Sunday, June 30, 2024

அவர் தன்னை உலகத் தமிழினத் தலைவர்

அவர் தன்னை உலகத் தமிழினத் தலைவர் என்றார் ஆனால் ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டபோது அது இன்னொரு நாட்டு விடயம் என்றார். அவர் தன்னை கடலில் வீசி எறிந்தால் கட்டுமரமாகி வந்து தமிழனுக்கு உதவுவேன் என்றார். ஆனால் ஈழத்தில் தமிழன் தத்தளித்தபோது கட்டு மரமாகி வந்து உதவுவார் என நம்பினோம். கடைசிவரை அவர் வரவேவில்லை. 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தப்பட்டுவிட்டது என்றார். ஆனால் அதன் பின்பும் தமிழர் கொல்லப்படுகிறார்களே என்று கேட்டபோது “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்றார். பொதுவாக பதவி கொடுக்காதவர்களுக்கு தன் இதயத்தில் இடம் கொடுப்பதாக கூறுவார். ஆனால் தத்தெடுத்த அகதிச் சிறுவன் மணிக்கு அந்த இதயத்திலும் இடங்கொடுக்காமல் கொன்று விட்டார். பக்கத்தில் மனைவி, துணைவி என்று இரண்டு பேரை வைத்துக் கொண்டு கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழன் பண்பாடு என்று பேசுவார். ஈழத்தில் பல்லாயிரம் தமிழர் மாண்டிருக்க உங்கள் பிள்ளைகளின் பதவி எற்பு விழா தேவையா என்று கேட்டால் சங்க இலக்கியத்தில் ஒரு வீட்டில் செத்தவீடு நடக்கும்போது பக்கத்து வீட்டில் கலியாணம் நடந்தது என்பார். வரலாறு அவரை பகுத்தறிவு பகலவன் என்று கூட எழுதிச் செல்லலாம். ஆனால் ஈழத்தமிழர் அவரது துரோகத்தை ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். என்ன அவர் இறந்த பின்பும் திட்டுகிறீர்களே என யாராவது கேட்கக்கூடும். என்னசெய்வது மழை விட்டும் தூவானம் விடவில்லையே.

இனப் படுகொலையில் கலைஞர் பங்கு என்ன?

இனப் படுகொலையில் கலைஞர் பங்கு என்ன? கலைஞர் வெறும் மாநில முதலமைச்சர்தான். அவருக்கு இன்னொரு நாட்டில் நடக்கும் யுத்தத்தை நிறுத்தும் அதிகாரம் இல்லை என்று சிலர் கூறுகின்றார்கள். இன்னும் சிலர், கலைஞர் மட்டுமல்ல இந்திய அரசே நினைத்தாலும் யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியாது என்கிறார்கள். ஆனால், இந்தியாவுக்காகவே யுத்தத்தை நடத்தினோம் என்று மகிந்த ராஜபக்சா கூறிய போது இந்திய அரசோ அல்லது இந்த இவர்களோ ஏன் அதை மறுக்கவில்லை? சரி. பரவாயில்லை. இந்தியாவின் உதவி இல்லையேல் எம்மால் யுத்தத்தில் வென்றிருக்க முடியாது என்று கோத்தபாயா கூறினாரே. அப்போது அதை ஏன் இந்திய அரசோ அல்லது இவர்களோ மறுக்கவில்லை? சரி. பரவாயில்லை. யுத்தத்தை நிறுத்த இந்தியா விரும்பவில்லை. புலிகள் அழியும்வரை யுத்தம் தொடர வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக இருந்தது என்று ராணுவ தளபதி சரத்பொன்சேகா கூறியிருக்கிறாரே. இதற்கு இவர்கள் என்ன கூறப் போகிறார்கள்? சரி. அதெல்லாவற்றையும் விடுவோம். நாராயணனும் சிவசங்கர்மேனனும் ஒவ்வொரு முறையும் கொழும்பு சென்று திரும்பும்போது சென்னை வந்து கலைஞர் கருணாநிதியை எதற்காக சந்தித்தனர்? எந்த அதிகாரமும் இல்லாத முதலமைச்சரிடம் இவர்கள் சந்தித்து என்ன பேசினார்கள்? கலைஞரிடம் திருக்குறளுக்கு விளக்கம் கேட்க சந்தித்தார்கள் என்று கூறப்போகிறார்களா? பிரபாகரனை கைது செய்யும்போது கௌரவமாக நடத்த வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி அறிக்கை விட்டிருந்தார். பிரபாகரனுக்கு இப்படி ஒரு நிலை ஏற்படப்போகின்றது என்பது எந்தவித அதிகாரமும் இல்லாத முதலமைச்சரான கலைஞருக்கு எப்படி முன்கூட்டியே தெரிந்தது? இறுதி நேரத்தில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் கலைஞருடன் பேசக் கேட்டபோது “பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார். நீங்கள் கூறுங்கள்” என்று கனிமொழி கூறினாரே. அப்போதாவது கலைஞர் தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று நடேசனிடம் கூறியிருக்கலாமே ? மாறாக கனிமொழி மூலம் வெள்ளைக் கொடி பிடித்துக்கொண்டு சரண்அடையும்படி எந்த அதிகாரமும் இல்லாத கலைஞர் ஏன் எற்பாடு செய்தார்? குறைந்தபட்சம் சரணடையும்போது கொல்லப்படப் போகிறீர்கள் என்பதையாவது இந்த எந்த அதிகாரமும் இல்லாத முதலமைச்சர் நடேசனிடம் கூறியிருக்கலாமே? மத்திய அரசுடன் சேர்ந்து இனப்படுகொலைக்கு துணை போனதுடன் தமிழகத்தில் எழுந்த ஈழத் தமிழருக்கான ஆதரவு நிலையினையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கியவர் எந்த அதிகாரமும் இல்லாத இந்த முதலமைச்சர் கருணாநிதி. இந்த விபரங்களை தெரியாத தமிழக அப்பாவி உடன்பிறப்புகள் கலைஞரை ஆதரிப்பது புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் நன்கு விபரம் தெரிந்த சில ஈழத் தமிழர் கலைஞரை நியாயப்படுத்துவதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை

பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டில்

பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட போராளிகளை இந்திய அரசு இலங்கையிடம் ஒப்படைக்காமைக்கு கலைஞரே காரணம். இந்த நன்றியை ஈழத் தமிழர் மறக்கக்கூடாது என எழுதப்பட்ட பதிவு ஒன்றை சிலர் கொண்டோடித் திரிகின்றனர். யுத்தத்தை ஏன் கலைஞர் நிறுத்தவில்லை என்று கேட்டால் ஒரு மாநில முதலமைச்சருக்கு அந்த அதிகாரம் இல்லை என்று ஒருபுறம் கூறுகின்றனர். ஆனால் மறுபுறம் போராளிகளை ஒப்படைக்காமைக்கு எதிர்க்கட்சியில் இருந்த கலைஞரே காரணம் என்கின்றனர். அப்படியென்றால் இந்தியாவில் ஒரு மாநில முதல்வரை விட எதிர்க்கட்சியில் இருப்பவருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்கிறார்களா? சரி எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் இந்த கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது குட்டி மணியை கைது செய்து இலங்கை அரசிடம் ஒப்படைத்துள்ளாரே. அதற்கு இவர்கள் என்ன பதில் கூறப் போகிறார்கள்? அதுகூடப் பரவாயில்லை. ஆனால் இதை எம்.ஜி.ஆர் சுட்டிக்காட்டி கேட்டபோது “ குட்டிமணி போராளி இல்லை. கடத்தல்காரன்” என்று டெலோ தலைவர் சிறீசபாரட்ணம் மூலம் அறிக்கைவிட வைத்தாரே கலைஞர் அந்த கொடுமையை என்னவென்று அழைப்பது? கலைஞரின் துரோகத்தை மறைத்து அவரை நியாயப்படுத்தும் இந் நபர்களின் முயற்சிகள் ஒருபோதும் வெற்றியளிக்கப்போவதில்லை. ஏனெனில் கூமுட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை.

தியாகி சிவகுமாரன் 50வது நினைவு தினம்.

•தியாகி சிவகுமாரன் 50வது நினைவு தினம். (05.06.1974) சிவகுமாரன் தமிழீழத்திற்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர். அதற்காக களப்பலியான முதல் வீரர் எனக் குறிப்பிடக்கூடியவர். சிவகுமாரன் விரும்பியிருந்தால் நன்கு படித்து பட்டம் வாங்கி நல்ல உத்தியோகத்தையும் பெற்று வசதியாக வாழ்ந்திருக்க முடியும். அல்லது மற்றவர்கள் போல் வெளிநாட்டுக்கு சென்று பாதுகாப்பாக இருந்திருக்க முடியும். ஆனால் அவரோ ஏற்கனவே பல முறை கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்திருந்தாலும் தொடர்ந்து தமிழ் மக்களுக்காக போராடி மரணித்தார். எமது போராட்டத்தில் களப்பலியான முதல் போராளி என்ற பெருமை அவருக்கே சாரும். மரணமடையும்போது அவர் கூறிய இறுதி வரிகள் “ மீண்டும் பிறப்பேன். தமிழ் மக்களுக்காக மீண்டும் போராடுவேன்” போராளிகள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். அவர்களின் மரணங்கள் பல புதிய போராளிகளை தோற்றுவிக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் தியாகி சிவகுமாரனின் மரணம். ஆம். அவரது மரணம் பல தமிழ் இளைஞர்களை போராட்டத்தில் ஈடுபடவைத்தது.

உன்னை ஒரு கூட்டம்

உன்னை ஒரு கூட்டம் எப்படியாவது மேலெழுந்துவிடாமல் தடுக்கிறது என்றால் அதற்காக வருத்தப்படாதே. ஏனெனில் நீ அவர்களைவிட உயரத்திற்கு செல்லப்போகிறாய் என்று அர்த்தம்.

