Friday, February 28, 2020

•ஒருபுறம் இந்துகோயில்கள் அழிப்பு

•ஒருபுறம் இந்துகோயில்கள் அழிப்பு மறுபுறம் சிவராத்திரிக்கு வாழ்த்து !! இதுவரை தைப் பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு போன்றவற்றுக்குத்தான் வாழ்த்து கூறுவது வழக்கம். ஆனால் இம்முறை ஜனாதிபதி கோத்தா சிவராத்திரிக்கும் இந்துக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல விடயம். வரவேற்போம். ஆனால் இது உண்மையான வாழ்த்தா? அல்லது தமிழ் மக்களை ஏமாற்றும் வாழ்த்தா? ஏனெனில் இலங்கை பௌத்த நாடு என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் இந்து மதத்தவருக்கு வாழ்த்து கூறினால்; அதன் அர்த்தம் என்ன? சரி. அதுகூடப் பரவாயில்லை. ஆனால் ஒருபுறம் இந்துக் கோயில்களை ஆக்கிரமித்து பௌத்த விகாரைகள் கட்டிக் கொண்டு மறுபுறத்தில் இந்துக்களுக்கு வாழ்த்து கூறினால் அதன் அர்த்தம் என்ன? சரி. ஒரு பேச்சுக்கு இது இந்து மதத்தை மதிக்கும் பண்பு என்று எடுத்துக்கொண்டாலும், நீராவியடி பிள்ளையார் கோவில் வீதியில் பிக்குவின் உடலை எரிக்கும் போது இந்துக்களை மதிக்கும் பண்பு எங்கே போனது? நெற்றியில் திருநீறு பட்டையை பூசிக்கொண்டு கையில் உருத்திராட்சம் கொட்டைகளைக் கட்டிக்கொண்டு வாழ்த்து கூறினால் அதை இந்து மதத்தவர்கள் நம்பிவிடுவார்களா? அப்படியென்றால் எதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்? அவர்கள் உண்மையில் இந்து மதக் கடவுள்களை நம்புவதாக சிலர் நினைக்கிறார்கள். அது தவறு. ஏனெனில் இவர்கள் புத்தமதக் கடவுளான புத்தரையே நம்பவில்லை. அப்புறம் எப்படி இந்து மதக் கடவுளை நம்புவார்கள்? இந்தியாவில் இந்துமதவாதியான மோடி பிரதமராக இருக்கிறார். அவரை ஏமாற்றுவதற்காக இப்படி செய்வதாக சிலர் நம்புகிறார்கள். அதுவும் தவறு. ஏனெனில் இந்தியாவில் இருக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த தமிழர்களையே மோடி பொருட்படுத்துவதில்லை. எனவே அவர் இலங்கையில் இருக்கும் இந்து மத தமிழர்கள் மீது அக்கறை கொள்வாரா? உண்மையில் இலங்கை ஆட்சியாளர்கள் மட்டுமல்ல உலகில் உள்ள ஆட்சியாளர்கள் பலரும் தற்போது மதங்களை உயர்த்திப் பிடிக்கின்றனர். ஏனெனில் மதங்களும் அவற்றின் கடவுள்களும் இவர்களின் ஆட்சியினை தொடர்வதற்கு உதவி வருகின்றன. அதனால்தான் பலகோடி ரூபா பணங்களை செலவு செய்து மதங்களை காப்பாற்றி கொண்டாடி வருகின்றனர். இப்போது உதாரணத்திற்கு கோத்தா வாழ்த்து தெரிவித்த சிவராத்திரி பற்றி கொஞ்சம் பார்ப்போம். கடவுள் சிவபெருமானை நினைத்து விரதம் இருக்கும் இந்துக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். அதாவது மக்கள் தமக்குரிய நியாயத்தைப் பெறுவதற்கு அமைதியாக விரதம் இருந்தால் அதை அவர் வரவேற்று வாழ்த்துவார். ஆனால் கடவுள் புராணம் என்ன கூறுகின்றது என்றால் அக்கிரமங்களை அழித்து நியாயத்தை நிலைநாட்ட கடவுள் சிவன் ஒருபோதும் விரதம் இருக்க வில்லை. தேர்தலில் போட்டியிட வில்லை. அகிம்சை வழியில் போராடவில்லை. மாறாக கையில் சூலாயுதம் எந்தி வன்முறை மூலம் அக்கிரமார்களை கொன்றே நியாயம் கிடைக்கச் செய்துள்ளார் என்றே கூறுகின்றது. கடவுள் சிவன் மட்டுமல்ல, கையில் ஆயுதம் இன்றி எந்தவொரு இந்துக் கடவுளையும் நாம் காண முடியாது. அனைத்து இந்துக் கடவுளும் வன்முறை மூலமே தீர்வு கிடைக்கும் என்கின்றனர். எனவே கடவுள் சிவன் காட்டிய வழியில் இந்தக்கள் தமக்குரிய நியாயத்திற்காக ஆயுதம் ஏந்தினால் கோத்தா வாழ்த்து தெரிவிப்பாரா? கொஞ்சம் யோசியுங்கள் இந்துக்களே. குறிப்பு - வர்க்கப் போராட்டத்தில் வன்முறையின்றி எந்தவொரு தீர்வும் கிடைத்ததில்லை - தோழர் லெனின் Image may contain: one or more people Image may contain: 1 person, glasses and close-up

No comments:

Post a Comment