Sunday, May 15, 2016

•மகிந்த தூக்கில் இடப்படுவாரா?

•மகிந்த தூக்கில் இடப்படுவாரா?
பங்களாதேசின் மிகப்பெரிய இஸ்லாமியகட்சித் தலைவர் போர்க் குற்றங்களுக்காக நேற்றைய தினம் தூக்கில் இடப்பட்டுள்ளார்.
ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் மொதியுர் ரஹ்மான் நிசாமிக்கு டாக்கா மத்தியச் சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானுடன் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைக்கான போரின்போது அவர் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தார் எனத் தீர்ப்பளித்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
போர்க் குற்றங்கள் தொடர்பில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள மூத்த தலைவர்களில் இவர் ஐந்தாவதாவார்.
1971ம் ஆண்டு நடைபெற்ற போர்க் குற்றத்திற்காக 45 ஆண்டுகள் கழித்து 2016ல் தண்டனை நிறைவேற்றப்படுவது 2009ல் இனப்படுகொலை புரிந்த மகிந்தவுக்கு எப்போது தண்டனை கிடைக்கும் என்ற கேள்வியை எழுப்புகிறது.
பல்லாயிரம் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த மகிந்த கும்பலுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படவேண்டும். அவர்கள் தண்டனையில் இருந்து தப்ப இடமளிக்கக்கூடாது.
ஆனால் பங்காளதேசில் தண்டனை கிடைக்க வழிசெய்த வல்லரசு நாடுகள் இலங்கையில் மகிந்தவுக்கு தண்டனை கிடைக்க வழி செய்யாமல் பாதுகாக்கின்றன.
குறிப்பாக இந்தியாவே மகிந்த கும்பல் இனப்படுகொலைக்காக தண்டனை பெறுவதில் இருந்து காப்பாற்றி வருகிறது. சர்வதேச விசாரணை ஏற்படாமல் குழப்புகிறது.
முதலில் சர்வதேச விசாரணை என்றார்கள். பின் இலங்கையில் கலப்பு விசாரணை என்றார்கள். இப்போது எந்த விசாரணையும் இல்லை என்கிறார்கள். இதனை "நல்லாட்சி அரசு" என்று வேறு அழைக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட பல்லாயிரம் தமிழ் மக்களின சார்பாக தற்போதைய ஒரே கேள்வி மகிந்த எப்போது தூக்கில் இடப்படுவார்?
அல்லது,
பங்காளதேசுக்கு ஒரு நியாயம்!
இலங்கைக்கு இன்னொரு நியாயம்!
இதுதான் வல்லரசுகளின் நியாயமா?

No comments:

Post a Comment