Sunday, July 30, 2017

•ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிடில் இனப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டிருக்குமா?

•ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிடில்
இனப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டிருக்குமா?
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டிருக்காவிட்டால் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
முதலாவது,
ராஜீவ்காந்தியைக் கொன்றதால் தமிழ் இனத்தின் மீது வன்மம் காட்டப்படுகிறது எனில் இந்திராகாந்தியைக் கொன்ற சீக்கிய இன மன்மோகன் சிங்கிற்கு எப்படி பிரதமர் பதவி வழங்கப்பட்டது?
இரண்டாவது,
ஈழத்தில் இந்திய ராணுவம் செய்த கொடுமைகளுக்கு இந்தியாவின் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் நீதி வழங்கப்பட்டிருந்தால் ராஜீவ்காந்தி கொலை நடந்திருக்காது.
மூன்றாவது,
ராஜீவ்காந்தி கொலை நடந்திருக்காவிடினும் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண இந்தியா உதவாது என்பதே உண்மையாகும்.
இந்தியா எப்போதும் தனது நலன்களுக்காகவே இலங்கைப்பிரச்சனையில் தலையிட்டு வருகிறது.
இந்தியாவின் நோக்கம் இலங்கை மீதான ஆக்கிரமிப்பேயொழிய தமிழ் மக்களுக்கு உதவுவது அல்ல.
தனது நாட்டில் சிறுபான்மை தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கி வரும் இந்தியாவானது இலங்கையில் தமிழ் தேசிய இனத்திற்கு உதவும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும்.
தனது அயல்நாடுகளை எப்போதும் குழப்ப நிலையில் வைத்து அதனூடாக தனது ஆக்கிரமிப்பை நிகழ்த்த வேண்டும் என்பதே இந்திய வெளியுறவுக் கொள்கையாகும்.
இலங்கை அரசு ஒருவேளை தமிழீழத்தை தர முன்வந்தாலும் இந்திய அரசு அனுமதிக்காது என்பதை சம்பந்தர் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஈழத்தில் தமிழ் மகக்ள் உரிமை பெறுவது தமிழ்நாட்டில் உள்ள தமிழருக்கு உத்வேகத்தை கொடுக்கும் என இந்திய அரசு கருதுகிறது.
தமிழ்நாடு இந்தியாவில் இருந்து பிரிந்தால் முழு இந்தியாவுமே சிதறிவிடும் என இந்திய ஆளும் வர்க்கம் அஞ்சுகிறது.
நாகலாந்து மாநில மக்கள் தனி கொடி , தனி பாஸ்போட் வைத்திருக்க அனுமதிக்கும் இந்திய அரசு தமிழ்நாட்டில் ஈழத் தமிழருக்கு ஆதரவாய் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செய்யக்கூட மறுப்பதன் காரணம் இதுதான்.
•இந்திய அரசு இதுவரை தமிழீழத்தை அங்கீகரிக்கவில்லை. இனியும் அங்கீகரிக்கப் போவதில்லை
•இந்திய அரசு தமிழீழத்தை மட்டுமல்ல ஈழத் தமிழர்கள் தமிழக தமிழர்களைவிட அதிக உரிமை பெறுவதை ஒருபோதும் அனுமதிக்காது.
•இந்திய அரசின் நோக்கம் எப்போதும் இலங்கை மீதான ஆக்கிரமிப்பேயொழிய ஈழத் தமிழர்களுக்கு உதவுவது அல்ல.
இது சம்பந்தருக்கும் நன்கு தெரியும். ஆனால் தமது துரோகங்களை மறைப்பதற்கு புலிகள் மீது பழியை போடுகிறார்.
முதலில் புலிகள் பயங்கரவாதிகள் என்றார். இப்போது புலிகள் ராஜீவ்காந்தியைக் கொன்றதால்தான் தீர்வு கிடைக்கவில்லை என்கிறார்.
கடந்த 8 வருடமாக புலிகள் இல்லை. சம்பந்தரோ அல்லது இந்தியாவோ எந்த தீர்வையும் இதுவரை ஏன் பெற்றுத்தரவில்லை?

No comments:

Post a Comment