அமெரிக்காவில் ஒரு கறுப்பர்

அமெரிக்காவில் ஒரு கறுப்பர் ஜனாதிபதியாக முடிகிறது. இங்கிலாந்தில் ஒரு இந்தியர் பிரதமராக முடிகிறது. ஆனால் இந்தியாவில் ஒரு தமிழர் இன்னும் பிரதமராக முடியவில்லை. ஒரு தெலுங்கர் பிரதமராகியிருக்கிறார். இரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட சீக்கியர்கூட பிரதமராகியுள்ளார். ஆனால் எட்டுக்கோடி மக்கள் கொண்ட தமிழ் இனத்தில் இன்னும் ஒருவர் பிரதமராக முடியவில்லை. இலங்கையில்கூட ஒரு தமிழர் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ முடியவில்லை. தேர்தலில் தோற்ற, ஒரு எம்.பி கூட ஆதரவு அற்ற ரணிலை ஜனாதிபதியாக நியமிப்பார்கள். ஆனால் 18 எம்.பிகள் கொண்ட சம்பந்தர் ஐயாவை ஜனாதிபதியாக நியமிக்க யோசனைகூட செய்ய மாட்டார்கள். ஏனெனில் சம்பந்தர் ஐயா ஒரு தமிழர் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? பத்துவருடமாக இந்திய பிரதமராக இருப்பவர் “ஒரிசாவை தமிழன் ஆளலாமா? கோயில் சாவியை திருடிய தமிழன்” என்று பேசலாம். அவரை இனவாதி என்று கூறமாட்டார்கள். ஆனால் “ஒரு தமிழனே தமிழனை ஆளவேண்டும்” என்று கூறும் சீமானை இனவாதி என்கிறார் காங்கிரஸ் தலைவர். என்னே கொடுமை இது?

இன்று தியாகி சிவகுமாரனின்

இன்று தியாகி சிவகுமாரனின் 50வது நினைவு தினம் தமிழ் மக்களுக்காக போராடி உயிர் துறந்த முதல் போராளியின் நினைவு தினம். இறக்கும் தருவாயில்கூட அவர் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் “மீண்டும் பிறப்பேன். மீண்டும் தமிழ் மக்களுக்காக போராடுவேன்” ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் இப்போது ஒரு கும்பல் உருவாகியுள்ளது. இந்த கும்பல் தியாகி சிவகுமாரனை நினைவு கூரவில்லை. மாறாக பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி இதுவரை தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்? அல்லது, இனி என்ன செய்வார் என்ற நம்பிக்கையில் இந்த கும்பல் வாழ்த்து தெரிவிக்கிறது? ஒருவேளை சிவகுமாரனும் போராடி மரணிக்காமல் இந்திய பிரதமருக்கு தேங்காய் உடைத்து வாழ்ந்திருக்க வேண்டும் என இக் கும்பல் கருதுகிறதா? சீ வெட்கம்!

பண பலம் இல்லை.

பண பலம் இல்லை. சாதி மதம் இல்லை கூட்டணி பலம்கூட இல்லை என்றாவது ஒருநாள் வெற்றி பெறுவோம் . அன்று எம் சந்ததி தலை நிமர்ந்து வாழும் என்ற அந்த ஒற்றை நம்பிக்கையை தவிர வேறு எதுவும் இல்லை. பொதுவாக அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலை பற்றி சிந்திப்பார்கள். ஆனால் இவர்கள் தமிழ் இனத்தின் அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்கின்றனர். அர்த்தமுள்ள போட்டி செய்து நம்பிக்கையை அளித்துள்ளனர். வாழ்த்துக்கள்.

பெண்கள்

பெண்கள் அதுவும் உதை பந்தாட்டத்தில் தமிழீழ அணி சார்பாக களமிறங்கியுள்ளனர். முதல் அடி எடுத்து வைத்துள்ளனர் விரைவில் அவர்களுக்கு வானம் வசப்படும் வாழ்த்துக்கள்

ஆழ்ந்த இரங்கல்கள்

•ஆழ்ந்த இரங்கல்கள் பல புலனாய்வு போராளிகளின் அர்ப்பணிப்புகள் அவர்கள் மரணம் அடையும்வரை வெளியில் தெரிவதில்லை. அதிலும் சில கரும்புலிகளின் அர்ப்பணிப்புகள் அவர்கள் மரணமடைந்த பின்பும்கூட வெளியில் தெரிவதில்லை. ஆனாலும் இப் போராளிகளின் மரணம் என்பது மாவோ கூறியபடி பெரும் பாறையை விடக் கடினமானதே.

BASTAR - The Naxal Story (இந்திப் படம்)

• BASTAR - The Naxal Story (இந்திப் படம்) இது மாவோயிச நக்சலைட் போராளிகள் பற்றிய படம். உண்மை சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் என காட்டுகிறார்கள். ஆனால் புலிகள் இயக்கம் மாவோயிச இயக்கத்தினருக்கு ஆதரவு தெரிவித்து அவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டதாக காட்டியுள்ளனர். நான் அறிந்தவரையில் நக்சலைட் அமைப்பினர் புலிகளை ஆதரித்துள்ளனர். ஆனால் புலிகள் இயக்கம் நக்சலைட் இயக்கத்தை ஆதரிக்கவும் இல்லை. உதவி செய்யவும் இல்லை. இவர்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இப்படி காட்டியுள்ளனர் என்று தெரியவில்லை. 1986ல் மட்டக்களப்பை சேர்ந்த இளைஞர் ஒருவர் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி பிஎல்எவ்ரி என்ற இயக்கத்தில் சேர்ந்து செயற்பட்டார். இவர்கள் மதுரை மேயர் முத்துவின் மகன் நல்லதம்பியுடன் சேர்ந்து மதுரையில் ஒரு வங்கியை கொள்ளை அடித்தனர். இவ் வழக்கில் மட்டக்களப்பை சேர்ந்த அந் நபரை பொலிசார் தேடிய போது அவர் ஆந்திரா சென்று நக்சலைட் அமைப்புனருடன் சேர்ந்து செயற்பட்டார். அவர்களுக்கு உதவி செய்தார். அவரும் சில வருடங்களின் பின்னர் அரசியலில் இருந்து விலகி கேரள ஆயள்வேத மருத்துவத்தில் ஈடுபாடுகொண்டார். நக்சலைட்டினர் தேச விரோதிகள் இல்லை. அவர்கள் தேச பக்தர்கள் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒருவர் நக்சலைட் என்பதற்காக அவரை கைது செய்யக்கூடாது. சுட்டுக்கொல்லக்கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனாலும் இந்திய சினிமா அவர்களை பயங்கரவாதிகள் என்று காட்டுவதோடு பொலிசார் செய்யும் அராஜகத்தை புனிதப்படுத்துகின்றன.

தோழர் சுந்தரம் நினைவுகள் நீடூழி வாழ்க!

•தோழர் சுந்தரம் நினைவுகள் நீடூழி வாழ்க! 09.06.2024 தோழர் சுந்தரம் அவர்களின் 7வது நினைவு தினம் ஆகும். தனக்கென்று வாழ்ந்து தனக்கென்று உழைப்பவன் மனிதன்! தன் வாழ்க்கையையும் தன் உழைப்பையும் பிறருக்கென்று கொடுப்பவன் மாமனிதன் - காரல் மார்க்ஸ் ஆம். மறைந்த தோழர் சுந்தரம் அவர்களும் ஒரு மாமனிதர்தான். அவர் தனக்கென்று வாழ்ந்து தனக்கென்று உழைத்தவர் அல்ல. மாறாக, இறக்கும் வரையில் தன் வாழ்க்கையையும் தன் உழைப்பையையும் மக்களுக்காக முழுமையாக அர்ப்பணித்த ஒரு புரட்சியாளர். தோழர் சுந்தரம் மாக்சிய லெனிய மாசேதுங் சிந்தனைகளை தனது வழிகாட்டியாக கொண்டவர். அவர் பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திய மக்கள் யுத்தப் பாதையை முன்னெடுத்த ஒரு புரட்சியாளர். தோழர் தமிழரசன் மறைவுக்கு பின்னர் தமிழ்நாடு விடுதலைக்காக தமிழ்நாடு விடுதலைப்படைக்கு தலைமை ஏற்று பரந்து பட்ட மக்களை அணிதிரட்ட அயராது பாடுபட்டவர். 32 வருட தலைமறைவு வாழ்க்கை. அதில் சுமார் பத்து வருடங்கள் சிறை வாழ்க்கை. எத்தனையோ வழக்குகள். சித்திரவதைகள். இத்தனைக்கும் மத்தியில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமின்றி இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர் தோழர் சுந்தரம். தோழர் சுந்தரம் ஆரம்பம் முதல் இறுதிவரை ஈழத் தமிழர்களை உறுதியாக ஆதரித்தவர். நெருக்கடியான காலகட்டத்தில் ஈழத் தமிழருக்கான தமிழக மக்களின் ஆதரவை வெளிப்படுத்தியவர். அத்தகைய தோழர் சுந்தரத்தின் மறைவு ஈழத் தமிழர்களுக்கு பேரிழப்பாகும். அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக எமது அஞ்சலிகளையும் செவ் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். தோழர் சுந்தரம் மரணமடைந்தபோது நான் எழுதிய அஞ்சலிக் குறிப்பை கீழ்வரும் இணைப்பில் வாசிக்கலாம். http://tholarbalan.blogspot.com/2017/06/blog-post_25.html

தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல வழக்கறிஞர்

தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் சுமதி அவர்கள் மலையகத் தமிழரான இந்திரஜித் அவர்களுடைய தங்குமிட மற்றும் இதர செலவுகளை பொறுப்பெடுத்து உதவியுள்ளார். யாழ்ப்பாண தமிழரான சுகன் என்பவர் மலையக தமிழர் இந்திரஜித் அவர்களுக்கு ஆடைச் செலவுகளை பொறுப்பெடுத்து உதவியுள்ளார். கடந்த முறை பங்குபற்றிய மலையக தமிரான அசானிக்கு பல புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஆதரவும் உதவியும் வழங்கியிருந்தனர். ஜி தமிழ் சரிகமப நிகழ்வில் இந்த உதவிகளை வழங்குவோருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். தமிழ் மக்கள் பிரிந்து இருக்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்வோருக்கு இந்த உதவிகள் சொல்லும் சேதி ஒன்றுதான். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் “தமிழ் இனம்” என்ற ஒருமித்த உணர்வு நோக்கி நகருகின்றனர் என்பதுதான்.

