Sunday, July 30, 2017

•மோடி ஏன் அப்துல்கலாமுக்கு சிலை வைத்தார்?

•மோடி ஏன் அப்துல்கலாமுக்கு சிலை வைத்தார்?
விஞ்ஞானி கலாம் என்றார்கள். கடைசியில் பார்த்தால் அவரை வித்துவான் கலாம் ஆக்கிவிட்டார்கள்.
ராக்கட் விட்ட விஞ்ஞானியை எதோ வீணை வாசித்த வித்துவான் போல் சிலையை வைத்துள்ளார்கள்.
அதுகூட பரவாயில்லை. பக்கதில் பகவத்கீதையை வேற வைத்துள்ளார்கள். நல்லவேளை பூணூல் போடாமல் விட்டுவிட்டார்கள்.
சரி அதை விடுவம். ஆனால் பிரதமர் மோடி ஏன் அப்துல் கலாமுக்கு சிலை திறந்து வைத்தார்?
கலாம் இராமேஸ்வரத்தில் பிறந்தும் இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டபோது மௌனமாக இருந்தமைக்காகவா? அல்லது,
கலாம் ஒரு தமிழராக இருந்தும் ஈழத்தில் 40 ஆயிரம் தமிழ்மக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டபோது மௌனமாக இருந்தமைக்காகவா? அல்லது,
இலங்கை சென்று இனப் படுகொலை செய்த மகிந்த ராஜபக்சவின் கரங்களை கொஞ்சம்கூட கூச்சமின்றி கைகுலுக்கியமைக்காகவா? அல்லது,
கூடங்குளம் அணு உலையால் ஆபத்து இல்லை என்று தமிழ் மக்கள் நலனுக்கு விரோதமாக பேட்டி கொடுத்தமைக்காகவா? அல்லது,
நடிகை சொர்ணமால்யாதான் வேணும் என்று அடம்பிடித்த கொலைகார சின்ன சங்கராச்சாரியாரை சென்று வணங்கியமைக்காகவா? அல்லது
தமிழ் இளைஞர்களை இந்தியனாக கனவு காணும்படி கூறியமைக்காகவா?

No comments:

Post a Comment