Friday, February 28, 2020

என்னது சுமந்திரனுக்கு “போராளி” பட்டமா?

என்னது சுமந்திரனுக்கு “போராளி” பட்டமா? தமிழ்நாட்டில் தலைவர்களுக்கு புரட்சி தலைவர், புரட்சி தலைவி, புரட்சிப்புயல் என்று பட்டங்கள் வழங்குவார்கள். அவர்களுக்கும் புரட்சிக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இப்போது அந்த வருத்தம் (நோய்) ஈழத் தலைவர்களுக்கும் தொற்றிவிட்டது போலும். இது கொரோணா வைரஸைவிட பயங்கரமானது. சில வருடங்களுக்கு முன்னர் சம்பந்தர் ஜயாவை அழைத்து கனடாவில் சில கிழடுகள் “வாழும் வீரர்” என்று பட்டம் வழங்கினார்கள். அவ்வாறு பட்டம் வழங்கியவர்களில் ஒருவரான குகதாசன் என்பவர் இப்ப திருகோணமலை வந்து அடுத்த தேர்தலில் போட்டியிட சீட் பெற்றுவிட்டார் என்கிறார்கள். அடுத்து இப்பொழுது சுமந்திரனுக்கு “ போராளி” என்ற பட்டம் கம்பன் கழகத்தால் வழங்கப்பட்டுள்ளது என்று ஒரு செய்தி தெரிவிக்கிறது. இந்த கம்பிவாரதி மன்னிக்கவும் கம்பவாரதி எதற்காக சுமந்திரனுக்கு அதுவும் “ தரம் மிகுந்த போராளி” என்று பட்டம் வழங்கியுள்ளார் என்று தெரியவில்லை. சுமந்திரன் செய்த போராட்டம் என்ன? எதற்காக அவருக்கு போராளி என்ற பட்டம் வழங்கப்பட்டது? தமிழ் இனத்திற்கு துரோகம் செய்யும் சுமந்திரன் தரம் மிகுந்த போராளி என்றால் தமிழ் இனத்திற்காக அர்ப்பணிப்பு செய்த போராளிகளை என்னவென்று அழைப்பது? Image may contain: one or more people and people standing

No comments:

Post a Comment