Wednesday, April 27, 2022

குறிப்பு - 2020வருடம் இதே நாளில்

குறிப்பு - 2020வருடம் இதே நாளில் இப் பதிவை எழுதியிருந்தேன். இது இப்போதும் பொருத்தமாக இருப்பதால் மீள்பதிவு செய்கிறேன். •இங்கிலாந்து வருத்தம் தெரிவிக்க முடியுமென்றால் இந்தியா ஏன் வருத்தம் தெரிவிக்க முடியாது? ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்காக இங்கிலாந்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். முழு இந்தியர்களும் குறிப்பாக சீக்கியர்கள் உறுதியாக இருந்தமையினால் வேறு வழியின்றி இங்கிலாந்து வருத்தம் தெரிவித்துள்ளது. இப்போது எம் மத்தியில் எழும் கேள்வி என்னவெனில் இதேபோல் ஈழத் தமிழர்களை இந்திய ராணுவம் படுகொலை செய்தமைக்காக இந்தியா வருத்தம் தெரிவிக்குமா என்பதே. இந்தியா தெரிவிக்குதோ இல்லையோ ஆனால் எம்மவர்களே சிலர் ஓடிவந்து “ராஜீவ் காந்தியைக் கொன்றதை மறந்து இந்தியா எப்படி வருத்தம் தெரிவிக்கும் என்று எழுதுவார்கள். இவர்களுக்கு ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகிறோம். ஜாலியன்வாலாபாக் படுகொலைகளை செய்த ஆங்கிலேய அதிகாரியை; இங்கிலாந்துக்கே சென்று ஒரு சீக்கியா படுகொலை செய்தார். அந்த சீக்கியருக்கு இங்கிலாந்தில் மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அந்த சீக்கியரின் அஸ்தியை இந்தியாவுக்கு எடுத்து வந்து அவரை “தியாகி” என்று கௌரவப்படுத்தினார். ஆங்கிலேய அதிகாரி கொல்லப்பட்டிருந்தும்கூட இங்கிலாந்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். எனவே ராஜிவ் காந்தி கொல்லப்பட்டிருந்தாலும் அதனைக் காரணம் காட்டாமல் இந்திய பிரதமரும் ஈழத் தமிழர்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். எப்படி இந்திய மக்கள் உறுதியாக இருந்தது இங்கிலாந்து பிரதமரை வருத்தம் தெரிவிக்க வைத்ததோ அதேபோன்று தமிழ் மக்களும் உறுதியாக இருந்து இந்திய பிரதமரை வருத்தம் தெரிவிக்க வைக்க வேண்டும். தமிழ் மக்கள் உறுதியாக இருக்க வேண்டிய அதே நேரத்தில் செய்ய வேண்டிய இன்னொரு விடயம் ராஜீவ் காந்தியைக் கொன்ற தானுவின் அஸ்தியை எடுத்து வந்து அவரைக் “தியாகி” என்று கௌரவப்படுத்த வேண்டும். இந்திராகாந்தி எப்படி ஆங்கிலேய அதிகாரியைக் கொன்ற சீக்கியரை கௌரவப்படுத்தினாரோ அதே போன்று தமிழ் மக்களும் தானுவைக் கௌரவப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment