Tuesday, March 22, 2016

"சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூலின் ஆங்கில மொழியாக்க புத்தகம் வெளிவந்துள்ளது.

•"சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூலின் ஆங்கில மொழியாக்க புத்தகம் வெளிவந்துள்ளது.
நான் எழுதிய சிறப்புமுகாம் பற்றிய நூல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு "Concentration Camps of Tamilnadu: The So-called Special Camps" என்னும் பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது.
தமிழில் இருந்து ஆங்கில மொழி பெயர்ப்பை டாக்டர் தம்பிராசா அவர்கள் செய்துள்ளார். தோழர் பதிப்பகம் இதனை அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
இவ் நூல் வெளிவர உதவி புரிந்த அனைவருக்கும் எனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அண்மையில், மதுரை சாதாரண அகதிமுகாமில் தங்கியிருந்த அகதி ஒருவர் அதிகாரியின் தொல்லை பொறுக்காமல் தற்கொலை புரிந்தது யாவரும் அறிந்ததே.
அதேபோல் நேற்று முன்தினம்கூட சென்னை அகதி முகாமில் தங்கியிருந்த அகதி ஒருவர் விசாரணைக்கு என அழைத்து சென்ற பொலிசாரினால் சித்திரவதை செய்யப்பட்டு கால் முறிந்த நிலையில் வெளிவந்திருப்பதை அறிகிறோம்.
சாதாரண முகாம்களிலேயே அகதிகளுக்கு இந்தளவு கொடுமை இருக்குமாயின் சிறப்புமுகாமில் எந்தளவு கொடுமை இருக்கும் என்பதை ஒவ்வொருவராலும் நன்கு உணர முடியும் என நம்புகிறேன்.
அதுமட்டுமல்ல ராஜீவ் காந்தி வழக்கில் உள்ள முருகன,; சாந்தன் போன்றவர்கள் சிறையில் இருந்து விடுதலை பெற்றாலும் அவர்களையும் செய்யாறில் உள்ள சிறப்புமுகாமில் அடைத்து வைக்க அரசு எண்ணியுள்ளது என அறிய வருகிறது.
எனவே இந்த சிறப்புமுகாம்கள் உள்ளவரை தமிழகத்தில் ஈழ அகதிகள் நிம்மதியாக இருக்க முடியாது. எனவே அவற்றை மூடுவதற்கான போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியவர்களாக உள்ளோம்.
தமிழில் வெளிவந்த எனது "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் தமிழ் மக்கள் மத்தியில்; சிறப்புமுகாம் பற்றிய விழிப்புணர்வை குறிப்பிடத்தக்களவு ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் இந்த நூலும் தமிழ் தெரியாத மக்கள் மத்தியில் சிறப்புமுகாம் கொடுமைகளை நிச்சயம் எடுத்தச் செல்லும் என நம்பகிறோம்.
அனைவரின் ஆதரவையும் அன்புடன் வேண்டுகிறோம்.
இந்திய அரசே!
சிறப்புமகாமில் அடைத்து வைத்திருக்ம் அகதிகளை விடுதலை செய்!
சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்களை உடனே மூடு!

No comments:

Post a Comment