Friday, September 27, 2019

•முரளியின் பந்து வீச்சில் அவுட்டான கோத்தாவும்

•முரளியின் பந்து வீச்சில் அவுட்டான கோத்தாவும்
இடையில் புகுந்து சிக்சர் அடித்த பாலித்த பெருமவும்
இது விளையாட்டு செய்திகள் இல்லை. விளையாட்டுதனமான அரசியல் பதிவும் இல்லை.
வழக்கமாக முரளி வீசும் பந்தில் எதிரணி வீரர்தான் அவுட்டாகுவார். ஆனால் இப்போது முரளி வீசிய அரசியல் பந்தில் தனது அணி கோத்தாவையே அவுட்டாக்கியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்சவுக்கு விழக்கூடிய தமிழர் வோட்டில் பாரிய தாக்கத்தை முரளியின் பேச்சு ஏற்படுத்திவிட்டது.
அதனால்தான் தான் பேசிய பேச்சையே 24 மணி நேரத்திற்குள் மறுக்க வேண்டிய நிலை முரளிக்கு எற்பட்டுள்ளது.
சரி. விடுவம். அவர் மறுப்பு தெரிவித்துவிட்டபடியால் இனி அதைப் பற்றி பேசுவது முறையல்ல.
ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது அமைச்சர் பாலித்த பெரும அடித்திருக்கும் சிக்சர்.
பாலித பெரும ஒரு சிங்களவர். அதுமட்டுமல்ல அமைச்சரும்கூட. அவர் தமிழர் வோட்டால் எம் பி யாகவில்லை. இருந்தும் ஒரு தமிழரின் உடலை சுமந்து சென்று மயானத்தில் அடக்கம் செய்து தமிழர் மனங்களில் சிக்சர் அடித்துவிட்டார்.
முரளி ஒரு தமிழர். அதுவும் மலையக தமிழர். அவர் தன் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு அடக்கம் செய்ய நிலம்கூட சொந்தமாக இல்லை என்ற அவலத்தையாவது கோத்தபாயாவுக்கு தெரிவித்திருக்கலாம்.
கிரிக்கட்டில் பந்து வீசுவது வேறு. அரசியலில் பந்து வீசுவது வேறு என்பதை இப்போது முரளி நன்கு உணர்ந்திருப்பார்.

No comments:

Post a Comment