Monday, February 15, 2016

•லண்டன் ஈஸ்ட்காமில் நடைபெற்ற நூல் அறிமுக நிகழ்வு

•லண்டன் ஈஸ்ட்காமில் நடைபெற்ற நூல் அறிமுக நிகழ்வு
நேற்றைய தினம் (13.02.2016) மாலை 5 மணியளவில் லண்டன் ஈஸ்ட்காம் நகரில் நூல் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.
தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் "தமிழகத்தின் ஈழ அகதிகள்","இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள்", "ஆதிரை" ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.
இரு அமர்வுகளாக நிகழ்வு நடைபெற்றது. அமர்வு ஒன்றில் தொ.பத்தினாதன் எழுதிய "தமிழகத்தின் ஈழ அகதிகள்", மற்றும் கருணாகரன் எழுதிய "இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள்" நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
அமர்வு இரண்டில் சயந்தன் எழுதிய "ஆதிரை" நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
ராகவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதலாவது அமர்வில் தொ.பத்தினாதன் எழுதிய "தமிழகத்தின் ஈழ அகதிகள்" என்னும் நூலை வாசன் அவர்கள் அறிமுகம் செய்து உரையாற்றினார்.
அதையடுத்து கருணாகரன் அவர்கள் எழுதிய கவிதை தொகுப்பான "இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள்" நூலை கோகுல ரூபன் அவர்கள் அறிமுகம் செய்து உரையாற்றினார்.
பௌசர் அவர்கள் தலைமைதாங்கிய இரண்டாவது அமர்வில் சயந்தன் எழுதிய "ஆதிரை" நாவலை மாதவி சிவலீலன் அவர்கள் அறிமுகம் செய்து உரையாற்றினார்.
ஹரி ராஜலட்சுமி அவர்கள் தவிர்க்கமுடியாத காரணங்களினால் நிகழ்வில் பங்குபற்ற முடியவில்லை என்றும் அவரது உரையின் சில பகுதிகள் பௌசரினால் வாசிக்கப்பட்டது.
"ஆதிரை" நாவலாசிரியர் சயந்தன் அவர்கள் சுவிற்சலாந்தில் இருந்து வருகை தந்திருந்தார். அவர் பார்வையாளர்களின் கருத்துகளுக்கு பதில் அளித்து உரையாற்றினார்.
தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் தொடர்ந்து நூல் அறிமுக நிகழ்வுகளை நடத்துகிறது. லண்டனில் தமிழ் இலக்கியத்திற்கான அதன் பங்களிப்பு நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.

No comments:

Post a Comment