வெற்றி பெறவில்லையே

வெற்றி பெறவில்லையே என்று வருத்தப்பட தேவையில்லை ஏனெனில் இறுதிவரை போராடியதும் ஒரு வெற்றிதான். எட்டிவிடும் துரம்தான். விரைவில் வானம் வசப்படும்

இவர்கள் இந்திய அரசின்

இவர்கள் இந்திய அரசின் விசுவாச ஈழத்தமிழ் தலைவர்கள் இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். இந்திய தூதருடன் அடிக்கடி விருந்துண்டு மகிழ்பவர்கள் இவர்கள் ஏன் 40 வருடமாக அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும்படி இந்திய அரசிடம் கோருவதில்லை? அல்லது, பல வருடங்களாக சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அகதிகளை விடுதலை செய்யும்படி கோருவதில்லை? இந்தியாவில் இருக்கும் ஈழத் தமிழருக்கு உதவாத இந்திய அரசு, இலங்கை வந்து ஈழத் தமிழருக்கு தீர்வு பெற்றுத் தரும் என எப்படி இவர்கள் நம்புகின்றனர்? இன்னும் எத்தனை வருடத்திற்கு இவர்கள் இந்திய அரசை நம்பிக்கொண்டிருக்கப் போகின்றனர்? ஒரு கேள்வி – அண்ணாமலையை அழைத்து லண்டனில் உறவுப்பாலம் கட்டியவர்கள் இனி என்ன செய்யப்போகின்றனர்?

உதை உடலைத் தொடும்.

உதை உடலைத் தொடும். உரை உள்ளத்தைத் தொடும் என்பது உண்மைதான். ஆனால் சிலவேளைகளில் ஒரு நீண்ட உரையைவிட ஒரு அடி சிறந்த பாடத்தைக் கற்றுக்கொடுத்துவிடுகிறது. திமிர் பிடித்த நடிகைக்கு சிறந்த பாடத்தைப் புகட்டிய சீக்கிய பெண்ணுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

எவ்வளவு வலி நிறைந்த வார்த்தைகள்?

எவ்வளவு வலி நிறைந்த வார்த்தைகள்? தமிழர்கள் ஏன் ஆரிய மற்றும் திராவிட அரசியலை நிராகரித்து தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பதை இனியாவது புரிந்து கொள்ளட்டும்.

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை இனப்படுகொலை செய்தமையில் கலைஞருக்கும் பங்கு உண்டா? ஜெயா அம்மையார் கூறியபடி கலைஞரும் இனப்படுகொலையில் விசாரிக்கப்பட வேண்டியவரா?

செய்தி – தேர்தலை ஒத்திவைத்து

செய்தி – தேர்தலை ஒத்திவைத்து மேலும் இரண்டு வருடங்கள் பதவியில் நீடிக்க ஜனாதிபதி ரணில் முயற்சி இப்போது கேள்வி என்னவெனில் இந்த கழுதை மேலே செல்வதற்கு உதவியது யார் என்பதல்ல. இந்த கழுதையை எப்படி கீழே இறக்குவது என்பது பற்றியே

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களை

•பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களை என்றும் நினைவில் கொள்வோம்! 11.06.2024 ஜயா பெரும்சித்திரனார் அவர்களின் 29வது நினைவு தினமாகும். 1983ல் இடம்பெற்ற இனக்கலவரத்தின் பின்பே தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் ஈழப் பிரச்சனை குறித்து அறிந்திருந்தனர். ஆனால் அதற்கு முன்னரே இதனை அறிந்து உதவி செய்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் இருந்தனர். அவர்களுள் மிக முக்கியமானவர் பாவலர் ஜயா பெருஞ்சித்திரனார் அவர்கள். அவரும் அவருடைய குடும்பத்தவர்களும் ஈழத்தமிழர்கள் மீது கொண்டிருக்கும் அன்பும் செய்த உதவிகளும் என்றும் மறக்க முடியாதவை. நான் ஜயா அவர்களுடன் அதிகம் பழகவில்லை. அவருடைய மகன் தோழர் பொழிலன் அவர்களுடனே அதிகம் பழகியிருக்கிறேன். பொழிலன் அவர்களை சந்திக்க சென்ற வேளைகளில் ஜயா அவர்களுடன் பேசியிருக்கிறேன். உணவு உட்கொண்டிருக்கிறேன். அவ்வேளைகளில் ஈழப் பிரச்சனை குறித்து ஆவலுடன் கேட்பார். அவரை மிகவும் கோபக்காரர் என்று சிலர் சொல்லியிருந்தனர். தூய தமிழில் கதைக்காவிடில் ஏசுவார் என்றெல்லாம் சிலர் என்னிடம் கூறியிருந்தனர். ஆனால் இது தவறான கருத்துகள் என்பதை அவருடன் பேசும்போது கண்டு கொண்டேன். ஏனெனில் அவர் என்னுடன் பேசும்போது சினங்கொள்ளாமல் மிகவும் மென்மையாகவே உரையாடினார். தோழர் தமிழரசன் அவர்கள் சென்னை வரும் வேளைகளில் எமது இருப்பிடத்திலேயே தங்குவார். அப்போது அவர் ஜயா அவர்களை சந்தித்த விபரங்களை என்னிடம் கூறியிருக்கிறார். தமிழ்நாடு விடுதலையில் ஜயா அவர்கள் எவ்வளவு ஆர்வமாகவும் உறுதியுடனும் இருந்தார் என்பதை தோழர் தமிழரசன் அவர்களின் மறைவின் போது அவர் எழுதிய அஞ்சலிக் கவிதையில் இருந்து தெரிந்து கொண்டேன். இன்றும்கூட சிலர் சட்டத்திற்கும் சிறைக்கும் பயந்து தமிழ்நாடு விடுதலை பற்றியோ அல்லது தோழர் தமிழரசன் பற்றியோ பேச தயங்கும் நிலையில் அன்று உறுதியாக ஆதரித்து குரல் கொடுத்தவர் ஜயா பெருஞ்சித்திரனார். அவரிடம் சென்று பழகாத ஈழப்போராளி தலைவர்களே இல்லை என்று கூறுமளவுக்கு ஆரம்பத்தில் அனைத்து போராளிகளும் அவரிடம் பழகியுள்ளனர். அவரும் அனைவருக்கும் தன்னால் இயன்ற உதவிகள் செய்தார் என்பதும் மறுக்கவோ, மறக்கவோ முடியாத உண்மைகள். முதல் பெண் போராளி ஊர்மிளாவுக்கு நெருக்கடியான நேரத்தில் ஜயா அவர்களே தனது வீட்டில் நீண்ட நாட்கள் வைத்து பாதுகாத்து அனுப்பினார். ஜயா அவர்கள் ஈழத் தமிழர் மீது கொண்டிருந்த அக்கறை, அனுதாபம, செய்த உதவிகள் மறக்க முடியாதவை. ஈழத் தமிழர்கள் ஜயா அவர்களை என்றும் நினைவில் கொள்வார்கள்

உமா மகேஸ்வரன் முன்வைத்த

உமா மகேஸ்வரன் முன்வைத்த தமிழீழத்தை கைவிட்டவர்கள் உமா மகேஸ்வரன் முன்வைத்த ஆயுதப் போராட்டத்தை கைவிட்டவர்கள் உமா மகேஸ்வரனுக்கு சிலை வைக்கிறார்கள். பரவாயில்லை. உமா மகேஸ்வரன் கொலையில் இந்திய உளவுப்படையின் பங்கு என்ன என்பதையாவது சிலையின் கீழ் குறிப்பிடுவார்களா?

செய்தி – ஊழலற்ற சிறந்த அரச

செய்தி – ஊழலற்ற சிறந்த அரச நிர்வாகத்தை நாம் உருவாக்குவோம் - நாமல் ராஜபக்சா காட்டு ராஜாவாக தன்னை தெரிவு செய்தால் தாவரங்களை மட்டுமே உண்பேன் என நரி கூறினால் அது எந்தளவு நம்பகத்தன்மை கொண்டதோ அதே போன்றதே மகிந்த கும்பலின் இந்த ஊழலற்ற நிர்வாக வாக்குறுதியும். எற்கனவே பதவியில் இருந்து மக்கள் பணத்தை சுருட்டிய இக் கும்பல் மீண்டும் ஏதேனும் வழியில் பதவிக்கு வந்துவிட முயல்கிறது. இக் கும்பல் கைது செய்யப்பட்டு கொள்ளையடித்த மக்கள் பணம் யாவும் பறிமுதல் செய்ய வேண்டும்.

நீங்கள் இன்று இருக்கும்

நீங்கள் இன்று இருக்கும் நிலை குறித்து கவலையோ வேதனையோ அடைய வேண்டாம். வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். நம்ப முடியவில்லையா? இதோ உதாரணம்😂😂 குறிப்பு - இது ஒரு ரிலாக்ஸ் பதிவு

ஐயா!

ஐயா! உங்கள் உணர்வுகளுக்கு நன்றி. தமிழீழம் எடுப்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் மோடியிடம்கூறி இந்தியாவில் 40 வருடமாக அகதியாக உள்ள ஈழத் தமிழருக்கு குடியுரிமை கிடைக்க வழி செய்யுங்கள். சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை பெற வழி செய்யுங்கள். முதலில் உங்கள் மண்ணில் உங்கள் கண் முன்னே அல்லல்படும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு உதவுங்கள்.

