Friday, September 27, 2019

•கீழடி ஆய்வு !

•கீழடி ஆய்வு !
ஈழத் தமிழர் பெருமை கொள்ள முடியுமா?
மதுரை நகரத்திற்கு அருகில் கீழடியில் நடத்தப்படும் அகழ் ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.
இவை அமெரிக்காவில் புளோரிடாவில் பீட்டா அனெலிக்டிக்ஸ் ஆய்வகத்தினால் ஆயு;வு செய்து வெளியிடப்படும் முடிவுகள் என்பதால் நம்பகத்தன்மை கொண்டுள்ளன.
ஆய்வின் 3 முக்கிய முடிவுகள்
முதலாவது, கி.மு 600 ஆண்டளவில் எழுத்து வடிவத்துடன் கூடிய மொழியுடன் தமிழன் வாழ்ந்துள்ளான்.
இரண்டாவது, கீழடியில் காணப்படும் பல எழுத்து வடிவங்கள் சிந்துவெளி நாகரிகத்தில் காணப்படும் எழுத்துகளுடன் ஒத்து இருக்கின்றன.
மூன்றாவது, அக்காலத்திலேயே தமிழர் கடல் வாணிபத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
முடிவு , தமிழ் இனம் உலகில் தொன்மையான இனம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஈழத் தமிழருக்கு என்ன பெருமை?
இவ்வளவு காலமும் தமிழ் மக்களை “வந்தேறிகள்” என்று சிங்கள புத்த பிக்குகள் கூறி வருகின்றனர்.
இப்போது கீழடி ஆய்வு சிங்கள இனத்தைவிட தமிழ் இனம் தொன்மையான இனம் என்பதை நிரூபித்துள்ளது.
எனவே கீழடி நாகரீகம் குறித்து ஈழத் தமிழர் நிச்சயம் பெருமை கொள்ள முடியும்.

No comments:

Post a Comment