Sunday, July 23, 2017

இது திருச்சி பிக் பாஸ்!

இது திருச்சி பிக் பாஸ்!
100 நாட்கள். 30 கமிராக்கள், 30 நடிகர்கள். இது நடிகர் கமல் வழங்கும் விஜய் டிவி பிக் பாஸ்.
முழு தமிழகமே இதையே பார்க்கிறது. நடிகை ஓவியாக்கு ஒரு கோடி பேர் வாக்களிப்பு.
திருச்சியில் சிறப்புமுகாம் என்று ஒன்று இருக்கிறது. இதில் அப்பாவி ஈழ தமிழ் அகதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் அடைக்கப்பட்டிருப்பது 100 நாட்கள் அல்ல. பல வருடங்களாக. இவர்களைச் சுற்றி 30 கமிராக்கள் இல்லை. ஆனால் 100 பொலிசார் உயர்ந்த கொபுரங்கள் அமைத்து காவல் காக்கின்றனர்.
இவர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி பல தடவைகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் வாக்குறுதி அளித்துவிட்டு பின்னர் அவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகின்றனர்.
நடிகை ஓவியாவுக்காக வாக்களித்த ஒரு கோடி தமிழரில் ஒரு தமிழர்கூட இந்த அகதிக்களுக்காக இரக்கப்படவில்லை.
60 கோடி ரூபா மக்கள் பணத்தை ஊழல் செய்து நாலு வருடம் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு சிறையில் பல சலுகைகள்.
அவர் யோகா செய்ய ஒரு அறை, அவர் சமையல் செய்ய ஒரு அறை, அவர் தூங்குவதற்கு ஒரு அறை என மொத்தம் ஜந்து அறைகள் அவர் ஒருவருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி அவர் அவ்வப்போது வெளியே சென்று சொப்பிங் வேறு செய்கிறாராம்.
ஆனால் சிறப்புமுகாமில் ஒரு அறையில் பல அகதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அதனுள்தான் குளிக்க வேண்டும். மல சலம் கழிக்க வேண்டும், தூங்க வேண்டும். சாப்பிட வேண்டும்.
அகதிகள் தமது நாட்டிற்கு திரும்பிச் செல்ல விரும்பினால் அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் நீதிமன்ற உத்தரவிற்கு மாறாக அகதிகளை சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருப்பதோடு அவர்களை சித்திரவதையும் செய்கிறது இந்திய அரசு.
பாவம். இந்த சிறப்புமுகாம் அகதிகள். இவர்கள் தமிழராக பிறந்தது தவறு. அதைவிட தவறு அகதியாக தமிழ்நாட்டிற்கு போனது என்றே நினைக்க தோன்றுகிறது.
ஒருவேளை அகதிகள் ஓவியாவாக இருந்திருந்தால் ஒரு கோடி தமிழர்கள் குரல் கொடுத்திருப்பார்கள் போலும்!

No comments:

Post a Comment