சுரங்கத்தில் சிக்கினவங்களைக்கூட

"சுரங்கத்தில் சிக்கினவங்களைக்கூட மீட்டுட்டாங்க ஒரு வருடமாச்சு. உங்களால பக்கத்தில புழல்ல இருந்து என்னை மீட்க முடியவில்லை" 😂😂 ஒரு டவுட்! எதற்கு செந்தில் பாலாஜி சிறையில் வாட வேண்டும்? பேசாம சுருட்டிய பணம் எல்லாம் யாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதை கூறிவிட்டு வெளியில் வரலாமே.

வேட்டையின் நுட்பம்

வேட்டையின் நுட்பம் அதன் இலக்கில் இல்லை. அதற்கான காத்திருத்தலில்தான் இருக்கிறது.

பாகிஸ்தான் எதிரி நாடு.

பாகிஸ்தான் எதிரி நாடு. ஆனாலும் சீக்கிய இனத்தை கேவலமாக கிண்டல் அடித்த பாக்கிஸ்தான் வீரர் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்திய பிரதமரும் உள்துறை அமைச்சரும் இந்திய தமிழர்களை “திருடர்கள்” என கேவலப்படுத்தியுள்ளனர். சீக்கிய இனம்போல் தமிழ் இனம் ஏன் தம்மை கேவலப்படுத்துவோருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை? அந்தளவுக்கு இனஉணர்வு அற்று அடிமையாக வீழ்ந்து கிடக்கின்றதா தமிழ் இனம்?

எழுத்தாளன் என்பவன் தான்

எழுத்தாளன் என்பவன் தான் எழுதுவதைவிட சிறந்தவனாக இருக்க வேண்டும் என்றார் ரஸ்சிய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி. ஆம். அவர் அப்படி இருந்தமையினால்தான் இன்று உலகம் போற்றும் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக இருக்கிறார். எதிர்வரும் 18ம் திகதி மார்க்சிம் கார்க்கியின் நினைவு தினமாகும்(18.06.1936). இவர்தான் உலகில் அதிக மொழிகளில் வெளியிடப்பட்ட புரட்சிகர “தாய்” நாவலை எழுதியவர். அன்றைய ரஸ்சிய ஜார் மன்னரின் மாளிகையை நோக்கி சுமார் இரண்டாயிரம் மக்கள் அடிப்படை வாழ்வுரிமை கோரி ஊர்வலமாகச் சென்றனர். ஜாரின் பாதுகாப்புப்படை அவர்களை சரமாரியாகச் சுட்டது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தப்பிப் பிழைத்தவர்களில் கார்கியும் ஒருவர். அந்த நிகழ்ச்சி கார்கியின் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது. தப்பிப்பிழைத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் கார்கி பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். இந்நிலையில் ரஷ்யப்புரட்சியாளர் லெனினின் தொடர்பு கார்க்கிக்கு ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். லெனின் புரட்சிக்கு நிதி சேகரிக்க வேண்டி கார்கியை அமெரிக்காவுக்கு அனுப்பினார். அங்கு தான் உலகப் புகழ்பெற்ற தாய் நாவலை அவர் எழுதினார். இன்று ரஸ்சிய பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ள தாய் நாவலை எழுதிய கார்கி பள்ளிக்கூடமே சென்றதில்லை. அப் புகழ் பெற்ற இலக்கியவாதியான கார்க்கி கூறுகிறார் “ போராட துணிந்த ஒருவனுக்கு உதவுவதாகவே இலக்கியவாதியின் எழுத்து இருக்க வேண்டும்” ஆனால் இப்போது சில இலக்கியவாதிகளின் எழுத்துகள் போராட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கு உதவவில்லை. மாறாக போராடியவர்களை இகழ்வு செய்கிறது. இவர்கள் இலக்கியவாதிகள் அல்லர். இவர்கள் இலக்கிய வியாதிகள்.

காணிக்கை என்பது மனிதனுக்கு

காணிக்கை என்பது மனிதனுக்கு தலை மயிராகவும் ஆடு கோழிகளுக்கு தலையாகவும் இருக்கிறது. ஏன் காணிக்கை மனிதனுக்கு தலையாகவும் ஆடு கோழிகளுக்கு மயிராகவும் இல்லை? ஏனெனில் காணிக்கையை தீர்மானித்தது கடவுள் இல்லை , மனிதனும் அவன் மதமும்தான். ஆம். பலிபீடங்களில் எப்போதும் ஆடுகளே வெட்டப்படுகின்றன, சிங்கங்கள் அல்ல.

என்னை துரோகி என்று

என்னை துரோகி என்று அழைத்தாலும் அஞ்ச மாட்டேன். தமிழ் பொது வேட்பாளரை எதிர்ப்பேன் - சுமந்திரன். கீழே உள்ள படத்திற்கான விளக்கம் - இது நாயின் தவறு இல்லை. நாயை அந்த இடத்தில் உட்கார வைத்தவர்களின் தவறு.

பொதுவாக ஒருவர் ஒரு நாட்டில்

•பொதுவாக ஒருவர் ஒரு நாட்டில் தொடர்ந்து 7 வருடங்கள் வாழ்ந்தால் அவருக்கு குடியுரிமை வழங்கப்டுவது வழமை. •ஒருவர் அந்த நாட்டில் திருமணம் செய்தால் அதன் மூலமும் குடியுரிமை வழங்கப்படுவது வழமை. •ஒரு குழந்தை எந்த நாட்டில் பிறக்கின்றதோ அந் நாட்டில் அக் குழந்தையும் அதன் பெற்றோரும் குடியுரிமை பெற்றுக்கொள்ளலாம். •ஒருவர் சிறந்த கல்வி பெற்றால் அதன் மூலமும் சில நாடுகளில் குடியுரிமை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்தியாவில் 34 வருடங்கள் வாழ்ந்துவரும் ஈழத் தமிழ் அகதி கஜேந்திரனுக்கு குடியுரிமை வழங்க இந்திய அரசு மறுக்கிறது. கஜேந்திரன் கல்வியில் கணிதத்தில் இளங்கலைப்பட்டமும் வர்த்தகத்தில் முதுநிலைப்பட்டமும் பெற்றுள்ளார். கஜேந்திரன் இந்திய பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் 9 வயதில் மகன் உண்டு. கஜேந்திரன் ஒரு இந்து. அவர் திருமணம் செய்த பெண் இந்து. அவர் மகனும் இந்து. பாகிஸ்தானில் இருந்து வரும் இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் இந்திய அரசு, ஈழத் தமிழ் அகதி இந்துவாக இருந்தும் குடியுரிமை வழங்க மறுக்கிறது. கஜேந்திரன் தனக்கு குடியுரிமை வழங்குமாறு 2017ல் விண்ணப்பித்துள்ளார். கடந்த 7 வருடங்களாக இந்திய அரசு தனது விண்ணப்பத்தை பரிசீலிக்காததால் அவர் வேறு வழியின்றி நீதிமன்றத்தை நாடியுள்ளார். கஜேந்திரனின் பெயர் தமிழக அரசின் அகதி குறிப்பேடுகளில் கஜேந்திரகுமார் என இருப்பதாக இந்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குடியுரிமை வழங்காததுடன் அதற்கு ஒரு நகைப்புக்குரிய காரணத்தையும் வெட்கமின்றி இந்திய அரசு கூறியுள்ளது. அவருடைய பெயரை சரி பார்த்து உடன் அவர் மனுவை பரிசீலிக்குமாறு நீதிமன்றம் இந்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இப்போதாவது இந்திய அரசின் ஈழத் தமிழர் மீதான அக்கறை என்ன என்பதை தமிழ் மக்கள் உணர்ந்துகொள்வார்களா?

முட்டி போட்டு உயிர் வாழ்வதை

முட்டி போட்டு உயிர் வாழ்வதை விட எழுந்து நின்று சாவது மேலானது- சேகுவாரா 14.06.24 தோழர் "சே" யின் பிறந்த தினமாகும். அவர் கையில் கிட்டார் இருந்தபோதும் சரி அவர் கையில் துப்பாக்கி இருந்தபோதும் சரி அவை எப்போதும் மக்களுக்காகவே இயங்கின. அவர் பல கருத்துக்களை கூறியிருந்தபோதும் தமிழ் மக்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான கருத்து “ அடிமையாக விழுந்து கிடப்பதைவிட எழுந்து நின்று போராடி மடிவதே மேல்” என்பதாகும். எமக்கு என்று ஒரு தொன்மையான மொழி உண்டு , எமக்கு என்று ஒரு கலை கலாச்சாரம் மற்றும் பண்பாடு உண்டு , எமக்கு என்று நாம் செறிந்து வாழும் ஒரு நிலப் பரப்பு உண்டு , எமக்கென்று பொருளாதார வளமும் இயற்கை வளமும் கூட உண்டு, இருந்தும் எம்மை நாமே தீர்மானிக்கும் ஆட்சி எம்மிடம் இல்லை ஏனெனில் நாம் அடிமையாக வீழ்ந்து கிடக்கிறோம். போர்த்துக்கேயரை எதிர்த்து போராடிய நாம் ஒல்லாந்தரை எதிர்த்து போராடிய நாம் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய நாம் இன்று ஏன் போராடாமல் வீழ்ந்து கிடக்கிறோம்? ஏனெனில் நாம் “அடிமை” என்பதை உணராமல் இருக்கிறோம். எமக்கு தேவை அடுத்த வருடம் தீர்வு வரும் என்று ஏமாற்றும் தலைவர் அல்ல எமக்கு தேவை இந்தியாவின் உதவியுடன் தீர்வு வரும் என்று கூறும் தலைவர் அல்ல. எமக்கு தேவை அடிமையாக கிடக்கிறாய். எழுந்து நின்று போராடு என்று கூறும் ஒரு தோழர் சே

அதிசயம். ஆனால் உண்மை

•அதிசயம். ஆனால் உண்மை சிறப்புமுகாமில் உயிரோடு இருக்கும் கந்தன் என்ற ஈழத் தமிழ் அகதி விடுதலை கோரி அனுப்பிய மனுவிற்கு “ மனுதாரர் இறந்துவிட்டதால் மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என பதில் அவருக்கே அனுப்பப்பட்டுள்ளது. அதுவும் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவில் இருந்து இப் பதில் அனுப்பப்ட்டுள்ளது. அரசின் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒருவர் இறந்துவிட்டதாக கூறி அவருக்கே கடிதம் அனுப்பிய அதிசயம் நடந்துள்ளது.

