Friday, February 28, 2020

1988ல் ஒருநாள் நானும் தமிழ்நாடு விடுதலைப்படையைச் சேர்ந்த தோழர் மாறனும்

1988ல் ஒருநாள் நானும் தமிழ்நாடு விடுதலைப்படையைச் சேர்ந்த தோழர் மாறனும் திருவல்லிக்கேணியில் உள்ள தோழர் பொழிலனைச் சந்திக்க சென்றோம். அப்போது வழியில் வந்துகொண்டிருந்த சில இளம் பெண்களை மறித்து கெட்ட வார்த்தைகளால் மாறன் திட்டினார். எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஏன் இப்படி செய்தீர்கள?; என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் “ தோழர்! இவர்கள் எல்லாம் பார்ப்பணர்கள். இவர்கள் எமது எதிரிகள்” என்றார். அதுமட்டுமல்ல “பாம்பையும் பார்ப்பாணையும் கண்டால் முதலில் பார்ப்பாணையே அடிக்க வேண்டும். ஏனெனில் பாம்பைவிட விஷமானவன் பார்ப்பான்” என்றார். அப்போது அவரிடம் “ அதெப்படி எல்லா பார்ப்பாணும் கெட்டவனாக இருக்க முடியும்? அவர்களில் ஒருவரான மருதையன் என்பவர் மகஇக என்ற நக்சலைட் அமைப்பின் தலைவராக இருக்கிறாரே” என்று நான் உதாரணம் காட்டினேன். 1988ல் நான் உதாரணம் காட்டிய அதே பார்ப்பணர் மருதையன் இன்று 2020ல் பலவேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு மகஇக வில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக ஈழத் தமிழரான குகநாதன் என்பவர் சென்னையில் தமிழக பொலிசாரின் உதவியோடு கடத்தப்பட்ட போது பிரான்சில் இருக்கும் ராயாகரன் தனது கண்டனங்களை தெரிவித்தார். அப்போது இதே மருதையன் ராயகரனை கண்டித்ததோடு அவருடனாக அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக பொதுவெளியில் அறிவித்தார். ஆனால் இதே ராயகரன் கீழைக்காற்று பதிப்பகத்திற்கு கடனாக கொடுத்த பணத்தை மருதையன் திருப்பி கொடுக்கவில்லை. இன்று மருதையன் வெளியிட்டிருக்கும் தனது விளக்கத்தில் இப் பிரச்சனை பற்றி ஏதும் கூறப்பட்டிருக்கிறதா என தேடினேன். ஆனால் எதுவும் இல்லை. Image may contain: 1 person, text

No comments:

Post a Comment