Sunday, May 15, 2016

•இவர்களா தமிழக மக்களின் பிரதிநிதிகள்?

•இவர்களா தமிழக மக்களின் பிரதிநிதிகள்?
•இவர்களை தெரிவு செய்யவா பல கோடி செலவில் தேர்தல்?
தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் 553 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் போட்டியிடுவது மக்களுக்கு சேவை செய்யவா அல்லது மேலும் கொள்ளையடிக்கவா?
கிரிமினல் வழக்கு உள்ளவர்கள் 283 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் போட்டியிடுவது மேலும் கிரிமினல் செய்யவா அல்லது திருந்தி வாழவா?
திமுக வில் 68 கிரிமினல் வேட்பாளர்கள்
அதிமுக வில் 47 கிரிமினல் வேட்பாளர்கள்
பாமக வில் 66 கிரிமினல் வேட்பாளர்கள்
தேமுதிக வில் 41 கிரிமினல் வேட்பாளர்கள்
பாஜக வில் 26 கிரிமினல் வேட்பாளர்கள்
காங்கிரசில் 10 கிரிமினல் வேட்பாளர்கள்
மாhக்கிஸ்ட் கட்சியில் 8 கிரிமினல் வேட்பாளர்கள்
இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, பெண்கள் மீதான குற்றம், மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளன.
இதில் மாற்றத்திற்காக வாக்கு அளியுங்கள் என்று கூறும் அன்புமணி கட்சியில் திமுக வுக்கு நிகராக கிரிமினல் வேட்பாளர்கள். இதுதான் அவர் கூறும் மாற்றா?
இத்தகைய கிரிமினல்களை தெரிவு செய்தால் அவர்கள் மக்களுக்கு எப்படி நல்ல ஆட்சியை கொடுப்பார்கள்?
இத் தகைய கிரிமினல்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் கட்சிகள் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் என எப்படி நம்புவது?
இத்தகைய கிரிமினல்களை தெரிவு செய்ய தேர்தல் என்னும் பேரில் பல கோடி ரூபா செலவு செய்வது நியாயம்தானா?
இந்த தேர்தலுக்காக கிரிமினல்கள் செலவு செய்யும் பல கோடி ரூபா அவர்கள் பதவியில் செய்யும் ஊழலுக்கான முதலீடா?
மக்களே! சிந்தியுங்கள்!
பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்றார் தோழர் லெனின்.
பன்றிகளை தெரிவு செய்யப் போகிறீர்களா?

No comments:

Post a Comment