ஆடுகள் எப்போதும் ஓநாயையே நம்புகின்றன!

•ஆடுகள் எப்போதும் ஓநாயையே நம்புகின்றன! இத்தனை அழிவுக்கு பின்னரும் இத்தனை அழிவிற்கும் காரணமான இந்திய அரசு உதவும் என்று இன்னமும் நம்மில் சிலர் நம்புகின்றனர். அதுவும் நாங்கள் இந்து என்று சொன்னால் இந்திய இந்து அரசு உதவும் என்றுகூட சிலர் நம்புகின்றனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் பாஜக தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணம் வந்தார். அப்போது , வடக்கும் கிழக்கும் இந்திய பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் கூறினார். அவர் குறிப்பிட்ட அந்த பிரதேசத்தில்தான் சிங்கள அரசு இந்து கோயில்களை அழித்துவிட்டு புத்த விகாரைகளைக் கட்டுகிறது. அவர் குறிப்பிட்ட அந்த தமிழர் பிரதேசத்தில்தான் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை சிங்கள அரசு நடத்துகிறது. கச்சதீவில் வைக்கப்பட்ட புத்தர் சிலையை பாப்பரசர் மூலம் மன்னார் ஆயரால் நீக்க முடிகிறது. ஆனால் இந்து ஆலயங்களை அழித்துவிட்டு புத்த விகாரை கட்டப்படுவதை இந்திய பிரதமர் மூலம் அண்ணாமலையால் நிறுத்த முடியவில்லை. மாறாக தமிழின அழிப்பை மேற்கொள்ளும் சிங்கள அரசுக்கு இந்திய அரசானது கடன்களையும் உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந் நிலையில் லண்டனில் சிலர் அண்ணாமலையை அழைத்து உறவுப்பாலம் கட்டினார்கள். இதுவரை சம்பந்தர் ஐயா கட்டிய ஈழ இந்திய உறவுப்பாலத்தால் ஈழத் தமிழர் பெற்ற நன்மைகள் என்ன? இந்நிலையில் சம்பந்தர் ஐயாவைவிட அப்படி என்ன பெரிய பாலத்தை இந்த லண்டன் தமிழ் அமைப்பினரால் கட்டிவிட முடியும்? குறைந்த பட்சம் இந்தியாவில் 40 வருடங்களாக அகதிகளாக இருப்பவர்களுக்கு இவர்களால் குடியுரிமை பெற்றுக் கொடுக்க முடியுமா? அல்லது, சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளையாவது விடுதலை செய்ய முடியுமா? இதுவரை சம்பந்தர் ஐயா இந்திய தூதரை அடிக்கடி சந்தித்து வந்தார். இப்போது சுமந்திரன் சந்திக்க ஆரம்பித்திருக்கிறார். இந்த சந்திப்புகளால் இதுவரை இவர்கள் பெற்ற தீர்வு என்ன? இவர்கள் எந்த அடிப்படையில் தொடர்ந்தும் இந்திய அரசை நம்பி வருகின்றனர்?

தகுதியான வேட்பாளர்

தகுதியான வேட்பாளர் அர்த்தமுள்ள போட்டியை கொடுப்பார் வாழ்த்துக்கள் இந்த தேர்தலுடன் “நாம் தமிழர்” இருக்காது என்றார்கள் ஆனால் இவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தமது வாக்கு வங்கியை அதிகரித்துக்கொண்டே செல்கிறார்கள் இதுவரை இவர்கள் வெற்றிபெறவில்லை என்பது உண்மைதான். ஆனால் வெற்றி இவர்களுக்கு ஒருநாள் எட்டிவிடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்கள்.

கேளுங்கம்மா உங்களுக்கு என்ன வேணும்

“கேளுங்கம்மா உங்களுக்கு என்ன வேணும்?” “ஆரல்வாய் மொழிக் கோட்டையிலே ஆழாக்கு உழக்கு நெல்லுக்கு ஏழு வாழைப்பழம். இதை உங்க வாயால கேட்கணும் சார்” “நீ உன் வோட்டை நாம் தமிழருக்கே போட்டுக்கோம்மா” 😂😂 (படித்ததில் ரசித்தது) கலைஞர் குடும்பத்தினர் வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள் என தமிழிசை கூறியிருந்தார். அவரது கூற்றை கலைஞர் குடும்பத்தில் இருந்து ஒருவர்கூட இதுவரை மறுக்கவில்லை. அப்படியென்றால் கலைஞர் தமிழரில்லை என்பது உண்மைதானா? அதனால்தானா அவர் சோனியாவுடன் சேர்ந்து ஈழத்தில் தமிழினப் படுகொலைக்கு துணை போனார்?

நல்ல காலம் பிறக்குது

நல்ல காலம் பிறக்குது தமிழருக்கு நல்ல காலம் பிறக்குது ஜக்கம்மா சொல்லிட்டா இந்திய தூதர் சொல்லிட்டார் ரணில் சொல்லிட்டார் சஜித் சொல்லிட்டார் அநுரா சொல்லிட்டார் தமிழ் பொது வேட்பாளர் வேண்டாம்

அகதியாக கனடா சென்ற ஈழத் தமிழர்

அகதியாக கனடா சென்ற ஈழத் தமிழர் விதுஷா இலங்கநாதன் மருத்துவம் படித்து கடந்த ஆண்டிற்கான சிறந்த இளம் பார்வை மருத்துவருக்கான விருது பெற்றார். அகதியாக இந்தியா சென்ற ஈழத் தமிழர் நந்தினி உரிய புள்ளிகள் பெற்றும் அகதி என்பதால் மருத்துவ கல்வி மறுக்கப்பட்டார். கனடா ஈழத் தமிழ் அகதிகள் மீது காட்டும் இரக்கத்தை இந்திய அரசு ஏன் காட்ட மறுக்கிறது என்று கேட்டால், இந்திய பிரதமரைக் கொன்றதுபோல் கனடா பிரதமரையும் கொன்றிருந்தால் தெரிந்திருக்கும் என்று சில நியாயவான்கள் பதில் அளிக்கின்றனர். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது 1991ல். ஆனால் 1983 முதல் அகதிகள் இப்படித்தான் நடத்தப்படுகின்றனர் என்பதை இந்த நியாவான்களுக்கு எப்படி புரியவைப்பது? சரி. இவர்களது வாதப்படி பார்த்தாலும் இந்திரா காந்தியைக் கொன்றதற்காக முழு சீக்கிய இனமும் பழி வாங்கப்படுகிறதா, இல்லையே? இனியாவது ஈழத் தமிழ் அகதிகள் மருத்துவ கல்வி கற்க தமிழக முதல்வர் வாய்ப்பு அளிப்பாரா?

தன்னை "தமிழின தலைவர்" என்றவர்

தன்னை "தமிழின தலைவர்" என்றவர் ஈழத் தமிழர் அழிந்தபோது நடித்தார். ஆனால் ஒரு நடிகர் ஈழத் தமிழர் விடயத்தில் நடிக்கவில்லை. மாறாக தான் இறந்தபின்பு தன் உடலில் புலிக்கொடி போர்த்தப்பட வேண்டும் என விரும்பினார் புலிகள் பலமாக இருந்த காலத்தில் புலிகளுடன் சேர்ந்திருந்து படம் காட்டிய சில தலைவர்கள் நெருக்கடியான இறுதி நேரத்தில் பேச முனைந்தபோது தொலைபேசியை அணைத்துவிட்டு உறங்கினார்கள் ஆனால் அவர்களுக்கு மத்தியில் தான் இறந்தால் தனக்கு புலிக்கொடியை போர்த்த வேண்டும் என தைரியமாக அறிவித்தவர் மணிவண்ணன்

நம்மிடம் பலம் இருப்பதை

நம்மிடம் பலம் இருப்பதை உணர்ந்தால் காண்டா மிருகத்தைக்கூட துரத்தலாம் காண்டாமிருகம் போல் பலம் இருந்தும் அதை உணராவிட்டால் கண்ட கண்ட நாயும் நம்மைத் துரத்தும் உலகம் முழுவதும் தமிழர்கள் எட்டு கோடிக்கு மேல் இருக்கின்றனர். ஆனால் சிங்களவர்கள் இரண்டு கோடி பேர் மட்டுமே இருக்கின்றனர். ஆனாலும் இரண்டு நாளில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொல்லும் தைரியம் சிங்கள மகிந்த ராஜபக்சாவுக்கு எப்படி வந்தது? ஏனெனில் சிங்களவர்களுக்கு ஒரு நாடும் அரசும் இருக்கின்றது. ஆனால் தமிழர்கள் உலகம் முழுவதும் அடிமையாகவே இருக்கின்றனர். நாடு ரீதியாக, சாதி ரீதியாக, மத ரீதியாக, பிரதேச ரீதியாக பிரிந்து கிடக்கும் தமிழன் எப்போது இனரீதியாக ஒன்றுபடப்போகின்றான்?

