Friday, February 28, 2020

• இது கேவலம் இல்லையா?

• இது கேவலம் இல்லையா? தீர்வு பெற்று தருவேன். இல்லையேல் ராஜினாமா செய்வேன் என்று கூறிய மானஸ்தர் சுமந்திரன், வைரவர் கோவில் முன் வளைவை திறந்து வைத்து அபிவிருத்தி செய்ததாக கூறுவது கேவலம் இல்லையா? ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவோம் என்று கூறி பதவி பெற்றவர்கள், இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டபோது “அபிவிருத்தி முக்கியம் இல்லை தீர்வு தான் முக்கியம்” என்று கூறியவர்களுக்கு இது கேவலமாக தோன்றவில்லையா? வயிரவர் கோவில் முன் வளைவை திறந்து வைத்து படம் போடுவது, ஒழுங்கைக்கு தார் போட்டு அதனை திறந்து வைத்து படம் போடுவது,, மயானத்திற்கு மதில் கட்டி அதனை திறந்து வைத்து படம் போடுவது, கிணறு வெட்டி அதனை திறந்து வைத்து படம் போடுவது இதுதானா நீங்கள் கூறிய தீர்வு? அல்லது இதுதானா நீங்கள் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் அபிவிருத்தி? 1977ல் இவ்வாறு வந்த தமிழ் எம்.பி மார்களை “ கேட்டது தமிழீழம், கிடைத்தது ஜப்பான் ஜீப்பா?” என்று கேட்டு அவர்களது ஜீப் வண்டிகளை கொளுதியவர்கள் குட்டி மணி தங்கத்துரை போன்ற தமிழ் இளைஞர்கள். இன்று குட்டிமணி தங்கத்துரை போன்ற இளைஞர்கள் இல்லாதபடியால்தான் இத்தனை துணிவாக, ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவோம் என்று கூறியவர்கள் அரசு வழங்கிய 7 கோடி ரூபா சொகுசு வாகனத்தில் வந்து வயிரவர் கோயில் வளைவுக்கு திறப்புவிழா செய்கிறார்கள். மாலை போட்டு சென்று இதனை திறந்து வைப்பவங்களுக்கும் வெட்கம் இல்லை. இவங்களுக்கு மாலை போட்டு வரவேற்றவங்களுக்கும் வெட்கம் இல்லை ஏனெனில் இவங்கள் செய்யிறதை எல்லாம் சாதனை என்று எழுத நாலு செம்புகள் இவர்களுக்கு இருக்கும்வரை இவர்கள் இதற்கு வெட்கப்படப் போவதில்லை. குறிப்பு - இதுவரை கக்கூஸ்தான் திறந்து வைக்கவில்லை. தேர்தலுக்கு முன்னர் அதையும் எங்கேயாவது திறந்து வையுங்கடா! Image may contain: 9 people, people standing, wedding and outdoor

No comments:

Post a Comment