Tuesday, March 22, 2016

•லண்டனில் நடைபெற்ற நூல் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வுகள்.

•லண்டனில் நடைபெற்ற நூல் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வுகள்.
லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் நேற்றைய(12.03.2016) தினம் மாலை 4 மணியளவில் மக்கள் ஜனநாயக அரங்கு சார்பில் இரு நிகழ்வுகள் நடைபெற்றன.
முதலாவது நிகழ்வாக தமிழினியின் "ஓரு கூர்வாளின் நிழலில்" நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
தோழர் வேலு தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வேணி அவர்கள் நூல் பற்றிய ஒரு சிறப்பான தனது பார்வையை முன்வைத்தார்.
டாக்டர் வரதராசா நூலை வெளியிட்டு கருத்துரை வழங்குவார் என குறிபிடப்பட்டிருந்தபோதும் அவர் சுகயீனம் காரணமாக சமூகமளிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் வினோதரன் மற்றும் சந்திரிக்கா ஆகியோர் நூல் குறித்து பேசுவார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தும் அவர்களும் நிகழ்வில் சமூகமளிக்கவில்லை.
இந் நிகழ்வை நடத்தக்கூடாது என்று பல வகையிலும் அச்சுறுத்தல் விடப்பட்டதாக நிகழ்வு ஏற்பாட்டாளர்களில் ஒருவரான பௌசர் தெரிவித்துள்ளார். ( அவரது அறிக்கை பின்னூட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது)
இரண்டாவது நிகழ்வாக இலங்கையின் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.
சாள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் காதர் அவர்கள் தனது ஆலோசனைகளை முன்வைத்து உரையாற்றினார்.
கண்டி போறம் சார்பில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையை பறூக் அவர்கள் அறிமுகம் செய்து உரையாற்றினார்.
தமிழ் மக்கள் பேரவை சமர்ப்பித்த அறிக்கை பற்றி குருபரன் சுருக்கமாக தெரிவித்தார்.
இறுதியாக பார்வையாளர்களின் கலந்துரையாடலுடன் நிகழ்வுகள் முடிவடைந்தன.

No comments:

Post a Comment