வளர்ந்த மரத்தை பாதியில்

வளர்ந்த மரத்தை பாதியில் தறித்து வீழ்த்திவிட்டு அது பட்டுவிட்டது என்று நினைத்திருப்பர். ஆனால் அதன் ஆழமான வேர்களோ தக்க தருணத்திற்காக காத்து கிடக்கும். சிறுதுளி ஈரம் கண்டவுடன் துளிர்த்து எழும். அதன் பிஞ்சு இலைகள் காற்றில் ஆடும்போது “வீழ்வேன் என்று நினைத்தாயோ” என கேட்பதுபோல் இருக்கும். தமிழர் புலம்பெயர்ந்ததை பலவீனம் என்று சிலர் கூறினார்கள். அதையே பலமாக மாற்றிக் காட்டுகின்றனர் அடுத்த சந்ததியினர். கனடாவுக்கு அகதியாக சென்ற ஈழத் தமிழ்பெண் சட்டம் படித்து பட்டமளிப்பு விழாவில் தமிழின படுகொலை பற்றி பேசியிருக்கிறார். அடுத்த சந்ததி பேச ஆரம்பித்துவிட்டது. இனி உலகம் கேட்டுத்தான் ஆக வேண்டும். வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

ஈழ விடுதலைப் போராட்ட

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு சாட்சி மறைந்துவிட்டது. மருத்துவர் ஜெயகுலராசா மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்

சமஷ்டி அடிப்படையில்

சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரம் தமிழர்களுக்கு வேண்டும் - ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சம்பந்தனின் செய்தி படம்- இதுவரை சம்பந்தர்ஐயா சுட்ட வடைகள்.

தந்தையர்தின வாழ்த்துக்கள்

•தந்தையர்தின வாழ்த்துக்கள் காத்திருப்பு நீள்கிறது தவிப்பு தொடர்கிறது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை இவர்கள் எப்போது காணப்போகிறார்கள்?

மேடம்! ஜனாதிபதி வேட்பாளர்களிடம்

மேடம்! ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சமஷ்டி தீர்வை வலியுறுத்தலாமா? மிஸ்டர் சம்பந்தன்! இன்னொரு குவாட்டர் தரட்டுமா? 😂😂

எமது தலைவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில்

எமது தலைவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக யாரும் தவறாக எண்ணிவிட வேண்டாம். அவர்கள் பொது வேட்பாளரை நிறுத்துவதா? அல்லது ரணிலை ஆதரிப்பதா? அல்லது சஜித்தை ஆதரிப்பதா? என ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள் என்று நம்புவோம்.

பிரித்தானியாவுக்கு அகதியாக வரும்

பிரித்தானியாவுக்கு அகதியாக வரும் ஈழத்தமிழர்கள் குடியுரிமை பெற்று தாம் விரும்பும் கல்வியை கற்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பிரித்தானிய மருத்துவ கல்லூரிகளில் சுமார் 15% மான தமிழ் மாணவர்கள் இருப்பதாக மிச்சம் தொகுதி எம்பி சிரோன் தெரிவித்துள்ளார். தமிழர்கள் தமது கடின உழைப்பு மூலம் முன்னேறுவதுடன் நாட்டுக்கு சிறந்த சேவை ஆற்றி வருவதாகவும் அவர் பாராட்டியுள்ளார். ஆனால் இந்தியாவுக்கு சென்ற ஈழத்தமிழர்கள் 40 வருடமாக அகதியாகவே வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவ கல்வி பெற முடியவில்லை. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டிற்கு சென்ற இவ் ஈழத் தமிழர் நிலை எப்போது மாறும்?

அடுத்து ஆட்சி அமைக்கும்

அடுத்து ஆட்சி அமைக்கும் என கருதப்படும் லேபர் கட்சி சார்பில் இரு தமிழர்களுக்கு அதுவும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இன்னும் இரண்டு வாரத்தில் பாராளுமன்றத்தில் தமிழ் ஒலிக்கப்போகிறது என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தோன்றியுள்ளது. தாம் ஆட்சிக்கு வந்தால் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க வழி செய்வோம் என லேபர் கட்சி வாக்குறுயளித்துள்ளது. கனடாவில் ஈழத் தமிழர் எம்பி ஆக இருக்கிறார்கள். பிரிட்டனில் எம்.பியாகப் போகிறார்கள். இந்தியாவில் 40 வருடமாக அகதியாக இருப்பவர்களுக்கு எப்போது குடியுரிமை கிடைக்கும்?

செய்தி - வேற்று கிரகவாசிகள் மாறுவேடத்தில்

செய்தி - வேற்று கிரகவாசிகள் மாறுவேடத்தில் இந்த பூமியில் மனிதர்களுடன் மனிதர்களாக வாழக்கூடும் என அமெரிக்க ஹவார்ட் பல்கலைக்கழகம் தெரிவிப்பு. சம்பந்தர் - மேடம்! பிளீஸ் நம்புங்க. சத்தியமா அந்த ஏலியன் நானில்லை. சந்திரிக்கா – மிஸ்டர் சம்பந்தன்! குடிச்சா போய் குப்பற படுக்க வேண்டும்.சும்மா உளறக்கூடாது. சம்பந்தர் - நோ நோ மேடம்! இம்முறை தீர்வு தரவில்லை என்றால் நாம் வெளியக சுயநிர்ணய உரிமை கேட்போம் சந்திரிகா – தாராளமாக கேட்கலாம். ஆனால் அப்புறம் சொகுசு மாளிகையில் இருந்து வெளியேறவேண்டி வரும் பரவாயில்லையா? சம்பந்தர் - சே சே ஏன் மேடம் சீரியஸாக எடுக்கிறீங்க? சுயநிர்ணய உரிமை வேண்டுமென்று சும்மா அறிக்கைதான் விடுவோம். 😂😂

2009க்கு பின்னரான தமிழ் மக்களின்

“2009க்கு பின்னரான தமிழ் மக்களின் அவலத்திற்கு சம்பந்தர், மாவை சேனாதிராசா போன்ற வயதான தலைவர்களே காரணம். அதற்கு அவர்கள் பொறுப்பு கூறவேண்டும்” - சுமந்திரன் கரடியே காரித்துப்பிடிச்சு. இதற்கு சம்பந்தர் மாவை போன்றவர்கள் என்ன பதில் கூறப்போகின்றனர்? 😂😂

4பேரை கொல்ல உத்தரவிட்ட

4பேரை கொல்ல உத்தரவிட்ட ஆஷ் துரையைக் கொன்று தானும் மரணமடைந்த வாஞ்சிநாதனை தியாகி என்கிறது இந்திய அரசு. ஜீன் மாதம் 17 திகதி வீரவணக்க நிகழ்வு நடத்துகிறது. ஆனால் 10000 தமிழர்களை கொல்ல உத்தரவிட்ட ராஜிவ் காந்தியை கொன்று தானும் மரணமடைந்த தானுவை பயங்கரவாதி என்கிறது. இது என்ன நியாயம்?

ரயில்டிக்கட் எடுக்கக்கூட

ரயில்டிக்கட் எடுக்கக்கூட வசதி இன்றி வந்தவர் 45000கோடிரூபாவை சுருட்டிவிட்டு தன்னை தமிழின தலைவர் என்றார் சினிமாவில் நடிக்க வந்தவர் 30000கோடி ரூபாவை சுருட்டிவிட்டு தன்னை புரட்சிதலைவி என்றார் இவர்கள் மத்தியில் ஒரு பைசாகூட சுருட்டாமல் எளிமையாக வாழ்ந்த கக்கன் நினைவுகூரப்பட வேண்டியவரே

சிறுமி – அங்கிள்! நீங்கள் நல்லவரா? கெட்டவரா?

சிறுமி – அங்கிள்! நீங்கள் நல்லவரா? கெட்டவரா? சுமந்திரன் - ஏனம்மா அப்படி கேட்கிறே? சிறுமி – மாவை அங்கிள் உங்களை போக்கிலி என்று திட்டுறாரே. சுமந்திரன் - அவர் பொய்யர். நானும் அவரை போக்கிலி என்று திட்டியிருக்கிறேனே. சிறுமி- இப்படி மாறி மாறி திட்டவா உங்களை தெரிவு செய்தாங்க? எப்பதான் எங்களைப் பற்றி அக்கறைப்படுவீங்க?

திருடன் என்ற கருத்து

"திருடன் என்ற கருத்து இல்லாதொழிக்கப்படும்" - நாமல் ராஜபக்சா நாலு திருடர் ஒன்று சேர்ந்து தம்மை பொலிஸ் என்றார்கள். அப்புறம் இனி தம்மை பொலிஸ் என்றே அழைக்க வேண்டும் என்றார்கள்.

விளையாட்டுப்பிள்ளை ?

•விளையாட்டுப்பிள்ளை ? தமிழ் மக்களுக்கு கிரிக்கட் மைதானம் இல்லை என்பதுதான் பிரச்சனையா? தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்பதுகூட சஜித் பிரேமதாசாவுக்கு தெரியவில்லை என்பது ஆச்சரியம் இல்லை. மாறாக, இந்த சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கும்படி சில தமிழ்த் தலைவர்களால் எப்படி கேட்க முடிகின்றது என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

1948க்கு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு

1948க்கு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் பிரதமர் தானே என முன்னாள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். அத்துடன் பிரித்தானியாவில் கடின உழைப்பு மூலம் சிறந்த சேவையாற்றி வரும் ஈழத் தமிழர்களின் வெற்றிக்கதை என்றும் பாராட்டியுள்ளார். இந்தியாவில் 40 வருடமாக அகதியாகவே வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் நிலை மாற தமிழக முதல்வர் வழி செய்வாரா?

