•ஈழத் தமிழர்கள் “பீனிக்ஸ்” பறவைகளா?
எரிந்த சாம்பலில் இருந்து உயிர்தெழும் வல்லமை கொண்ட பீனிக்ஸ் பறவைகள் என்று கூறுகிறார்கள்.
அப்படி ஒரு பறவை நிஜத்தில் உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் பீனிக்ஸ் பறவைபோல் ஒரு மனித இனம் உண்டு என்று கூறலாம்.
கிளிநொச்சியில் தெருவோரத்தில் ஒரு செருப்பு தைக்கும் கடையை வைத்திருந்தார் மகேந்திரன் என்ற தமிழர்.
சில வாரங்களுக்கு முன்னர் விசமிகள் அவரது கடையை எரித்துவிட்டனர். அவரது வருமானத்தை மட்டும் நம்பியிருந்த குடும்பம் செய்வதறியாது திகைத்தது.
ஆனால் தனது உழைப்பில் மட்டுமே நம்பிக்கை கொண்ட மகேந்திரன் துவண்டு விடவில்லை.
சில உணர்வுள்ள தமிழர்களின் உதவியுடன் மீண்டும் அதே தெருவோரத்தில் தனது கடையை ஆரம்பித்து விட்டார்.
அதேபோல் கனடாவில் திருமதி யோகரட்ணம் செல்லையா முதுகலைமாமணி பட்டம் பெற்று சாதனை செய்துள்ளார்.
80 வயதான இந்த பெண்மணி கனடாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து இந்த பட்டத்தைப் பெற்றுள்ளார்.
அவர் விரும்பியிருந்தால் பென்சன் எடுத்துக்கொண்டு ஊர்க் கதைகள் பேசி கொண்டு நேரத்தைக் கழித்திருக்கலாம்.
ஆனால் அவரோ நாடு விட்டு நாடு சென்றிருந்தாலும் 80 வயதில் படித்து பட்டம் பெற்று இளையோருக்கு ஒரு உதாரணத்தைக் காட்டியிருக்கிறார்.
இரண்டு நாளில் 40 அயிரம் மக்களை கொலை செய்தால் அந்த இனம் மீண்டும் போராட முடியாது என்று மகிந்த ராஜபக்ச நினைத்தார்.
மகிந்த ராஜபக்ச மட்டுமல்ல இந்தியா உட்பட பல வல்லரசுகள் ஈழத் தமிழ் இனம் மீண்டும் எழுந்துவிட முடியாது என்று நினைத்தன.
ஆனால் ஈழத் தமிழர்கள் எரிந்த சாம்பலில் இருந்து உயிர் பெற்று வரும் பீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் எழுந்து நிற்போம்; என்பதை நிரூபித்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment