Monday, February 15, 2016

என்று தணியும் இந்த அடிமைகள் மோகம்?

என்று தணியும் இந்த அடிமைகள் மோகம்?
• காவிரியில் கழிவு நீர் கலப்பது பற்றிப் பேச தமிழகஅரசுக்கு உரிமை இல்லையாம்.
• தமிழக விவசாய நிலங்களினூடாக எரிவாயுக் குழாய் போடவேண்டாம் என்று கூற தமிழக அரசுக்கு உரிமை இல்லையாம்.
• ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த தமிழக அரசுக்கு உரிமை இல்லையாம்.
• தமிழகத்தில் அணுக் கழிவுகளை தடுப்பதற்கு தமிழக அரசுக்கு உரிமை இல்லையாம்
.
• தமிழக மீனவன் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதைத் தடுக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லையாம்.
• கச்சதீவு குறித்து பேச தமிழக அரசுக்கு உரிமை இல்லையாம்.
• அப்பாவியான பேரறிவாளனை விடுதலை செய்யவும் தமிழக அரசுக்கு உரிமை இல்லையாம்.
ஆனால் இந்த உரிமையற்ற தமிழக அரசை பிடிப்பதற்கு ஏன் எல்லோரும் போட்டி போடுகின்றார்கள்?
தமிழக உரிமைக்காக போராட வக்கற்ற ஜெயா அம்மையாரின் தமிழக அரசு கொடியை எரித்தால் மட்டும் பாய்ந்து வந்து கையை முறிக்கிறது!
தமிழக உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய கலைஞரின் தி.மு.க தேர்தல் கூட்டணிக்காக கடைவிரித்துவிட்டு காத்து இருக்கிறது.
ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளுக்கு தமிழக அரசின் உரிமை குறித்து எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் கவனம் எல்லாம் பதவியை பிடித்து பணம் சம்பாதிப்பதே!
தமிழ் மக்களுக்காக எந்த குரலும் கொடுக்காத ரஜனிக்கு விருது கொடுக்கிறார்கள்.
அவர் தன் சட்டையில் இருந்த தூசியை தன் கையால் தட்டியதை எளிமை என்று புகழ்கிறார்கள்.
நல்லவேளை, அவர் தன் கையால் தன் குண்டியை கழுவுவதை எளிமை என்று புகழாமல் விட்டார்கள். அந்தளவில் திருப்தி கொள்வோம்.
எப்போது எமது தமிழினம் தனது அடிமைநிலையை உணர்ந்து கொள்ளும்?
எப்போது எமது தமிழினம் தனது அடிமை நிலைக்கு எதிராக போராடும்?

No comments:

Post a Comment