•அடக்குமுறை இருக்கும்வரை
அடக்குமுறைக்கு எதிரான
போராட்டமும் இருக்கும்!
அடக்குமுறைக்கு எதிரான
போராட்டமும் இருக்கும்!
எங்கு அரசின் அடக்குமுறை இருக்கிறதோ அங்கெல்லாம் அதற்கெதிரான மக்கள் போராட்டமும் இருக்கும்.
அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு, நீட்டை ரத்து செய்யச் சொல்லி மாணவர்கள் போராhட்டம் வெடித்துள்ளது.
போராடும் மாணவர்கள் மீது என்றுமில்லாதவாறு பொலிஸ் அடக்குமுறையை தமிழக அரசு ஏவியுள்ளது.
ஆனாலும் மாணவர்களுக்கு ஆதரவாக ஊனமுற்றவர் முதல் குழந்தைகள் வரை போராட்டத்தில் பங்கெடுத்துவருகின்றனர்.
விழுப்புரம் ஆசிரியர்சபரிமாலா தன் பதவியை துறந்து தன் மகனுடன் போராட்டக் களம் புகுந்துள்ளார்.
குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட மாணவி வளர்மதி விடுதலையான அன்றே நாலுமணி நேரத்தில் மீண்டும் மாணவர் போராட்டத்தில் பங்குபற்றியுள்ளார்.
அமெரிக்காவில் 13 மாநிலங்களில் மாணவி அனிதாவின் மறைவிற்கு அஞ்சலி நிகழ்வுகள் நடந்துள்ளன.
அவுஸ்ரேலியாவில் தமிழகமாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
லண்டனில் நாளையதினம் இந்திய தூதராலயத்திற்கு முன்னால் தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
தமிழக மாணவர்களின் போராட்டம் தமிழ்நாட்டையும் தாண்டி உலகெங்கும் பரவுகிறது.
குஜராத்திலும் நீட் க்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஆனால் தமிழகஅரசு தன் ஆட்சியை தக்கவைக்க எம்.எல். ஏ க்களை விலை பேசிவாங்குவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.
எதிர்க்கட்சிகளோ பவளவிழா கொண்டாடுகின்றன. அடுத்த தேர்தலுக்கு கூட்டணி அச்சாரம் போடுவதில் கவனம் கொள்கின்றன.
மக்கள் மட்டுமே அடக்குமுறைக்கு எதிராக போராடுகின்றன!
No comments:
Post a Comment