Sunday, July 23, 2017

•நடிகை கஸ்தூரியை கருணா வைத்திருந்தாரா?

•நடிகை கஸ்தூரியை கருணா வைத்திருந்தாரா?
நடிகை கஸ்தூரி தற்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
அண்மையில் விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றியும் அதன் தலைவர் பிரபாகரன் குறித்தும் அவர் கருத்துக்கள் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தன்னை “சொப்பனசுந்தரி” என்றும் “கருணா வைப்பாட்டியாக வைத்திருந்தார்” என்றும் விமர்சனங்கள் வந்துள்ளதாக அவர் கூறுகிறார்.
தான் இவ்வாறு பொதுவெளியில் கருத்து கூறுவதால் தன்னை “விபச்சாரி” என்றும் “தேவடியாள்” என்றும் தரக்குறைவாக சிலர் திட்டுவதாகவும் அவர் கூறுகிறார்.
நடிகை கஸ்தூரி திடீரென இவ்வாறு கருத்துக்கள் கூறுவது விளம்பரத்திற்காகவா அல்லது அவரது இயல்பான வெளிப்பாடா என்று தெரியவில்லை.
எதுவாயினும் அவர் தெரிவிக்கும் கருத்துக்களுக்காக ஆண்கள் அவரை தரக்குறைவாக திட்டுவது எந்த வித்திலும் ஏற்றுக்கொள்க்கூடியது அல்ல.
அதுமட்டுமல்ல இவ்வாறு தரக்குறைவாக விமர்சிப்பது அவர் கூறும் கருத்துகளுக்கு உரிய பதில்களாகவும் இருக்கமாட்டாது.
கஸ்தூரிக்கு மட்டுமல்ல பொதுவெளியில் கருத்து சொல்ல முனையும் பெண்கள் அனைவருக்குமே இந்த நிலைதான் இருக்கிறது.
பெண்கள் யாராவது தைரியமாக கருத்து சொல்ல முனவந்தால் உடனே அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை இழுத்து விமர்சிக்கிறார்கள்.
உலக ஜனத்தொகையில் ஆண்களைவிட பெண்களே அதிகம். ஜனநாயக விதிப்படி அதிகாரம் பெண்களிடமே இருக்க வேண்டும்.
மாதராய் பிறக்க மாதவம் புரிந்திட வேண்டும் என்று ஒருபுறத்தில் பாடிக்கொண்டு மறுபுறத்தில் மாதர்களை இழிவு படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
பெண் விடுதலை பெறாத எந்த சமூகம் விடுதலை பெற முடியாது என்று தோழர் லெனின் கூறினார்.
ஒருபுறத்pல் பெண் விடுதலை குறித்து எழுதுகிறோம். மறுபுறத்தில் கருத்து சொல்ல வரும் பெண்களை தரக் குறைவாக விமர்சித்து விரட்டுகிறோம்.
இன்று முகநூலில்கூட ஒருசில பெண்களே தங்கள் சொந்த முகம் காட்டி அரசியல் கருத்து எழுதுகிறார்கள். அவர்களும் பல இன்னல்களை சந்தித்த வண்ணமே இருக்கின்றார்கள்.
இந்நிலை மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும்.

No comments:

Post a Comment