Tuesday, September 12, 2017

அரசு ஒருவாசலை அடைத்தால்

•அரசு ஒருவாசலை அடைத்தால்
போராடும் மாணவர்கள் ஒன்பது வாசலை திறப்பார்கள்!
மாணவர்கள் மெரினா கடற்கரையில் ஒன்று சேரக்கூடாது என்று
தமிழக பொலிசார் மெரினா கடற்கரைக்கு பூட்டு போட்டுள்ளது.
உலகிலே கடற்கரைக்கு பூட்டு போட்ட பெருமை தமிழக அரசுக்கே சேரும்.
அரசு மெரினா கடற்கரைக்கு பூட்டு போட்டதால் மாணவர்கள் பெசன்நகர் கடற்கரையை திறந்தார்கள்.
போராடிய கல்லூரி மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது தமிழக அரசு.
கல்லூரி மாணவர்களை தொடர்ந்து இப்போது பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பள்ளிகளுக்கு பூட்டுப் போட்டதால் மாணவர்கள் றோட்டுக்கு வந்து மறியல் செய்கிறார்கள்.
போராடும் மாணவர்களால் பிரதமர் மோடி உருவப் பொம்மை எரிகிறது. பாஜக அலுவலகம் முற்றுகை இடப்படுகிறது.
மாணவர்களின் எதிர்ப்பிற்கு அஞ்சி மத்திய அரசின் அமைசர்கள் தங்கள் விஜயத்தினை ரத்து செய்கிறார்கள்.
மாணவர்களை போராட அனுப்பிவிட்டு பெற்றோர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம்.
மாணவர் போராட்டம் தொடருமாயின் அது மாபெரும் மக்கள் போராட்டமாக மாறும்
தன் மகளுடன் போராட்டத்தில் பங்குபற்றிய ஒரு தாயார் கூறுகிறார், “என் பொண்ணும் மத்த பசங்களும் நீட்டுக்கு எதிரா போராடுறாங்க. அதான் நான் ஆதரவு கொடுக்க வந்தேன். உன்னை நல்லா போட்டோ எடுத்து வைச்சிருக்கோம். பின்னாடி கைது பண்ணுவோம் என்று மிரட்டுறாங்க பொலிஸ்காரங்க. கைது பண்ணட்டும். என்ன தூக்கிலாயா போட்டுடுவாங்களா? போட்டடும். அப்படி செஞ்சா நீட்டுக்கு எதிராக போராடிச் சாகிறது பெருமைதானே??”
இந்த தாயாருக்கு அரசு என்ன பதில் கூறப்போகிறது?

No comments:

Post a Comment