Sunday, July 23, 2017

•சீதை கற்பில் சிறந்தவளாக இருந்தால் மட்டும் போதாது தான் கற்புக்கரசி என்பதை அவள் நிரூபிக்க வேண்டும் என்றார் ராமர்!

•சீதை கற்பில் சிறந்தவளாக இருந்தால் மட்டும் போதாது
தான் கற்புக்கரசி என்பதை அவள் நிரூபிக்க வேண்டும் என்றார் ராமர்!
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது. தான் நல்லவர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கோருகிறார் சுமந்திரன்.
முதலமைச்சர் மீது 43 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது என்றும் அது குறித்து ஏன் இன்னும் முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை என்றும் அவர் கேட்கிறார்.
யாழ்ப்பாணத்தில் முதலமைச்சர் தங்கும் வீட்டிற்கு மாதம் ஒன்றிற்கு மூன்று லட்சம் ரூபா வாடகை செலுத்தப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு வந்துள்ளது.
அந்த வாடகை வீட்டிற்கு எட்டு லட்சம் ரூபாவுக்கு தளவாடங்கள் வாங்கப்பட்டுள்ளன. மாகாணசபை நிதி இவ்வாறு ஊதாரித்தனமாக செலவு செய்யப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே அவைத் தலைவர் சிவஞானம் பல லட்சம் ரூபா செலவில் இதுவரை மூன்று சொகுசு ஆசனங்களை வாங்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
அதுமட்டுமன்றி மாகாணசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் ஜனாதிபதியின் விசேட பணிப்பின் பேரில் சொகுசு வாகனம் வழங்கபடவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வடமாகாணசபை குறித்து வெளிவரும் செய்திகள் பலத்த ஏமாற்றம் அளிக்கின்றன. இதுகுறித்து மக்களுக்கு விளக்கமளிக்க முதலமைச்சர் கடமைப்பட்டிருக்கிறார்.
சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்பார்கள். அதுபோல் முதலமைச்சர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டுமெனின் அவர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்.
தன்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவர் தொடர்ந்து மௌனம் சாதித்தால் அவரையும் சந்தேகப்படுவது தவிர்க்க முடியாதது.

No comments:

Post a Comment