Sunday, July 23, 2017

•அம்மா! நீ ஒரு “நடுநிலை நக்கி”

•அம்மா! நீ ஒரு “நடுநிலை நக்கி”
மகன்- அம்மா! நான் போராட்டத்திற்குப் போகிறேன்.
அம்மா- காணாமல் போனவர்களின் உறவுகள் 147 நாட்களாக போராடுகிறார்களே. அந்த போராட்டத்திற்கா போகிறாய்?
மகன்- இல்லை அம்மா.
அம்மா- அப்ப. கேப்பாப்பிலவு மக்களின் காணி மீட்பு போராட்டத்திற்கா போகிறாய்?
மகன்- இல்லை அம்மா. எமது காட்டைக் காக்க போராடப் போகிறேன்.
அம்மா- ஓ! காட்டை அழித்து சிங்கள குடியேற்றம் செய்வதற்கு எதிராகப் போராடப் போகிறாயா?
மகன்- இல்லை அம்மா. இது முல்லைத்தீவில் காட்டை அழித்து முஸ்லிம்களை குடியேற்றப் போகிறார்கள்.
அம்மா- இப்ப உன் பிரச்சனை காட்டை அழிப்பதா? அல்லது முஸ்லிம்களை குடியேற்றுவதா?
மகன்- அம்மா நீ ஒரு நடுநிலை நக்கி
அம்மா- என்டா என்ர கேள்விக்கு இதுதான் உன் பதிலா?
மகன்- முஸ்லிம்கள் திரும்பி வரலாம். ஆனால் காட்டை அழித்து திட்டமிட்ட குடியேற்றம் செய்ய அனுமதிக்க முடியாது.
அம்மா- ஏன்டா மகனே! மலையகத்தில காட்டை அழித்துதானே 10 லட்சம் தமிழர்களை ஆங்கிலேயன் குடியேற்றினான். அதைவிடு. 1975ல் சிறிமாவோ ஆட்சியில காட்டை அழித்து உருவாகிய திட்டம்தானே விஸ்வமடு, முத்தையன்கட்டு, முழங்காவில் எல்லாம்.
மகன்- அதெல்லாம் அப்ப நடந்தது. இப்ப காட்டை அழிக்க நாங்கள் விடமாட்டம்.
அம்மா- காட்டை அழிக் விடமாட்டம் என்று வன்னி மக்கள் அப்ப தடுத்திருந்தால் உன் அப்பாவும் நாங்களும் விஸ்வமடுவில் குடியேறியிருக்க முடியுமா?
மகன்- நாங்கள் தமிழர்கள். ஆனால் முஸ்லிம்களை குடியேற்ற அனுமதிக்க முடியாது.
அம்மா- அவர்களை குடியேற்ற அனுமதிக்க முடியாது என்று கூறுவதற்கு உனக்கு என்ன உரிமையடா இருக்கு? நீ பிறப்பதற்கு முன்னர் அவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்தவர்களடா?
மகன்- அவர்கள் எமது சகோதர்கள்தான். அவர்கள் தாராளமாக வந்து குடியேறலாம். ஆனால் காட்டை அழித்து குடியேற்ற அனுமதிக்க முடியாது.
அம்மா- சரி. அப்படியென்றால் அவர்களுக்கு ஒரு இடத்தை காட்டிவிட்டு அப்புறம் காட்டை அழிக்க வேண்டாம் என்று போராடு.
மகன்- இது நல்ல யோசனைதான். ஆனால் இதை என்னை போராடச் சொன்ன அண்ணமாரிடம் கேட்க முடியாதே.
அம்மா- ஏன்டா?
மகன்- அப்புறம் என்னையும் நடுநிலை நக்கி என்பார்களே!
குறிப்பு- கீழே உள்ள படம், கேப்பாப்புலவு மக்களின் காணி மீட்பு போராட்டத்திற்கு புத்தளம் முஸ்லிம் பெண்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்த போது.

No comments:

Post a Comment