Sunday, May 15, 2016

•மாற்றம் என்பது என்ன?

•மாற்றம் என்பது என்ன?
அதிமுக விற்கு பதிலாக திமுக வையோ அல்லது திமுக விற்கு பதிலாக அதிமுக வையோ தெரிவு செய்வது மாற்றம் இல்லை.
பல காலமாக திமுக வும் அதிமுக வுமே மாறி மாறி ஆட்சி செய்கின்றன. ஆனால் தமிழக மக்களின் வாழ்வில் எந்த மாற்றமும் வரவில்லை.
ஆட்சியாளர் மீது மக்களுக்கு ஏற்படும் வெறுப்பு ஏற்கனவே ஆட்சியில் இருந்த இந்த கட்சிகளுக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்பை வழங்குகின்றன.
ஜெயா அம்மையாரின் ஆட்சி மீது ஏற்பட்ட வெறுப்பு திமுக ஆட்சிக்கு வர வழிசமைக்குமானால்,
•ஸ்டாலின் ஆட்சி மற்றும் கட்சி தலைமையில் அமர்த்தப்படுவார். வாரிசு அரசியல் எவ்வித இடையூறும் இன்றி அரங்கேற்றம் செய்யப்படும்
•ஆட்சி பதவி மூலம் 2ஜி ஊழல் வழக்கு ஊத்தி மூடப்படும்.
•கருணாநிதி கும்பல் தொடர்ந்தும் கோடிக்கணக்கில் சொத்துகளை குவிக்கும்
•தமிழின அழிப்பு தொடர்ந்து நடைபெற கருணாநிதி முழு ஒத்துழைப்பு வழங்குவார்.
ஜெயா அம்மையார் மீண்டும் ஆட்சிக்கு வருவேயாரானால்,
•சொத்து குவிப்பு வழக்கு அவருக்கு சாதமாக மாற்றப்படும்
•தொடர்ந்தும் ஜெயா-சசி கும்பல் சொத்துகளை சுருட்டும்.
•மதுவினால் தமிழகம் சீரழியும்
•பேரறிவாளன் உட்பட்ட எழுவர் விடுதலை செய்யப்ட மாட்டார்கள்.
•சிறப்புமுகாம் மூடப்டாது. அகதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள்.
எனவே கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயா அம்மையார் இருவரில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழக மக்களின் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
பிற்போக்குவாத முதலாளித்து அரசியலுக்கு மாற்று புரட்சிகர அரசியல் மட்டுமே.
பாராளுமன்ற தேர்தல் பாதைக்கு மாற்று ஆயுதம் ஏந்திய மக்கள் யத்தப் பாதையே
இதை தமிழக மக்கள் உணராதவரை எந்த மாற்றமும் வரப்போவதில்லை.

No comments:

Post a Comment