Friday, February 28, 2020

நல்லது நடந்தால் கடவுள் செயல்.

நல்லது நடந்தால் கடவுள் செயல். கெட்டது நடந்தால் விதி எனில் மனிதனுக்கு மூளை எதற்கு? மனித மூளையில் உள்ள மயலின் நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 176000 கிலோ மீற்றர் என்கிறார்கள். மனித மூளையில் உள்ள 60 பில்லியன் நரம்பணுக்களில் சுமார் 10 பில்லியன் புறணிக் கோபுர உயிரணுக்கள். இவை தமக்குள் சமிக்கைகளை அனுப்பிக்கொள்ள ஏறத்தாழ 100 டிரிலியன் நரம்பிணைப்புகளை பயன்படுத்துகின்றன. நல்லது நடந்தால் கடவுள் செயல் , கெட்டது நடந்தால் அது விதி எனில் இத்தகைய சிறப்பான மூளை மனிதனுக்கு எதற்கு? பூசை செய்யவா? சிவன் என் முப்பாட்டன் என்று முகநூலில் படம் போடுற பயலுகள் எல்லாம் ரோட்டைக் கடக்கும்போது சிவனை நம்புவதில்லை. மாறாக எதிரில் இருக்கும் சிக்னல் லைட்டையே நம்பி கடக்கின்றனர். உலகம் உருண்டை என்று கூறிய விஞ்ஞானியை கொன்ற பாப்பரசர்கள்; எல்லாம் இப்போது அப்பிள் போனில் கூகிளில்தான் இயேசுவை தேடுகின்ற நிலைமை. ஆம். கடவுள் இருக்கிறார் என்று கூறும் கருத்துமுதல்வாதிகள் எல்லாம் நடைமுறையில் கடவுள் இல்லை என்னும் பொருள்முதல்வாதிகளாகவே வாழுகின்றனர். உலப் புகழ்பெற்ற அறிஞர் ஸ்டீபன் கேவாக்கிங் கேட்கிறார் “கடவுள் தன்னால் தூக்க முடியாத ஒரு கல்லைப் படைக்க முடியுமா?” பக்தர்களே உங்கள் பதில் என்ன? Image may contain: one or more people

No comments:

Post a Comment