Friday, September 27, 2019

•ஈழத் தமிழருக்கு இந்திய அரசு உதவுமா?

•ஈழத் தமிழருக்கு இந்திய அரசு உதவுமா?
அண்மையில் சம்பந்தர் ஐயா இந்தியா சென்று வந்திருப்பதாக செய்திகள் வந்தன.
அவர் தனது மருத்துவ செக்கப்பிற்காக சென்றதாக சிலரும், இல்லை மோடியை சந்திக்க சென்றதாக வேறு சிலரும் கூறுகின்றனர்.
ஆனால் அவர் மருத்துவ செக்கப்பிற்காக சென்ற அதேவேளை மோடியை சந்திக்க முயன்றதாகவும் அதற்காக தனக்கு நன்கு பழக்கமான ஒரு அதிகாரியை சந்தித்ததாகவும் தெரிய வருகிறது.
அந்த அதிகாரியுடன் சம்பந்தர் ஐயா என்ன பேசினார் என்று தெரியவில்iலை. எனவே அதுகுறித்து நாம் கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம்.
இந்திய பெண் அதிகாரி – என்ன சேர்? இன்னொரு கிளாஸ் வேண்டுமா? கவனம் சேர். இருதய ஆப்பிரேசன் செய்திருக்கிறீர்கள். உடம்பை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். இந்தியாவுக்காக நீங்கள் இன்னும் பத்து வருடங்களாவது உயிர் வாழ வேண்டும்.
சம்பந்தர் ஐயா - இல்லை மேடம். பிரைம் மினிஸ்டரை ஒருக்கால் சந்திக்க நீங்கள் உதவ முடியுமா?
இந்திய பெண் அதிகாரி - என்ன மிஸ்டர் சம்பந்தன், தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தரும்படி மோடியிடம் கேட்கப் போகிறீர்களா?
சம்பந்தர் ஐயா - சீ சீ என்ன மேடம்! இப்படிக் கேட்டுபுட்டீர்களே? அந்த கருமத்தை இதுவரை நான் ஒருமுறைகூட கேட்டதில்லையே. இனியும் அதை கேட்பேனா?
இந்திய பெண் அதிகாரி - அப்ப எதற்காக மோடிஜியை சந்திக்க விரும்புகிறீர்கள் சேர்?
சம்பந்தர் ஐயா - மோடி கடைசியாக இலங்கை வந்தபோது இரண்டு நிமிடங்கள் என்னை சந்தித்தார். டில்லிக்கு அழைத்து பேசுவதாக அப்போது கூறினார். அதனால நானும் தம்பி சுமந்திரனும் அழைப்பு எப்ப வரும் என்று காத்துக்கொண்டிருக்கிறோம் மேடம்.
இந்திய பெண் அதிகாரி – மோடிஜி உங்க தமிழர்களுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லையே. அப்புறம் எதற்கு அவரை சந்திக்க விரும்பகிறீர்கள் சேர்?
சம்பந்தர் ஐயா- எங்க கூட்டமைப்பு பெயர் ரொம்ப டமேஜ்யாய் போய்கிடக்கு. தேர்தல் வேற வரப்போகுது. என்ன சொல்லி இந்தமுறை தமிழ் மக்களை ஏமாற்றுவது என்றும் தெரியவில்லை?
இந்திய பெண் அதிகாரி– சரி, சரி, எலக்சன் வரப்போகுதாம். உங்க நிலைமை சரியில்லை என்று ரிப்போட் சொல்லுது. எப்படி சமாளிக்கப் போறீங்க?
சம்பந்தர் ஐயா- வழக்கம்போல் இந்தியா எங்களை காப்பாற்றும் என்று நம்பிக் கொண்டிருக்கிறம் மேடம். கைவிட்டுடுதாயுங்கோ.
இந்திய பெண் அதிகாரி - நாங்கள் வழக்கம்போல் உங்களுக்கு பணம் தருவோம். ஆனால் அப்புறம் என்ன இருந்தாலும் வோட்டு போடப் போகும் மக்களை எப்படி சமாளிக்கப் போறீங்க?
சம்பந்தர் ஐயா- அது ரொம்ப சிம்பிள் மேடம். அடுத்த வாரம் தீர்வு வரப்போகுது என்று அறிக்கை விட்டால் உடனே நம்பி வோட்டு போடுவார்கள் எமது மக்கள்.
இந்திய பெண் அதிகாரி - உண்மையாகவா? உடனே நம்பிவிடுவார்களா?
சம்பந்தர் ஐயா- அடுத்த வருடம் தீர்வு வரப் போகிறது என்று எத்தனை தடவை கூறிவிட்டேன். அத்தனை தடவையும் மக்கள் நம்பி எமக்கு வோட்டு போட்டிருக்கிறார்கள். ஒருமுறைகூட எங்கே தீர்வு என்று அவர்கள் என்னை கேட்டதேயில்லை மேடம்.
இந்திய பெண் அதிகாரி - ஆச்சரியமாக இருக்கிறது மிஸ்டர் சம்பந்தன்! தான் பதவிக்கு வந்தால் சுவிஸ் பாங்கில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய அக்கவுண்டிலும் 15 லட்சம் போடுவேன் என மோடிஜி கூறியிருந்தார். இப்ப எங்கே போனாலும் அந்த பணம் எங்கே என்று மக்கள் அவரைக் கேட்கிறார்கள். உங்களிடம் எப்படி மக்கள் தீர்வு எங்கே என்று கேட்காமல் இருக்கிறார்கள்?
