Tuesday, March 22, 2016

ஈழத்து தமிழ் ஆசிரியர்கள் ஏன் கவனத்தில் கொள்ளப்படவில்லை?

•ஈழத்து தமிழ் ஆசிரியர்கள் ஏன் கவனத்தில் கொள்ளப்படவில்லை?
உலகின் மிகச்சிறந்த ஆசிரியருக்கான விருது போப் பிரான்சிஸ் அவர்களால் பலஸ்தீன் ஆசிரியையான 'ஹனான் அல் ஹ_ரூப்' அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் அழிக்க நினைத்த பலஸ்தீனப் பிள்ளைகளுக்கு அரணாக நின்று அவர்களது வாழ்க்கையோடு கலந்துவிட்ட உயரிய சேவைக்காகவே அவ் ஆசிரியைக்கு இவ் விருது வழங்கப்படுகிறது.
சுமார் 1000 இற்கு மேற்பட்ட கணிதம் சம்பந்தமான வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்ட பிரித்தானிய ஆசிரியரை தாண்டி இவ் சாதனை விருதினை அவர் கைப்பற்றியிருக்கிறார்.
பாராட்டுகிறோம். அவருக்கு எமது வாழ்த்துகள். ஆனால் இங்கு எமது கேள்வி என்னவெனில் உலகளவில் இறுதிக் கட்டத்துக்காக தெரிவான 10 ஆசிரியர்களில் ஒருவர்கூட ஈழத்து ஆசிரியர் தெரிவு செய்யப்படாதது ஏன்?
பாலஸ்தீன ஆசிரியை விட அதிக ஆபத்தான யுத்த சூழலில் கடமையாற்றியவர்கள் ஈழத்து தமிழ் ஆசிரியைகள்.
பல வருடங்கள் நடைபெற்ற போர்ச் சுழலில,; உயிராபத்துகளின் மத்தியில் மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி புகட்டியவர்கள் வன்னி ஆசிரியர்கள்.
தங்கள் உயிரைப் பணயம் வைத்து மாணவர்களின் உயிர்களை காப்பாற்றியவர்கள் இந்த தமிழ் ஆசிரியர்கள்.
போரின்போது தொடர்ந்த இடப் பெயர்வுகளின்; போது தமக்குரிய சம்பளம் வராதபோதும் தமது சேவையை நிறுத்தாமல் மாணவர்களுக்கு கல்வியை தொடர்ந்து வழங்கியவர்கள்.
போரின் போது மட்டுமல்ல போரின் பின்பும்கூட இராணுவத்தால் தொடர்ந்து இடம்பெறும் பாலியல் வல்லுறவுக் கொடுமைகளில் இருந்து தங்களை மட்டுமன்றி தங்களிட்ம் கல்வி கற்கும் மாணவிகளையும் காப்பாற்றி வருபவர்கள் இந்த ஆசிரியர்கள்.
இந்த தமிழ் அசிரியைகளை பரிசுக்கு தேர்ந்தெடுக்காவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் இறுதிக் கட்டத்திற்கு தெரிவான பத்து பேரில் ஒருவராக கூட தெரிவு செய்யாதது ஏன்?
ஈழத்து தமிழ் ஆசிரியர்களின் சாதனை பாலஸ்தீன ஆசிரியரின் சாதனைக்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. அப்படியிருக்க ஏன் ஈழத்தமிழ் ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை?
ஒருவேளை வன்னியில் பெற்றோல் கிணறு இருந்திருந்தால் ஈழத்து தமிழ் ஆசிரியர்களும் கவனிக்கப்பட்டு விருது வழங்கப்டடிருக்குமோ?

No comments:

Post a Comment