கடவுளுக்கு பணம் தேவையில்லை

கடவுளுக்கு பணம் தேவையில்லை என்று தெரிந்தும் கோவிலில் உண்டியல் வைப்பது ஆத்திகம் அந்த உண்டியலை கடவுளால் காப்பாற்ற முடியாது என்று தெரிந்து பூட்டு போடுவது நாத்திகம். ஆக, ஆத்திகம் பேசுபவர்களுக்குள்ளும் நாத்திகம் இருக்கிறது என கூறலாமா? சரி அதைவிடுவம். ஆனால் ஒரு சந்தேகம்! கோவிலில் இருக்கும் சிலையை கடவுள் என்கிறார்கள். ஆனால் அந்த சிலை திருடுபோனால் கடவுள் திருட்டு போய்விட்டது என கூறுவதில்லை. சிலை திருடு போய்விட்டது என்கிறார்கள். அது ஏன்? ஒரு குறிப்பு - எல்லாம் கடவுள் விதிப்படியே நடக்கிறது என்று நம்புவோரும் வீதியைக் கடக்கும்போது கடவுள் விதியை நம்புவதில்லை. வீதியில் உள்ள சிக்னல் விதிகளையே நம்பி கடக்கின்றனர். இல்லையா?

கனடா சென்ற ஈழத் தமிழ் அகதிகள்

கனடா சென்ற ஈழத் தமிழ் அகதிகள் குடியுரிமை பெற்று வாழ்கிறார்கள். லண்டன் சென்ற ஈழத் தமிழ் அகதிகள் குடியுரிமை பெற்று வாழ்கிறார்கள். ஆனால் இந்தியா சென்ற ஈழத் தமிழ் அகதிகள் 40 வருடமாக அகதியாகவே வாழ்கின்றனர். பாகிஸ்தான் நாட்டில் இருந்து வரும் இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் இந்திய அரசு ஈழத் தமிழர் இந்துக்களாக இருந்தும் குடியுரிமை வழங்க மறுக்கிறது. இந்தியாவில் எட்டுக்கோடி தமிழர் இருந்தும், அவர்களுக்கு தமிழ்நாடு அரசு என்ற மாநில அரசு இருந்தும் , அவர்களை நம்பிச் சென்ற தொப்புள்கொடி உறவுகளுக்கு ஏன் இந்த நிலை? இந்த ஈழத் தமிழரின் அகதிநிலை எப்போது மாறும

சிங்களவர்கள் திராவிடர்

“சிங்களவர்கள் திராவிடர்களே” - ஈழத்து தாய்லாமா விக்கினேஸ்வரன் தெரிவிப்பு

குருந்தூர்மலை பகுதியில் நீதிமன்றத்தின்

குருந்தூர்மலை பகுதியில் நீதிமன்றத்தின் அனுமதியை மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு அதிரடிபடையினரின் விசேட பாதுகாப்புடன் பிக்குகள் குழுவினர் பாதயாத்திரை ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு மதுராந்தகத்தில்

கடந்த ஆண்டு மதுராந்தகத்தில் கள்ளசாராய சாவு 18. இந்த ஆண்டு கள்ளக்குறிச்சியில் கள்ள சாராய சாவு 40. தமிழக முதல்வர் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை ஆம். சவுக்கு சங்கரும் அவருடைய பேட்டியை வெளியிட்ட ஊடகவியலாளரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு.

தோல்வி நிலையென நினைத்தால்

“தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ நினைக்கலாமா” ஜி டிவி சரிகமப நிகழ்வில் இந்த வாரம் இப் பாடலை புலம்பெயர் ஈழத் தமிழர் சாரங்கா பாடியுள்ளார். சாரங்காவை இப் பாடலை பாடவைத்து அதன் மூலம் ஈழத் தமிழர்கள் பட்ட வலிகளை பேச வைத்துள்ளது ஜீ டிவி. டிவி நிறுவனம் தனது ரேட்டிங்க்காக இதை செய்திருந்தாலும் இதன் மூலம் எமது வலிகள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுவது வரவேற்கத்தக்கதே. எழுச்சிப்பாடகர் சாரங்காவுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

ஈழத்து கருணாநிதி ?

• ஈழத்து கருணாநிதி ? தனக்கு வயதாகிவிட்டது. அதனால் அரசியலுக்கு வரவில்லை என்று 70 வயது ரஜனி கூறுகின்றார். ஆனால் “விரைவில் தீர்வு வரும்” என்ற வெறும் மூன்று சொற்களை மட்டும் வைத்துக்கொண்டு 90 வயதிலும் அரசியலை விடாமல் இருக்கிறார் சம்பந்தர் ஐயா. கடந்த 15 ஆண்டுகளான இரண்டாம் முள்ளிவாய்க்காலுக்கு இந்த வயதானவரே பொறுப்பு கூறவேண்டும் என்று சுமந்திரன் கூறியுள்ளார். அதற்கும்கூட இதுவரை இவர் வாய் திறக்கவேயில்லை. பதில் கூறவில்லை. பதவி விலகவும் இல்லை. பாவம் தமிழ் மக்கள்

என்னது ,

என்னது , திருவள்ளுவருக்கு கள்ளக்காதலியா? என்னடா இது, திருவள்ளுவருக்கு வந்த சோதனை! 😂😂

பத்மநாபா !

பத்மநாபா ! பத்மநாபா எளிமையானவர் , பத்மநாபா நல்லவர் என்றெல்லாம் எழுதி நாபாவை தெரிய வைப்பதில் எந்த பயனும் இல்லை. மாறாக, நாபாவை தமிழ் மக்கள் எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்பதையே எழுத வேண்டும். பத்மநாபா விடுதலையை விரும்பினார் பத்மநாபா புரட்சியை விரும்பினார் பத்மநாபா ஈழத்தை விரும்பினார் ஆதனால்தான் அவர் “ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி”யை (EPRLF) நிறுவி போராடினார். ஆனால், நாபா முன்வைத்த விடுதலையை கைவிட்டவர்கள் நாபா முன்னெடுத்த புரட்சியை கைவிட்டவர்கள் நாபா முன்வைத்த ஈழத்தை கைவிட்டவர்கள் அவருக்கு நினைவு தினம் கொண்டாடுகிறார்கள். இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. ஏனெனில் நாபாவே தன் இறுதிக் காலத்தில், தான் உச்சரித்த புரட்சியை கைவிட்டார். தான் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தை கைவிட்டார் இந்திய உளவு நிறுவனங்களின் வழிகாட்டலில் தேர்தல் பாதையில் பயணித்தார். தமிழ் மக்களுக்கு எதிரான இந்திய அரசை ஆதரித்தார். அதன் மூலம் அவரை நம்பிய தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தார். இந்திய அமைதிப்படையின் அக்கிரமங்களுக்கு துணை போனார். அதனால் தமிழர் போராட்ட வரலாற்றில் ஒரு துரோகியானார். பத்மநாபா புதைக்கப்பட்டார். அவருடைய எலும்புகளை தோண்டியெடுத்து சிலர் ரத்தம் பாய்ச்சுகிறார்கள் அவர் உயிர்த்தெழுவார் என்று ஆனால் அவர்கள் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை. எனினும் பத்மநாபா தன் இறுதிக் காலத்தில் கூறிய ஒரு வரியை நாம் புரிந்துகொள்ள வேண்டும். “இந்தியாவை பயன்படுத்த நாம் நினைத்தோம். ஆனால் இந்தியா எங்களை பயன்படுத்திவிட்டது”என்று அவர் கூறினார். எனவே தயவு செய்து இனியாவது இந்திய அரசுக்கு துணை போவதை நிறுத்திக் கொள்ளுங்கள்

1994ம் ஆண்டு மதுரை சிறையில் வைக்கப்பட்டிருந்த

1994ம் ஆண்டு மதுரை சிறையில் வைக்கப்பட்டிருந்த என்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காக சென்னை அழைத்துச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுமார் இரண்டு மாதங்கள் சென்னை சிறையில் என்னை அடைத்து வைத்திருந்தனர். அதனால் அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த கௌத்தூர் மணி உட்பட பல தடா சிறைவாசிகளுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வேளையில் பொலிசார் என்னை பலவந்தமாக திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டவேளை சிறைவாசிகள் போராடி தடுத்து நிறுத்தினர். குறிப்பாக மணியண்ணை அவர்கள் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முன்னுக்கு நின்று எனக்காக ஜெயிலருடன் வாக்குவாதப்பட்டது இன்றும் என் நினைவில் இருக்கிறது. தான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும் ஈழத் தமிழனான எனக்கு குரல் கொடுத்த மணியண்ணையின் உணர்வு உண்மையில் பாராட்டப்பட வேண்டியது. ஆனால் இன்று அவர் வெளியில் இருக்கிறார். அவர் ஆதரித்த திமுக கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. இருந்தும் சிறப்புமுகாமில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகளின் விடுதலைக்கு அவர் ஏன் குரல் கொடுக்க தயங்குகிறார் என்பது புரியவில்லை.

ரயில், விமானம், ராக்கட், கார், டிவி,

ரயில், விமானம், ராக்கட், கார், டிவி, ரேடியோ, கம்பியூட்டர் என்று இன்று நாம் பயன்படுத்தும் அத்தனையும் கண்டுபிடித்தவர்கள் காயத்ரி மந்திரம் சொல்லாதவர்களே. காயத்ரி மந்திரம் சொல்பவர்கள் இதுவரை கண்டு பிடித்தது என்ன என்று யாராவது கூற முடியுமா?

இவர் அரசியல் குறித்து விமர்சனம்

இவர் அரசியல் குறித்து விமர்சனம் இருப்பினும் தமிழர் நிலங்களை மீட்டு தமிழ்நாட்டுடன் இணைத்தமைக்காக நிச்சயம் நினைவுகூரப் படவேண்டியவரே. ஆனால் தமிழரின் கச்சதீவை சிங்கள அரசுக்கு தரைவார்த்தவரை “தமிழின தலைவர்” என போற்றி நினைவு கூரப்படுகிறது. வரலாறு மீள படிக்கப்பட வேண்டும்.

பொற்கோயிலுக்குள் ராணுவத்தை

பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பியைமைக்காக இந்திரா காந்தியை சுட்டுக்கொன்ற பியாத்சிங் மகனை எம்.பியாக்கி பாராளுமன்றம் அனுப்பியுள்ளனர் சீக்கிய மக்கள். ஆனால் ராஜீவ் காந்தியை கொன்றமையினாலே 40 வருடமாக அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழருக்கு குடியுரிமை வழங்க முடியாது வெளியே போங்கடா நாய்களே என்று (200 ரூபா) திராவிட உடன்பிறப்புகள் திட்டுகின்றனர். திராவிடர்களுக்கு ஏன் சீக்கிய மக்கள் போல் இன உணர்வு இல்லை?

