Tuesday, March 22, 2016

•இவர்கள் செய்த தவறு என்ன? இந்தியாவில் எருமை மாட்டை விற்பனை செய்வது மரண தண்டனைக் குற்றமா?

•இவர்கள் செய்த தவறு என்ன?
இந்தியாவில் எருமை மாட்டை விற்பனை செய்வது மரண தண்டனைக் குற்றமா?
செய்தி- இந்தியாவில் எருமை மாட்டை விற்பனை செய்ய சென்ற இரு முஸ்லிம்கள் அடித்துக் கொல்லப்பட்டு மரத்தில் தொங்க விடப்பட்டுள்ளார்கள்.
இவர்கள்,
பாகிஸ்தான் அனுப்பிய தீவிரவாதிகள் இல்லை
அல்கைதா இயக்க பயங்கரவாதிகளும் இல்லை
.
மக்களை குண்டு வைத்து கொன்றவர்களும் இல்லை
இந்தியாவுக்கு எதிராக கோசம் போடவும் இல்லை
அப்படியென்றால் இவர்கள் செய்த தவறுதான் என்ன?
எதற்காக இவர்கள் கொலை செய்து தொங்கவிடப்பட்டார்கள்?
தமது எருமை மாடுகளை விற்பதற்கு சந்தைக்கு சென்றதால் இவர்கள் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் கொலை செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளார்கள்.
இந்தியாவில் தமது எருமை மாடுகளை சந்தையில் விற்பது மரண தண்டனைக்குரிய குற்றமா?
எற்கனவே ஒரு முஸ்லிம் வயோதிபர் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டார் என்ற குற்றச்சாட்டில் அடித்தக் கொன்றார்கள்.
அப்புறம் அவர் சமைத்தது மாட்டிறைச்சி அல்லவென்றும் வெறும் வதந்தியால் அடித்துக் கொன்றுவிட்டார்கள் என்று அறிய வந்தது.
ஒருபுறத்தில் மாட்டிற்காக முஸ்லிம்களை அடித்தக்கொல்லும் இதே இந்தியாதான் மறுபுறத்தில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகில் முதலிடம் வகிக்கிறது.
ஆனால் இதுவரை மாட்டைக் கொன்றதற்காக ஒரு முதலாளி கூட கொல்லப்படவில்லையே! அது ஏன்?
முஸ்லிம் என்பதற்காக அடித்து கொல்கிறார்கள்
முஸ்லிம் என்பதற்காக பிடித்து சிறையில் அடைக்கிறார்கள்
இன்றைய ஆட்சியில் முஸ்லிம்கள் இரண்டாம் தர பிரஜையாகவே நடத்தப்படுகிறார்கள்.
ஒருபுறம் இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள். மறுபுறம் முஸ்லிம்களை அடித்து கொல்கிறார்கள்.
மாட்டிற்காக மனிதனை அடித்துக்கொல்லும் நாடு செவ்வாய்க்கு ராக்கட் விடுவதோ அன்றி தன்னை டிஜிட்டல் இந்தியா என்று அழைப்பதிலோ எந்தப் பெருமையும் இல்லை.

No comments:

Post a Comment