Monday, February 15, 2016

சம்பந்தர் அய்யாவுக்கு விருது வழங்கியவர்கள் ஈழவேந்தன் அய்யாவுக்காக குரல் கொடுப்பார்களா?

•சம்பந்தர் அய்யாவுக்கு விருது வழங்கியவர்கள்
ஈழவேந்தன் அய்யாவுக்காக குரல் கொடுப்பார்களா?
ஈழவேந்தன் அய்யா,
தனி சிங்கள சட்டம் வந்தபோது தனது வங்கிப் பதவியை கைவிட்டவர்
தமிழ் மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்
எந்த ஆயுத இயக்கத்திலும் உறுப்பினராக அவர் இருந்ததில்லை
ஒருபோதும் அவர் ஆயுதம் ஏந்திப் போராடியதில்லை.
இருந்தபோதும் இந்திய அரசு இவரை இந்தியாவில் இருந்து வெளியேற்றியது.
இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றியுள்ளார்.
சக பாராளுமன்ற உறுப்பினர் இருவர் கொல்லப்பட்டபோது பாதுகாப்பு கருதி கனடாவில் அகதி அடைக்கலம் கோரினார்.
ஆனால் கனடா அரசு அவரது அகதி கோரிக்கையை நிராகரித்து அவரை நாடு கடத்த முனைகிறது.
சம்பந்தர் அய்யாவும் சுமந்திரனும் இலங்கையில் நல்லாட்சி நிலவுகிறது என்று பிரச்சாரம் செய்வதால் அதனை காரணம் காட்டி நாடுகள் அகதி அந்தஸ்து கோரிக்கைகளை நிராகரிக்கின்றன.
நல்லாட்சி நடப்பதாக கூறும் சம்பந்தர் அய்யாவுக்கு கனடாவில் விருது வழங்கியவர்கள் ஈழவேந்தன் அய்யாவுக்காக இதுவரை குரல் கொடுக்கவில்லை
இவர்கள் குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை இவ்வாறு விருது வழங்குவது அகதி அந்தஸ்து கோருவோருக்கு பாதகம் இழைக்காமலாவது இருக்கலாம் அல்லவா?
பாதர் இமாணுவேல் அடிகளார் தான் இலங்கை செல்ல வேண்டும் என்பதற்காக கொஞ்சம்கூட சிந்திக்காமல் அகதிகளின் நலனுக்கு எதிராக செயற்படுகிறார்.
பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள கரி அனந்தசங்கரி என்பவரும் ஈழவேந்தன் அய்யாவுக்காக இதுவரை குரல் கொடுக்காதது வேதனையே.
ஈழவேந்தன் அய்யா அவர்கள் தனது முதுமைப் பருவத்திலாவது ஓரளவு நிம்மதியாக இருக்க உதவவேண்டியது தமிழர்களின் கடமையாகும்.
இனிமேலாவது சம்பந்தர் அய்யாவுக்கு விருது கொடுத்தவர்கள் இந்த ஈழவேந்தன் அய்யாவுக்கும் குரல் கொடுக்க வேண்டும்.
கொடுப்பார்களா?

No comments:

Post a Comment