Monday, February 15, 2016

•"விசாரணை" படம் மட்டுமல்ல இன்றைய யதார்தமும்கூட!

•"விசாரணை" படம் மட்டுமல்ல இன்றைய யதார்தமும்கூட!
வெற்றிமாறன் அவர்களின் "விசாரணை" படமானது தமிழக காவல்துறையின் உண்மை முகத்தை காட்டுகிறது.
இந்த படத்தை பார்க்கும்போது 1991ம் ஆண்டு நள்ளிரவு 1 மணிக்கு கியூ பிரிவு பொலிசார் என்னை கைது செய்தது நினைவுக்கு வருகிறது.
இந்த படத்திலாவது நீதிபதியிடம் குறைகளைக் கூற முடிகிறது. ஆனால் நான் கைது செய்யப்பட்டபோது எதற்காக கைது செய்யப்படுகிறேன் என்று கைது செய்த கியூ பிராஞ் டிஎஸ்பி ராமையாவும் சொல்லவில்லை. எனக்கு வழக்கு பதிவு செய்த சிபிசிஜடி பொலிசாரும் சொல்லவில்லை. சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதியும் கூறவில்லை.
பொய் வழக்கு போடுவதற்கு ஆந்திரப்பிரதேச பொலிசார் எப்படியெல்லாம் முயற்சி செய்கிறார்கள் என்பதையும் இப்படம் காட்டுகிறது. ஆனால் எந்தவித கஸ்டமும் இன்றி தமிழக பொலிசார் ஈழ அகதிகள் மீது வழக்கு போட்டதை யார் காட்டுவார்கள்?
ஒரேயொரு ஜெலட்டின் குச்சியை காசு கொடுத்து வாங்கிவிட்டு அதைவைத்து பாம்பன் பாலத்திற்கு குண்டு வைக்க திட்டம் போட்டதாக பலமுறை வழக்கு பதிவு செய்தனர் தமிழக பொலிசார்.
ஒரு ஜெலட்டின் குச்சியால் பாமபன்; பாலத்தை தகர்க்க முடியுமா என்று வழக்கு போடும் பொலிசாரும் யோசிப்பதில்லை. இது உண்மையான வழக்குதானா என்று நீதிபதியும் அக்கறைப்படுவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த செய்தியை போடும் ஊடகங்களும் விசாரித்துக் கொள்வதில்லை.
விசாரணை படம் எப்படி தணிக்கையின்றி திரைக்கு வந்திருக்கின்றது என்று ஆச்சரி;யமாக இருக்கிறது. இதற்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கம் விழிப்புணர்வுதான் காரணமாகும்.
இனி தரமான, யதார்த்தமான படங்கள் வருவதற்கு ஒரு தொடக்க புள்ளியாக இந்த விசாரணை படம் அமைந்துள்ளது. மக்களாலும் இது ஒரு வெற்றிப்படமாக்கப்பட்டிருக்கிறது.
அண்மையில் தேசியகொடியை எரித்ததாக கைது செய்யப்பட்ட திலீபன் சட்டத்திற்கு புறம்பான வகையில் பொலிசாரினால் கை உடைக்கபட்டு அது போட்டோ பிடிக்கப்பட்டு வெளியே கொடுக்கப்பட்டிருக்கிறது.
அந்த படத்தை போட்டு "நாம் தமிழர்" தலைவர் சீமானுக்கும் இதே கதிதான் வரும் என்று பாஜக கல்யாணராமன் மிரட்டுகிறார். இது தமிழக பொலிசாருக்கும் காவிக் கும்பல்களுக்கும் உள்ள தொடர்பை நன்கு காட்டுகிறது.
இவ்வாறான மனிதவுரிமைக்கு எதிரான தமிழக பொலிசாரின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளிவைக்க விசாரணை போன்ற படங்கள் வரவேண்டும்.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வையம் நம்பிக்கையையம் உருவாக்க இவை உதவ வேண்டும்.

No comments:

Post a Comment