகளையும் செய்கிறார்கள்?
ஆனால் போராளிகளை கொல்வதன் மூலமோ அல்லது கொடுமைப்படுத்துவதன் மூலமோ போராட்டத்தை ஒழிக்க முடியாது. மாறாக அது மேலும் மேலும் வீறு கொண்டு வளரும்.
இந்த ஆறு பேருக்கு இழைக்கப்படும் கொடுமை அவர்களை மேலும் உறுதி கொள்ள வைப்பதுடன் மேலும் மேலும் இன உணர்வாளர்களை திரளச் செய்கிறதை காண்கிறோம்.
இந்த ஆறுபேரின் விடுதலைக்கு குரல் கொடுப்போம்.
சிறையில் அடைப்பதன் மூலம் தமிழ் இன உணர்வை மழுங்கடிக்க முடியாது என்பதை காட்டுவோம்.
குறிப்பு-
(1) இந்த ஆறு பேருக்கும் இழைக்கப்டும் கொடுமைகள் அடங்கிய மனு ஒன்று லண்டன் சர்வதேச மன்னிப்பு சபைக்கு விரைவில் கையளிக்கப்படவுள்ளது.
(2) இந்த ஆறு பேருக்கும் இழைக்கப்டும் கொடுமைகள் குறித்து உண்மை அறியும் குழு நேரில் சென்று பார்வையிட்டு ஆராய்வதற்குரிய ஒழுங்குகள் .மேற்கொள்ளப்படுகின்றன.

No comments:

Post a Comment