Tuesday, September 12, 2017

தமது சம்பள உயர்வுக்காக போராடும் ஆசிரியர்கள்

•தமது சம்பள உயர்வுக்காக போராடும் ஆசிரியர்கள்
தமது சமூகத்திற்காக போராட முன்வரக்கூடாதா?
இருவரும் பெண்கள்
இருவரும் தமிழர்கள்
அதுமட்டுமல்ல இருவரும் ஆசிரியர்கள்
ஒருவர் தன் பதவியை தூக்கியெறிந்துவிட்டு
தன் மகனுடன் போராட்டத்தில் குதிக்கிறார்.
இன்னொருவர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை
றோட்டில் வைத்து மக்கள் முன்னிலையில் அடிக்கிறார்
மாணவர்களுக்கு அடிப்பது தவறு
அதுவும் பொதுவெளியில் அடிப்பது மகா தவறு
சட்டப்படி அந்த ஆசிரியரை இந்நேரம்
பொலிஸ் கைது செய்திருக்க வேண்டும்
ஆனால் கைது செய்யாதது மட்டுமல்ல
அந்த அசிரியருடன் சேர்ந்து போராடும்
மாணவிகளை மிரட்டுகிறது பொலிஸ்
போராடுவது ஜனநாயக உரிமை என்று
இந்திய உச்சநீதிமன்றம் கூறுகிறது
ஆனால் போராடுபவர்களை
கைது செய்கிறார்கள்
வழக்கு பதிவு செய்கிறார்கள்
தமிழ்நாட்டில் ஜனநாயகம் கிலோ என்ன விலை?

No comments:

Post a Comment