Tuesday, March 22, 2016

•இவை தற்செயலாக நடைபெறுகின்றனவா அல்லது ஒரு திட்டமிட்ட நிகழ்சி நிரல்களாக இருக்கின்றனவா?

•இவை தற்செயலாக நடைபெறுகின்றனவா அல்லது
ஒரு திட்டமிட்ட நிகழ்சி நிரல்களாக இருக்கின்றனவா?
வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள் இந்தியா தீர்வு பெற்று தர வேண்டும் என்று கோருகிறார்.
முன்னாள் முதல்வர் வரதராஜபெருமாள் இலங்கை வந்து என்றுமில்லாதவாறு நாபா நினைவு தினம் கொண்டாடுகிறார்.
லண்டனில் சிலபேர் வடஇந்திய எம்.பி கள் இருவரை அழைத்து வந்து "இலங்கையில் அபிவிருத்தி" பற்றி கூட்டம் போடுகிறார்கள்.
ராஜீவ் காந்தியைக் கொன்றது பாரிய தவறு என்று பாலசிங்கம் தன்னிடம் கூறியதாக எரிக் சொல்கைம் திடீரென்று புத்தகம் எழுதுகிறார்.
இவை யாவும் தற்செயலாக நடக்கும் நிகழ்வுகள் அல்ல. இந்தியாவை மீண்டும் நம்பிக்கை நட்சத்திரமாக காட்டுவதற்கு பல மில்லியன் செலவில் நடக்கும் பாரிய பிரச்சாரம் ஆகும்.
இனப்பிரச்சனையை சாக்காக வைத்து தலையிட்ட இந்தியாவானது தற்பொது முழு இலங்கையையும் ஆக்கிரமித்துள்ளது.
இதை உணர்ந்த சிங்கள மக்கள் மத்தியில் அடிமை ஒப்பந்தமான "எட்கா" வுக்கு எதிரான பாரிய எதிர்ப்பு தோன்றியுள்ளது.
எனவேதான் சிங்கள மக்களுடன் தமிழ் மக்களும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவிக்காமல் தடுப்பதற்காகவே இந்திய ஆதரவுப் பிரச்சாரம் பல வழிகளில் முடக்கிவிடப்பட்டுள்ளது.
பிஸ்கட் துண்டுக்கு வாலாட்டும் நாய்க் குட்டிகள் போல் இந்திய உளவு நிறுவனங்கள் விட்டெறியும் பிஸ்கட்டுக்காக தமிழ் மக்கள் மத்தியில் உள்ள இந்திய விசவாச நாய்க்குட்டிகள் வாலாட்டுகின்றன.
ஆனால் இனிமேல் இந்தியா எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் தமிழ் மக்கள் மனதை மாற்ற முடியாது. ஏமாற்றவும் முடியாது.
ஏனெனில் இதுவரை இந்தியா தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பது மட்டுமல்ல இனியும்கூட எதுவும் செய்யாது என்பதை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து வைத்துள்ளார்கள்.

No comments:

Post a Comment