Sunday, May 15, 2016

•சீமான் ஒரு தொகுதியில்கூட ஜெயிக்கமாட்டார்

•சீமான் ஒரு தொகுதியில்கூட ஜெயிக்கமாட்டார்
•"நாம்தமிழர்" கட்சி ஒரு சதவிகித ஓட்டு கூட பெறமாட்டாது
•சீமான் கனடா ரொரன்டோவில் நின்றால் ஜெயிக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் ஜெயிக்க முடியாது.
•நெடுமாறன், வைகோவை அடுத்து சீமான் ஈழத் தமிழர்களை வைத்து பிழைக்கிறார்.
•சினிமாவில் ஒரு வெற்றிப் படத்தை தரமுடியாத சீமானுக்கு அரசியலில் வெற்றியை மக்கள் எப்படி கொடுப்பார்கள்?
•இந்த தேர்தலுக்கு பிறகு சீமான் மட்டுமல்ல வைகோ, விஜயகாந்த் போன்றவர்கள்கூட காணாமல் போய்விடுவார்கள்.
மேற்கண்டவாறு தமிழகத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஏ.எஸ் பன்னிர்செல்வன் அவர்கள் இன்று லண்டனில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.
"விம்பம்" சார்பில் நடைபெற்ற கூட்டம் மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகி 8.00 மணிக்கு முடிவுற்றது. 2016 தமிழக தேர்தல் ஒரு பார்வை என்னும் தலைப்பில் கூட்டம் நடைபெற்றது.
முதலாவது அமர்வு ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தேனீர் இடைவேளைக்கு பின்னர் ஊடகவியலாளர் மாலிங்கசிவம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்து நாளிதழின் வாசகர் பிரிவு எடிட்டரான பன்னீர்செல்வம் அவர்கள் இலங்கையிலும் சில வருடங்கள் பணிபுரிந்துள்ளார். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தார்;
(1)தமிழக மக்களுக்கு ஈழத் தமிழர்கள் மீது அனுதாபம் இருப்பது உண்மை. ஆனால் தேர்தலில் அவர்கள் தமது பிரச்சனைகளுக்கே முன்னுரிமை கொடுத்து வாக்களிக்கிறார்கள்.
(2)இந்திய மெயின் ஊடகங்கள் ஆதிவாசிகள் பிரச்சனைகளை எப்படி கவனிப்பதில்லையோ அதுபோலவே அவை ஈழ அகதிகள் முகாம்கள் பிரச்சனைகளையும் கவனிப்பதில்லை
(3)இலங்கையில் இந்திய ஆதிக்கம் என்பது ஈழத்தமிழர்களின் கற்பனையேயொழிய இந்தியா அவ்வாறு செய்யவில்லை. ஏனெனில் இந்தியா தனது நாட்டிலேயே ஒழுங்காக ஆதிக்கம் செய்யமுடியாமல் இருக்கிறது.
(4)ஊழல் என்பது பிரச்சனை இல்லை. ஏனென்றால் எல்லோருமே ஊழல் செய்வதாக மக்கள் கருதுகிறார்கள்.
(5) மக்கள் விருப்பத்தை மாற்ற முடியாது. அது தேர்தல் முடிவில் எதிரொலிக்கும். திமுக அல்லது அதிமுக வுக்கு பெரும்பான்மை ஆதரவை மக்கள் வழங்குவார்கள்.
மேலும் இந்திய கிராமங்கள் குறித்து தனக்கு தெரியாது என்பதால் அவை பற்றி தன்னால் எதுவும் கூறமுடியாது என்றார்.
அதேபோன்று மீனவர்கள் பிரச்சனை பற்றி எதுவும் தெரியாததால்அது பற்றியும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
குறிப்பு- அவருடைய உரையை அவதானிக்கும்போது இந்திய ஆளும்வர்க்கத்திற்கு விரோதமாக எதையும் கூறாது கவனமாக தவிர்ப்பது அல்லது ஏதோ ஒருவகையில் அவற்றை நியாயப்படுத்தவதாகவே இருந்தது.

No comments:

Post a Comment