Wednesday, December 30, 2015

• பேரறிவாளனை தமிழக மக்கள் விடுதலை செய்வார்கள்

• பேரறிவாளனை தமிழக மக்கள் விடுதலை செய்வார்கள்
இந்திய உச்ச நீதிமன்றம் தான் ஒரு உச்சிக் குடுமி மன்றம் என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
தமிழக மக்கள் தனிநாடாக பிரிந்து தமக்குரிய உச்ச நீதிமன்றத்தை நிறுவுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை இது காட்டியுள்ளது.
உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பையடுத்தே தமிழக அரசு பேரறிவாளனை விடுதலை செய்தது. இப்போது அவ்வாறு விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அதே உச்சநீதிமன்றம் கூறுகிறது.
பேரறிவாளனுக்குரிய நீதி மறுக்கப்பட்டிருக்கிறது. இனி பேரறிவாளனுக்குரிய நீதியை தமிழக மக்களே வழங்குவார்கள்.
தமிழக மக்களால் மட்டுமே பேரறிவாளனை விடுதலை செய்ய முடியும். தமிழக மக்களே பேரறிவாளனை விடுதலை செய்வார்கள்.
பேரறிவாளனுக்கு நீதி மறுக்கப்பட்டிருப்பது தமிழக மக்கள் இந்திய அரசுமீதான நம்பிக்கை இழப்பதற்கும் தனிநாட்டுக்குரிய அவசியத்தை உணருவதற்கும் வழி செய்கிறது.
தமிழக விடுதலைப் போராட்ட வரலாற்றில் இனி பேரறிவாளன் பெயர் முக்கிய இடம் பெறுவதற்கும், தமிழக விடுதலைப்போராட்டம் வலுவாக முன்னெடுப்பதற்கும் இந்திய அரசு தன்னையும் அறியாமல் வழி செய்துள்ளது.

No comments:

Post a Comment