சம்பந்தர் ஐயா- இது ஒரு ரீம் வேர்க் மேடம்.. சுமந்திரன் போன்ற ஒரு தம்பியை பக்கத்தில் வைத்திருக்க வேண்டும். இப்ப உதாரணமாக மோடியை சந்தித்ததும் “ தீர்வு ரெடி. எலெக்கசன் முடிந்ததும் தீர்வு பாராளுமன்றத்தில் வைக்கப்படும்” என நான் ஒரு அறிக்கை விடுவேன். அதன்பின் தம்பி சுமந்திரன் நானும் மோடியும் சந்தித்த போட்டோவை வெளியிட்டு “இந்தியா மிகவும் ஆர்வமாக இருக்கிறது” என்று அறிக்கை விடுவார்.
இந்திய பெண் அதிகாரி - இப்படி சொன்னதும் மக்கள் நம்பி விடுவார்களா? தமிழ் மக்கள் புத்திசாலிகள் என்றல்லவா இத்தனை நாளும் அறிந்திருந்தேன்.
சம்பந்தர் ஐயா- பொறுங்க மேடம் இனிதான் விசயமே இருக்கு. அப்புறம் சுமந்திரனிடம் லாப்டாப் வாங்கிய சில ஊடகவியலாளர்கள் இருக்கினம். அவை உடனே “மகிந்தவை மோடி கண்டிப்பு. தீர்வை குழப்பினால் கடும் விளைவை சந்திக்க வேண்டி வரும் என மிரட்டல். மகிந்த வெளிறிய முகத்துடன் வெளியேறினார். கொழும்பு வந்ததும் தனது சோதிடர் ஆலோசனையின் பேரில் கையில் மேலும் சில கறுப்பு நூல்களை கட்டியுள்ளார்” என்று ஆய்வு கட்டுரை எழுதுவார்கள்.
இந்திய பெண் அதிகாரி - அப்படிக்கூட எழுதுவார்களா? இதையெல்லாம் மக்கள் நம்புவார்களா?
சம்பந்தர் ஐயா- என்ன மேடம் இப்படி கேட்கிறீர்கள்? இதற்கப்பறம் சுமந்திரனின் செம்புகள் சிலர் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் பேஸ்புக்கில் “ஒப்பிரேசன் சம்பந்தன்” என்று ஒரு கதை எழுதுவார்கள். இத்தனைக்கும் பிறகு மக்கள் எப்படி நம்பாமல் இருப்பார்கள்?
இந்திய பெண் அதிகாரி – சரி. பார்த்து செய்யுங்க. அப்புறம் அமிர்தலிங்கத்திற்கு நடந்ததுதான் உங்களுக்கும் நடக்கப் போகுது போல. அப்புறம், எங்க கடற்படை இலங்கை கடற்படையுடன் சேர்ந்து உங்க திரிகோணமலை கடலில் போர்ப் பயிற்சி செய்ததில் உங்களுக்கு ஏதும் வருத்தம் உண்டா?
சம்பந்தர் ஐயா - மேடம். நீங்க இலங்கைப் படையுடன் சேர்ந்து போர்ப் பயிற்சி செய்தாலும் சரி அல்லது அவைக்கு போர்க்கப்பல் கொடுத்தாலும் சரி எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் என்ர பதவியை பறித்த மகிந்த ராஜபக்ச என்ர சொகுசு பங்களாவையும் பறிக்க பிளான் போடுவதாக அறிகிறேன். இந்திய அரசுதான் என்னை காப்பாற்ற வேண்டும் மேடம்.
இந்திய பெண் அதிகாரி – அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அதை நாங்க பார்த்துக் கொள்கிறோம். இன்னொரு உதவி நீங்க எங்களுக்கு செய்ய வேண்டும் சேர்.
சம்பந்தர் ஐயா – என்ன செய்ய வேண்டும் மேடம்?
இந்திய பெண் அதிகாரி – “எட்கா” ஒப்பந்தப்படி இலங்கையில் பணிபுரிய இந்தியாவில் இருந்து டாக்டர்களை அனுப்ப இருக்கிறோம். சிங்களவர்கள் எதிர்ப்பார்கள் என்பதால் முதலில் தமிழர்களின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு டாக்டர்களை அனுப்புகிறோம். பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்வீர்களா?
சம்பந்தர் ஐயா – நீங்கள் தாராளமாக அனுப்பி வையுங்கள் மேடம். யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் “ இந்திய டாக்டர்களை திருப்பி அனுப்பினால் சிங்கள டாக்டர் வந்துவிடுவார்கள்” என்று கூறுவேன். உடனே அவர்கள் பேசாமல் இருந்துவிடுவார்கள்.
இந்திய பெண் அதிகாரி - இதில் முக்கிய விடயம் என்னவென்றால் இந்தியாவில் இருந்து வருபவர்கள் தமிழ்நாட்டு டாக்டர்கள் இல்லை. அத்தனை பேரும் இந்தி டாக்டர்கள்.
சம்பந்தர் ஐயா – அதனால் என்ன மேடம்? ஒரு பிரச்சனையும் இல்லை. கூடவே நாலு இந்தி ஆசிரியர்களையும் சேர்த்து அனுப்பி வையுங்கள். நாங்கள் இந்தி கற்றுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment