Sunday, December 20, 2020

பேரறிவாளனின் விடுதலையும்

•பேரறிவாளனின் விடுதலையும் தமிழக “டயர் நக்கி” அரசின் துரோகமும்! கடந்த இருதினங்களுக்கு முன்னர் ஜெயா அம்மையாரின் சமாதியில் நினைவஞ்சலி செலுத்திய முதல்வரும் துணை முதல்வரும் தாம் “அம்மாவின் ஆட்சி”யை தொடர்வதாக கூறியிருந்தனர். இவர்கள் உண்மையில் அம்மாவின் ஆட்சியை தொடர்வதாக இருந்தால் அவரின் இறுதி விருப்பங்களில் ஒன்;றான எழுவர் விடுதலையை செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த டயர் நக்கி அரசு இதுவரை எழுவரை விடுதலை செய்யாதது மட்டுமன்றி ஆளுநருடன் சேர்ந்து அவர்களின் விடுதலைக்கு எதிராக சதி செய்கிறது. பேரறிவாளன் மிகவும் சுகயீனம் அடைந்துள்ளார். அவர் மருத்துவ சிகிச்சைக்காக பரோல் விடுமுறை கேட்டபோது இந்த டயர் நக்கி அரசு மறுத்துவிட்டது. தான் மறுத்தது மட்டுமன்றி பேரறிவாளன் நீதிமன்ற அனுமதி கோரியபோதும் கடும் எதிர்;ப்பை இவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவ சிகிச்சை பெற பரோல் விடுமறை வழங்கவே மறுக்கும் இந்த அரசு பேரறிவாளனுக்கு விடுதலை வழங்க ஆளுனர் தாமதம் செய்வதாக பொய் கூறுகிறது. ஆளுநர் தாமதம் செய்வதுதான் காரணம் என்றால் இந்த ஏழுபேரையும் நீண்ட பரோலில் விடுதலை செய்ய முடியும். அதற்கு ஆளுநர் அனுமதி தேவையில்லை. ஆனால் அதற்கு இந்த டயர் நக்கி அரசு தயாரில்லை. ஏனெனில் இந்த எழுவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற உண்மையான விருப்பு இவர்களுக்கு இல்லை. அதை உறுதிப்படுத்துவிதமாக அண்மையில் தமிழக அரசின் சார்பாக நீதிமன்றத்தில் பங்குபற்றிய அரச வழக்கறிஞர் செயற்பாடு அமைந்துள்ளது. பேரறிவாளன் புழல் சிறையில் அடைக்கபப்ட்டிருக்கிறார். ஆனால் மத்திய அரசின் வழக்கறிஞர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி வேலூர் சிறைக்கு அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் சிகிச்சை பெற முடியும் என்றும் அரச வழக்கறிஞர் கூறியிருக்கிறார். இதுவும் இன்னொரு பொய் ஆகும். ஏனெனில் சிறையில் இருப்பவர்கள் நீதிமன்ற உத்தரவு இன்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறமுடியாது என்று விதி இருக்கிறது. இவ்வாறு மத்திய அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பொய்கள் கூறும்போது அதை மறுத்து பேச வேண்டிய தமிழக அரசின் வழக்கறிஞர் மௌனமாக இருந்து ஒத்துழைப்ப வழங்கியுள்ளார். இதன்மூலம் தமிழக டயர் நக்கி அரசு மத்திய அரசுடன் சேர்ந்துகொண்டு ஜெயா அம்மையாரை மட்டுமன்றி தமிழக மக்களையும் ஏமாற்றுகின்றது என்பது நன்கு புலனாகிறது. முன்பு ஜெயா அம்மையாரின் டயரை நக்கியவர்கள் இப்போது மோடியின் டயரை நக்கிறார்கள் எதிர்வரும் தேர்தலில் இந்த டயர் நக்கிகளை மக்கள் விரட்டியடிக்க வேண்டும்

No comments:

Post a Comment