Sunday, July 23, 2017

•தமிழ்மாறன் ஏன் கைது செய்யப்படவில்லை?

•தமிழ்மாறன் ஏன் கைது செய்யப்படவில்லை?
மாணவி வித்யாவிற்கு நீதி வழங்கப்படுமா?
பொலிசாரால் தேடப்படும் குற்றவாளியை எப்படி உமது வாகனத்தில் ஏற்றுவீர் ? என நீதிபதி சினத்துடன் தமிழ்மாறனிடம் கேட்டுள்ளார்.
சட்டப் பேராசிரியர் தமிழ்மாறன் குற்றவாளி சுவிஸ்குமார் தப்புவதற்கு உதவி செய்தது மட்டுமன்றி அவனுக்காக நீதிமன்றத்தில் பொய்சாட்சி சொல்லவும் முனைந்துள்ளார்.
சட்டப் பேராசிரியரின் சாட்சியத்தை நீதிமன்றம் எற்க மறுத்த பின்னரும்கூட அவர் மீது அரசு எந்த நடவடிக்கையும் இன்னும் எடுக்கவில்லை.
சட்டம் படித்த, சட்டம் படிப்பித்த ஒரு சட்டப் பேராசிரியரே சட்டவிரோதமாக குற்றவாளிக்கு உதவியது மட்டுமன்றி பொய் சாட்சி சொல்லவும் முனைந்துள்ளார்.
சட்டப் பேராசிரியர் தமிழ்மாறன் கேட்டுக்கொண்டதாலேயே உதவி பொலிஸ் அதிபர் சுவிஸ்குமாருக்கு உதவியுள்ளார்.
சட்டப் பேராசிரியரையும் உதவி பொலிஸ் அதிபரையும் ஒன்றாக யாழ் பொலிஸ் அலுவலகத்தில் பார்த்ததாக ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியம் கூறியுள்ளார்.
உதவி பொலிஸ் அதிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் சட்டப் பேராசிரியர் தமிழ்மாறன் இன்னும் கைது செய்யப்படவில்லை.
சட்டப் பேராசிரியர் கேட்டுக்கொண்டபடி உதவி செய்த இன்னொரு பொலிஸ் அதிகாரி சிறீகஜன். அவர் தற்போது தலைமறைவாகி விட்டார்.
அவரை கைது செய்ய பிடிவிறாந்து போடப்பட்டுள்ளது. ஆனால் அவரைத் தூண்டிய சட்டப் பேராசிரியர் தமிழ்மாறன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த சட்டப் பேராசிரியர் தமிழ்மாறன் தமிழரசுக்கட்சி பிரமுகர். இந்த வழக்கு குறித்து தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா மௌனம் சாதித்து வருவது சந்தேகத்தை தருகிறது.
சட்டப் பேராசிரியர் தமிழ்மாறன் கைது செய்யப்படாதது மாணவி வித்யாவுக்கு நீதி கிடைக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

No comments:

Post a Comment