Wednesday, June 29, 2022

சிறப்புமுகாமில் 20வது நாளாக

சிறப்புமுகாமில் 20வது நாளாக ஈழத் தமிழ் அகதிகள் உண்ணாவிரதம். காவலில் தமிழக தமிழன் இறந்தால் தமிழகஅரசு பத்து லட்சம் ரூபா வழங்கும்.ஆனால் ஈழத் தமிழன் இறந்தால் பாடியைக்கூட தர மாட்டாங்களே? சிறையில் இருக்கும் ஈழத் தமிழரை தமிழக தமிழர் சென்று பார்வையிடலாம். உ+ம் - சாந்தன் முருகன் போன்றவர்களை சீமான் பார்வையிடலாம். ஆனால் சிறப்புமுகாமில் இருக்கும் ஈழத் தமிழரை தமிழக தமிழர் எவரும் பார்வையிட முடியாது. விசாரணைக் காலங்களில் சிறையில் இருந்தால் அந்த நாட்கள் தண்டனையில் கழிக்கப்படும். ஆனால் சிறப்புமுகாமில் இருக்கும் நாட்கள் தண்டனையில் கழிக்கப்படாது. (முன்பு கழிக்கப்பட்டது. இப்போது திராவிட முதல்வர் அதனை நீக்கிவிட்டார்) சிறையில் நீண்டகால சிறைவாசிகளுக்கு பரோல் விடுமுறை உண்டு. அவர்கள் பரோலில் சென்று குடும்பத்தினருடன் தங்கலாம். சிகிச்சை பெறலாம் ஆனால் சிறப்புமுகாமில் உள்ளவர்களுக்கு பரோல் விடுமுறை இல்லை. அவர்கள் குடும்பத்தினருடன் தங்க முடியாது. சிகிச்சை பெற முடியாது. தண்டனைக்காலம் குறிப்பிட்டு சிறையில் அடைக்கப்படுவதால் தாம் எப்போது விடுதலை பெறுவோம் என்பது சிறைவாசிகளுக்கு தெரியும். ஆனால் சிறப்புமுகாமில் அடைக்கப்படுபவர்களுக்கு விடுதலை அடையும்வரை தாம் எப்போது விடுதலை பெறுவோம் என்பது தெரியாது. ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு வழங்கப்படக்கூடிய தண்டனைக்காலத்தைவிட அதிகமாக சிறையில் இருந்தால் அவரை உடனடியாக நீதிமன்றம் விடுதலை செய்யும். ஆனால் 6 மாதம் தண்டனை வழங்கப்படும் பாஸ்போர்ட் குற்றத்திற்காக 3 வருடங்களுக்கு மேலாக சிறப்புமுகாமில் வாடுகின்றனர் பல அகதிகள் #சிறையைவிடக்கொடியசித்திரவதைமுகாம்

No comments:

Post a Comment