Friday, September 27, 2019

•ராம்ஜெத்மலானியும் முத்தையா முரளிதரனும்!

•ராம்ஜெத்மலானியும்
முத்தையா முரளிதரனும்!
ராம் ஜெத்மலானி தமிழரல்ல. ஆனால் இன்னொரு பிறப்பு தனக்கு கிடைக்குமானால் தான் தமிழராக பிறக்க விரும்புகிறேன் என்று கூறியவர்.
மூன்று தமிழர் உயிருக்கு ஆபத்து என்றவுடன் ஓடி வந்து வழக்காடி காப்பாற்றியவர். அதுமட்டுமல்ல அதற்கு ஒரு ரூபாகூட அவர் பெறவில்லை.
இந்த மூவர் தூக்கில் இடப்பட வேண்டும். அவர்கள் இறக்கும்நாளே என் வாழ்வில் முக்கிய நாள் என்று அவர் கூறியிருந்தால் அவருக்கு ஆளுனர் பதவியோ அல்லது ஜனாதிபதி பதவியோ பெற்றிருக்க முடியும்.
ஆனால் அவர் அவ்வாறு அற்ப சலகைகளுக்காக தன்னை விற்றுவிடவில்லை. அதனால்தான் அவர் இன்று மரணமடைந்தபோது அனைத்து தமிழரும் இரங்கல் தெரிவிக்கின்றனர்.
முத்ததையா முரளிதரன் தமிழர்தான். ஆனால் முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் தமிழர் கொல்லப்பட்ட நாள் தன் வாழ்வின் முக்கியநாள் என்கிறார்.
அதுமட்டுமல்ல தமிழ் இனப்படுகொலை செய்த கோத்தபாயாவை வாக்களித்து ஜனாதிபதியாக்க வேண்டும் எனவும் கோரியிருக்கிறார்.
என்ன செய்வது? காலம் எமக்கு ராம்ஜெத்மலானியை மட்டுமல்ல முத்தையா முரளிதரன்களையும் இனம் காட்டியே செல்கிறது.

No comments:

Post a Comment