•"தமிழகத்தின் ஈழ அகதிகள்"
கடந்த 25 வருடங்களாக தமிழகத்தில் அகதியாக வாழ்ந்துவரும் தொ. பத்தினாதன் எழுதி வெளிவந்திருக்கும் நூல் "தமிழகத்தின் ஈழ அகதிகள்"
தமிழகத்தில் பல இலக்கிய ஜாம்பவான்கள் இருக்கிறார்கள. ஈழத்தமிழர் மீது அனுதாபம் கொண்ட எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஆனால் யாருமே தங்கள் கண்முன் பல வருடங்களாக தன்பத்தை அனுபவித்து வரும் ஈழ அகதிகளின் அவலங்களை பதிவு செய்ய முன்வரவில்லை.
அண்மையில் வன்னி சென்ற கவிஞர் வைரமுத்துவும்கூட முள்ளிவாயக்கால் அவலத்தை ஈழகாவியமாக படைப்பேன் என்றார்.
ஆனால் அவரும்கூட கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் வாழ்ந்து வரும் அகதிகளின் அவலத்தை காவியம் படைக்காவிடினும் ஒரு திரைப்படப் பாடலாவது இதவரை படைக்கவில்லை.
இந்த நிலையில் ஈழ அகதியான பத்தினாதன் அவர்கள் அகதிகளின் அவலத்தின் ஒரு பகுதியை "தமிழகத்தின் ஈழ அகதிகள்" என்னும் நூலாக தந்துள்ளார்.
தமிழகத்தில் வாழும் அகதிகள் குறித்து வரும் முதல் நூலாக இது இருக்கிறது. இதற்கு முன்னர் அவர் "போரின் மறுபக்கம்" என்னும் தனது சுயசரிதை நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
தொ.பத்தினாதன் அவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது. வரவேற்கப்பட வேண்டியது. எதிர்வரும் காலங்களில் அகதிகள் குறித்து பல எழுத்துக்கள் வருவதற்கு இவர் வழிகோலியுள்ளார்.
இவருடைய இந் நூல் எதிர்வரும் 13.02.2016 யன்று லண்டனில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
•குறிப்பு- தமிழகத்தில் உள்ள சிறப்புமுகாம் பற்றியும் அதில் அடைத்துவைக்கப்படும் ஈழதமிழ் அகதிகள் மீதான சித்திரவதைகள் குறித்தும் இவருடைய இரு நூல்களிலும் ஏன் எதுவுமே குறிப்பிடப்படவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
No comments:
Post a Comment