இந்தியாவில் 40 வருடமாக

•இந்தியாவில் 40 வருடமாக அகதியாகவே இருக்கும் ஈழத் தமிழர் நிலை எப்போது மாறும்? ஒரு கூட்டம் மக்கள் அகதியாகவே பிறந்து அகதியாகவே வாழ்ந்து அகதியாகவே இறந்துவிடும் கொடுமையை என்னவென்பது? அதுவும் ஈழத் தமிழ் இனத்திற்கு இக் கொடுமை வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் நிகழ்வதை என்னவென்பது? அகதியாக சென்ற ஈழத் தமிழரை கனடா வாழ வைக்கிறது, பிரிட்டன் வாழ வைக்கிறது ஐரோப்பா அவுஸ்ரேலியா எல்லாம் வாழ வைக்கிறது. ஆனால் தொப்புள்கொடி உறவுகள் என்று நம்பிச் சென்ற தமிழ்நாடு மட்டும் ஏன் சிறப்பு முகாமில் அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறது? இந்தியா சென்ற தீபெத் அகதிகள் நன்றாக வாழ முடியும். பர்மா மற்றும் நேபாள அகதிகள்கூட வாழ முடியும். ஆனால் ஈழத் தமிழ் அகதிகள் வாழ முடியாது என்றால் என்ன அர்த்தம்? பாகிஸ்தானில் இருந்துவரும் இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் இந்திய அரசு, ஈழத் தமிழ் அகதிகள் இந்துவாக இருந்தும் குடியுரிமை வழங்க மறுப்பது ஏன்? இங்கு வேதனை என்னவென்றால் சிறிமா சாத்திரி ஒப்பந்த அடிப்படையில் தாயகம் திரும்பிய 30000 இந்திய வம்சாவழித் தமிழர்களுக்குகூட இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை. அதைவிடக் கொடுமை என்னவெனில் இவ் ஒப்பந்த அடிப்படையில் தாயகம் திரும்பிய சிலர் கொடைக்கானலில் குடியேற்றப்பட்டார்கள். அவர்கள் வன இலகாவுக்கு சொந்தமான நிலத்தில் இருப்பதாக கூறி அவர்களை வெளியேறும்படி தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. தாயகம் திரும்பிய இந்திய வம்சாவழித் தமிழரின் உண்மைநிலை இப்படி இருக்க, இலங்கையில் ஈழத் தமிழர் மலையக தமிழர் மீது அக்கறை காட்டவில்லை என்று திராவிடம் ஒப்பாரி வைக்கிறது. வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும் என்று புத்தகம் எழுதி வெளியிடுகிறது. திம்பு பேச்சுவார்த்தையில் போராளிகள் முன்வைத்த முதல் கோரிக்கையே மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பதை எப்படி இத் திராவிடத்திற்கு நினைவூட்டுவது?

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தால்

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தால் இளம் விதவைகள் அதிகரிப்பதைக் கண்டித்து தமிழ்நாட்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றியவேளை .... ??😂

கிணற்று தவளைகளின்

கிணற்று தவளைகளின் அதி உச்சகனவு பாம்புகளற்ற கிணறு மட்டுமே. நிருபர் - ஜனாதிபதி ரணில் அவர்கள் நேற்று ஆற்றிய உரை பற்றி தங்கள் கருத்து என்ன ஐயா? சம்பந்தர் ஐயா – என் சொகுசு மாளிகை பற்றி எதுவும் அவர் பேசவில்லைதானே. அப்புறம் அந்த உரை கருமம் பற்றி நான் ஏன் கருத்து கூறவேண்டும்? நிருபர் - தமிழ் பொதுவேட்பாளர் பற்றி தங்கள் கருத்து என்ன ஐயா? சம்பந்தர் ஐயா - இந்திய அரசு பொதுவேட்பாளரை ஆதரிக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. தெரிந்த பின்பு கருத்து கூறுகிறேன். நிருபர் - அப்படியென்றால் ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் யாரை ஆதரிக்கப் போகின்றீர்கள் ஐயா? சம்பந்தர் ஐயா – வழக்கம்போல் இம்முறையும் இந்திய அரசு யாரை கைகாட்டுகிறதோ அவரை நாங்கள் ஆதரிப்போம். நிருபர் - இந்திய அரசு யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று விரும்புகிறது ஐயா? சம்பந்தர் ஐயா – யார் வரவேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதில் அவர்கள் இப்போது தெளிவாக இருக்கின்றனர். எக்காரணம் கொண்டும் ஜேவிபி அனுரா வரக்கூடாது என்று அவர்கள் நினைக்கின்றனர். நிருபர் - அனுரா டில்லிபோய் இந்திய வெளியுறவு அமைசரையெல்லாம் சந்தித்தாரே ஐயா? சம்பந்தர் ஐயா – ஆம். ஆனால் அவர் அதானியின் கம்பனிக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக உறுதிமொழி கொடுக்க மறுத்துவிட்டாராம். நிருபர் - அப்படியென்றால் ரணில், சஜித் சம்மதிப்பார்களா ஐயா? சம்பந்தர் ஐயா – சந்தேகமே வேண்டாம். யார் சம்மதிக்கிறாரோ அவரையே இந்திய அரசு ஆதரிக்கும். நிருபர் - அப்படியென்றால் தமிழர் தீர்வு பற்றி இந்திய அரசு வலியுறுத்தாதா ஐயா? சம்பந்தர் ஐயா – அண்மையில் நம்ம ஆட்கள் ஜெய்சங்கரை சந்தித்தபோது காணி பொலிஸ் அதிகாரம் தர சஜித் தயாராக இருப்பதாக கூறியபோது அவர் ஆச்சரியமாக சிரித்தாராம். அதன் அர்த்தம் புரியவில்லையா உங்களுக்கு இன்னும்?

ஆயிரம் வருடங்களுக்கு முன்னர்

ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட திராவிட மாடல் தஞ்சை பெரிய கோவில் ஒழுகவில்லை. ஆனால் சங்கி கட்டிய அயோத்தி கோவில் ஆறு மாதத்தில் ஒழுகுகிறது – டாக்டர் ஷார்மிளா அது சரி. தஞ்சை பெரிய கோவில் திராவிட மாடலா?

டெலோ இயக்கத்தின் தலைவர்

டெலோ இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை. அவரை எல்லோரும் தங்கண்ணா என்று அழைப்பார்கள். அவரும் குட்டி மணியும் 1983ம் ஆண்டு வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. அப்போது அந்த இருவர் குடும்பங்களுக்கும் சென்னை நந்தனம் வீட்டுத்திட்டத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் வீடுகள் வழங்கி உதவினார். இதில் குட்டிமணியின் மனைவி பின்னர் அங்கிருந்து வெளியேறி லண்டனில் குடியேறி சில வருடங்களுக்கு முன்னர் இறந்தும்விட்டார். ஆனால் தங்கத்துரையின் மனைவி தொடர்ந்து அக் குடியிருப்பில் வசித்து வந்தார். இப்போது தமிழக அரசு அவரை வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. அவருக்கு மாற்று வீடும் வழங்கப்படவில்லை. இந்த வீட்டுக்கு நான் சென்றிருக்கிறேன். அங்கு சென்று சிவாஜிலிங்கத்தை சந்தித்து குகன்சாப் அவருக்கு தந்த கடிதத்தை ஒப்படைத்திருக்கிறேன். இப்போது தங்கத்துரை அவர்களின் மனைவிக்காக சிவாஜிலிங்கம் அவர்கள் குரல் கொடுத்திருக்க வேண்டும். ஏன் அவர் குரல் கொடுக்கவில்லை என்று தெரியவில்லை. ஆனால் தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் சட்டசபையில் குரல் கொடுத்துள்ளார். வேல்முருகன் அவர்கள் உணர்வுகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். தமிழக அரசு செவி சாய்க்குமா? தங்கத்துரை மனைவிக்கு உதவுமா?

யாழ்ப்பாணத்தை சரத்பொன்சேகாவிடம்

யாழ்ப்பாணத்தை சரத்பொன்சேகாவிடம் தானே ஒப்படைத்ததாக ரணில் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல , அதன் மூலம் யுத்தத்தில் வெல்வதற்குரிய சகல ஏற்பாடுகளையும் தான் பிரதமராக இருந்தபோது மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். ரணில் ஒரு குள்ள நரி என்று அன்டன் பாலசிங்கம் ஏன் கூறினார் என்பது இப்போது நன்கு புரிகிறது. ஆனால் இங்க கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் ரணில் ஜனாதிபதியாக வருவதை தடுத்தது புலிகள் செய்த தவறு என்று சுமந்திரன் கூறி திரிகிறார். ரணில் ஜனாதிபதியாக வந்திருந்தாலும் தீர்வு கிடைத்திருக்காது மாறாக இனப்படுகொலையே நடந்திருக்கும் என்பதை அவர் பேச்சு நன்கு காட்டுகிறது. அதுமட்டுமன்றி தற்போது ஜனாதிபதியாக பதவி ஏற்றபோது ஒரு வருடத்திற்குள் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என அவர் உறுதியளித்திருந்தார். ஆனால் இரண்டு வருடம் சென்றுவிட்டது. அவர் கூறியபடி இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை. இந் நிலையில் தற்போது மகிந்த கும்பலுடன் சேர்ந்து மீண்டும் ஜனாதிபதியாக வர முயல்கிறார். எனவே இம்முறை யார் வரவேண்டும் என்பதைவிட ரணில் வரக்கூடாது என்பதே தமிழ் மக்களின் நிலையாக இருக்க வேண்டும்.