Friday, March 31, 2017

•இன்னும் எத்தனை நாளைக்கு இந்த (அ)சிங்கங்களை சகித்துக் கொள்ள வேண்டும்?

•இன்னும் எத்தனை நாளைக்கு
இந்த (அ)சிங்கங்களை சகித்துக் கொள்ள வேண்டும்?
இவர்கள் தமிழர்கள்
இவர்கள் தமிழரின் பிரதிநிதிகள்
இவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்கள்.
ஆனால் ,
இவர்கள் கொழும்பில் தங்குவதற்கு சிங்கள அரசின் சொகுசு பங்களா வேண்டும்.
இவர்கள் பவனி வருவதற்கு சிங்கள அரசின் சொகுசு வாகனம் வேண்டும்.
இவர்கள் வார இறுதியில் மகிழ்வதற்கு சிங்கள அரசின் தண்ணி விருந்து வேண்டும்.
அதுமட்டுமா?
தமிழ் பிரதேசத்தில் கூடி கதைப்பதற்கும் இவர்களுக்கும் சிங்கள அரசின் பாதுகாப்பு வேண்டும்.
கேப்பாப்ப்லவில் போராடிய ஒரு பெண்ட மயங்கி விழுந்துள்ளார்.
அங்கு போராடிய இன்னொருவர் விரக்தியில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதுபற்றி எல்லாம் தமிழர் தலைவர் சம்பந்தர் அய்யாவுக்கு அக்கறை இல்லை.
அதுபற்றி கதைப்பதற்கும்கூட அவருக்கு விருப்பம் இல்லை.
ஆனால் அவரது அக்கறை எல்லாம் தான் அப்பம் சாப்பிட்டு வந்ததை முக்கிய செய்தியாக செல்வம் அடைகலநாதனுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதே.
காணமல் போனவர்களின் உறவுகள் தொடர்ந்து போராடுகிறார்கள்.
அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய சம்பந்தர் அய்யாவோ இலங்கை அரசுக்கு ஜ.நா கால அவகாசம் வழங்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்.
நீதி விசாரணை வேண்டும் என்று புலம்பெயர்ந்தவர்கள் போராடுகின்றார்கள்.
கொட்டும் மழையிலும் கடும் குளிரிலும் 10 நாட்களாக ஈழத் தமிழர் ஒருவர் லண்டன் பிரதமர் வாசலில் உண்ணாவிரதம் இருந்தார்.
ஆனால் சம்பந்தர் அய்யாவும் அவரது சிஷ்யன் சுமந்திரனும் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.
இவர்கள் வாக்கு பெறுவது தமிழ் மக்களிடம். ஆனால் இவர்கள் விசுவாசமாக இருப்பது சிங்கள அரசிடம்.
இவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிறார்கள். ஆனால் இவர்கள் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கிறார்கள்.
இவர்கள் சிங்கத் தலைவர்கள் அல்ல. இவர்கள் தமிழ் இனத்தின் அசிங்கத் தலைவர்கள்.
இந்த அசிங்கங்களை இன்னும் எத்தனை நாளைக்கு தமிழ் மக்கள் சகித்து கொள்ள வேண்டும்?

No comments:

Post a Comment