Tuesday, March 22, 2016

தமிழ் இனமாய் பிறந்ததைவிட சிட்டுக்குருவியாக பிறந்திருக்கலாமோ?

•தமிழ் இனமாய் பிறந்ததைவிட சிட்டுக்குருவியாக பிறந்திருக்கலாமோ?
இன்று சிட்டுக் குருவிகள் தினமாம்.
சிட்டுக் குருவிக்குகூட தினம் ஒதுக்கும் இந்த உலகம் தமிழ் இனத்தை மட்டும் ஏன் கவனத்தில் கொள்ள மறுக்கிறது?
தமிழ் இனமாக பிறந்து அடிமையாக வாழ்வதைவிட சிட்டுக்குருவியாக பிறந்து சுதந்திரமாக பறந்திருக்கலாமோ என நினைக்க தோன்றுகிறது.
ஒரு சிட்டுக்குருவி இன்னொரு சிட்டுக்குருவியை அடக்கி ஆள்வதில்லை.ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடக்கி ஆள்கிறான்.
ஒரு சிட்டுக்குருவி இன்னொரு சிட்டுக் குருவியை ஆக்கிரமிப்பதில்லை. ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை ஆக்கிரமித்து ஆள விரும்பகிறான்.
ஒரு சிட்டுக்குருவி இன்னொரு சிட்டுக் குருவியை சுரண்டி வாழ்வதில்லை. ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை சுரண்டி வாழ்கிறான்.
ஒரு சிட்டுக்குருவி அகதியாக வந்த இன்னொரு சிட்டுக்குருவியை சிறப்புமுகாமில் அடைத்துவிட்டு தன்னை "ஈழத்தாய்" என்று சொல்வதில்லை
ஒரு சிட்டுக்குருவி தன்னை தூக்கி கடலிலே எறிந்தால் கட்டுமரமாக வந்து காப்பாற்றுவேன் என்று இன்னொரு சிட்டுக் குருவியை ஏமாற்றுவதில்லை.
சிட்டுக்குருவி இனம், மதம், என பிரிந்து கிடக்கவில்லை. அதனால்தான் அவை சுதந்திரமாக உயரத்தில் பறக்கின்றனவா?
மனிதன் இன மத ரீதியாக பிரிந்து கிடப்பதால்தான் பூமியில் தாழ்ந்து கிடக்கின்றானா?
எல்லாவற்றுக்கும் மேலாக
சிட்டுக்குருவியில் தேவர் சாதி இல்லை
சிட்டுக்குருவியில் வன்னியர் சாதி இல்லை
சிட்டுக்குருவியில் கவுண்டர் சாதி இல்லை
அதனால் அவை சுதந்திரமாக காதல் செய்கின்றன.
மனிதன் உயர்ந்த சாதி , தாழ்ந்த சாதி என்று பிரிந்து கிடக்கிறான். அதனால் சங்கர், இளவரசன்கள், போன்றோர் காதல் செய்ய விடாமல் கொலை செய்யப்படுகிறார்கள்.
நான்,
தமிழனாக பிறந்ததற்காக கவலைப்படுவதா?
அல்லது சிட்டுக் குருவியை பார்த்து பொறாமைப்படுவதா?

No comments:

Post a Comment