Friday, February 28, 2020

இவர்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும்?

•இவர்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும்? செய்தி - இலங்கை 72வது சுதந்திரதினத்தை கோலாகமாக கொண்டாடியது. முப்படைகள் அணிவகுக்க பீரங்கி குண்டுகள் முழங்க ஜனாதிபதி தேசியக்கொடி ஏற்றினார். வரலாற்றில் முதல்முறையாக, முஸ்லிம் பிரதிநிதி இல்லாத அமைச்சரவை தமிழருக்கு வெறும் இரண்டு அமைச்சுகள் தமிழில் தேசியகீதம் பாட தடை 512 கைதிகள் விடுதலை. ஆனால் ஒரு தமிழ் அரசியல் கைதிகூட விடுதலை செய்யப்படவில்லை இத்தனையும் செய்தவிட்டு “ அனைத்து இனங்களும் சமமாக நடத்தப்படும்” என ஜனாதிபதி கோத்தா பேசியுள்ளார். சரி. பரவாயில்லை. என்னவாவது பேசிவிட்டு போகட்டும். ஆனால் புலிகளை அழித்தால் மக்கள் வாழ்வில் பாலும் தேனும் ஆறாக ஓடும் என்றீர்களே? ஏன் இன்னும் ஓடவில்லை? புலிகளை அழித்து பத்து வருடமாகிவிட்டதே. ஏன் இன்னும் இவர்களுக்கு ஒரு வீடு கிடைக்கவில்லை? நல்ல உடை உணவு கிடைக்கவில்லை? இவர்கள் ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்திற்கு மேலாக வாரத்தில் ஏழு நாட்களும் உழைக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் தலைமீது எப்படி 58 பில்லியன் டாலர் கடன் வந்தது? பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 3 லட்சம் ரூபா கடனுடன் பிறக்கிறது என்கிறீர்களே, அப்படியென்றால் அந்த பணம் எல்லாம் எங்கேயடா போயிற்று? Image may contain: 1 person, sitting, standing and outdoor

No comments:

Post a Comment