Wednesday, June 29, 2022

ஆடுகள் எப்போதும் ஓநாயைத்தானே நம்புகின்றன !

•ஆடுகள் எப்போதும் ஓநாயைத்தானே நம்புகின்றன ! ஒரு காலத்தில் எம்மிடம் ஒரு அழகான நாடு இருந்தது ஒரு காலத்தில் எமக்கு வீரம் செறிந்த வரலாறும் இருந்தது. இலுப்பம்பழம் பழுத்தால் வெளவால் வரும் என்று எமது (செம்மறி) தலைவர்கள் கூறினார்கள். ஆனால் வந்தது வெளவால் அல்ல ஓநாய் என்பது இப்போதுதானே புரிகிறது. அந்த ஓநாய் வானில் வந்து உணவுப் பொட்டலத்தை வீசியது. ஓநாய் வீசிய உணவுப் பொட்டலம் எமது கைக்கு வந்தது எமது கையில் இருந்த எமது அழகிய தேசம் ஓநாய் கைக்கு சென்று விட்டது. எமது கையில் இருந்த பலாலி விமான நிலையம் எமது கையில் இருந்த திருகோணமலை துறைமுகம் எமது கையில் இருந்த மன்னார் எண்ணெய் வளம் எமது கையில் இருந்த புல்மோட்டை இல்மனைற் வளம் எமது கையில் இருந்த 650 ஏக்கர் சம்பூர் மக்களின் நிலம் எல்லாமே இன்று ஓநாய் கையில் சென்று விட்டது. ஆனால,; எமது (செம்மறி) ஆட்டு தலைவர்களோ உரத்து கூறுகிறார்கள் அந்த ஓநாய் ஆடுகள் மீது மிகவும் இரக்கம் கொண்டதாம். ஓநாய் விரைவில் தீர்வு தரப் போவதால் எமது அழகிய தேசத்தை தா என்று கேட்கக் கூடாதாம். என்ன செய்வது? இந்த (செம்மறி)ஆடுகள் எப்போதும் ஓநாயைத்தானே நம்புகின்றன!

No comments:

Post a Comment