Monday, February 15, 2016

சம்பந்தர் அய்யாவின் (நீலிக்)கண்ணீர்!

•சம்பந்தர் அய்யாவின் (நீலிக்)கண்ணீர்!
கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படாமல் இருப்பது குறித்து வராத கண்ணீர்
கைதிகளின் விடுதலைக்கு மாணவன் தர்சன் தற்கொலை செய்தபோது வராத கண்ணீர்
காணமல்போனோர் அனைவரும் இறந்துவிட்டார்கள் என்று ரணில் கூறிய போது வராத கண்ணீர்
அகதிகள் இன்னும் மீள் குடியேற்றம் செய்யப்படாமை குறித்து வராத கண்ணீர்
ராணுவம் தமிழ் பெண்களை பாலியல் வல்லறவு செய்வது குறித்து வராத கண்ணீர்
பரீட்சைக்கு கட்டணம் கட்டுவதற்காக சிறுவன் ஒருவன் திருடியதாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதை அறிந்தபோது வராத கண்ணீர்
வறுமையில் தாய் ஒருவர் தன் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்றபோது வராத கண்ணீர்.
வறுமையின் கொடுமையில் இறந்த முன்னாள் போராளிக்கு இறுதிச்சடங்கு செய்யக்கூட பணம் இல்லாத நிலை கண்டு வராத கண்ணீர்
தமிழில் தேசியகீதம் பாடும்போது கண்ணீர் வந்தது என்றால் அதை எப்படி நம்புவது?
தமிழ் மக்களின்,
கைதிகளின் விடுதலைக்காக சோசலிச முன்னனி போராடுகிறது
சம்பூர் அகதிகளின் பிரச்சனைக்காக ஜே.வி.பி போராடுகிறது
மாணவர்கள் பிரச்சனைக்காக சமவுரிமை இயக்கம் போராடுகிறது.
சுன்னாகம் நீர்ப் பிரச்சனைக்காக புதிய ஜனநாய முன்னனி போராடுகிறது.
பாலியல் வல்லுறவுகளுக்கு எதிராக மாதர் முன்னனி போராடுகிறது.
ஆனால் தமிழ் மக்களிடம் பாராளுமன்ற பதவிகளை பெற்றுக்கொண்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ன செய்கிறது?
தமக்கு சம்பள உயர்வு கேட்கிறார்கள்
தமக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்கிறார்கள்
வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கிறார்கள்
தமது குடும்பங்களை வெளிநாடுகளில் வைத்திருக்கிறார்கள்.
இவர்கள்,
மக்களை சந்திப்பதில்லை
மக்களுக்கு ஆறுதல் சொல்வதுமில்லை
மக்களுக்காக குரல் கொடுப்பதில்லை
மக்களுக்காக போராடுவதில்லை.
இந்த லட்சணத்தில் சம்பந்தர் அய்யாவுக்கு வாழ்நாள் வீரர் விருது வேற கொடுக்கிறார்கள்.
எதற்காக இந்த விருது கொடுக்கிறார்கள்?
நல்லாட்சி நடக்கிறது என்று கூறியதற்காகவா?
நடந்தது இனப்படுகொலை அல்ல என்று கூறியதற்காகவா?
மகிந்தவை தேசிய தலைவர் என்று கூறியதற்காகவா?
சிங்கக்கொடியை தூக்கிப் பிடித்தமைக்காகவா?
பாராளுமன்றத்தில் நித்திரை கொள்வதற்காகவா?
சம்பந்தர் அய்யா அவர்களே!
மன்னிக்கவேண்டும். தங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க முடியவில்லை. வயதானவர்கள் இறந்தால்கூட இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாம் என நினைப்பதே பொதுவான தமிழர் வழக்கம். ஆனால் ஒரு சிலரை மட்டுமே இன்னும் சாகவில்லையா என நினைக்க தோன்றும். உங்களைப்பற்றி அத்தகைய நினைப்பே வந்து தொலைக்கிறது. என்ன செய்ய?

No comments:

Post a Comment