Tuesday, May 31, 2016

•காட்லிக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் முன்மாதிரியாக திகழுமா?

•காட்லிக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் முன்மாதிரியாக திகழுமா?
வடமராட்சியில் ஒரு புகழ்பெற்ற பாடசாலை காட்லிக் கல்லூரி.
அது அதிக அளவிலான பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது.
அதிகளவிலான போராளிகளையும் உருவாக்கியுள்ளது.
அதில் படித்தவர்கள் உலகெங்கும் உயர் பதவிகளில் இருக்கிறார்கள்.
அதன் பழைய மாணவர் சங்கம் லண்டனில் பல காலமாக இயங்கி வருகிறது.
உலகெங்கும் முள்ளிவாய்க்கால் அழிவிற்கு அஞ்சலி செலுத்தும் வேளையில் அச் சங்கம் லண்டனில் பாடகர் ஜேசுதாசை அழைத்து கச்சேரி நடத்தியுள்ளது.
இவர்கள் ஜேசுதாசுக்கு மட்டும் அதிக பணம் செலவு செய்யவில்லை.
அந்த நிகழ்வு நடத்த அதிக செலவு மிக்க மண்டபத்தையே புக் செய்துள்ளார்கள்.
கடந்த வருடம் பாடகர் பாலசுப்பிரமணியத்தை அழைத்து கச்சேரி நடத்தினார்கள்.
அடுத்தவருடம் ஏ.ஆர் ரகுமானை அழைப்பார்கள் போல் இருக்கிறது!!
ஏன் இப்படி இந்திய வியாபாரிகளை அழைத்து பணத்தை கரியாக்கிறார்கள்?
ஏன் இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள்?
ஒரு முறை தமது வருடாந்த நிகழ்வை லண்டன் தேம்ஸ் நதியில் மிதக்கும் ஓட்டலில் நடத்தினார்கள்.
வெள்ளைக்காரர்களே நடத்த அஞ்சும் இந்த ஆடம்பரங்களை எதற்காக பாடசாலையின் பெயரால் நடத்துகிறார்கள்.
இவர்கள் வரவு செலவு கணக்கை பொதுவில் காட்டுவார்களா?
இதுவரை பாடசாலைக்கு எந்தளவு பணம் கொடுத்தார்கள் என்பதையாவது தெரிவிப்பார்களா?
நான் காட்லிக் கல்லூரிக்கு சென்ற வேளை அங்குள்ள கம்பியூட்டர் பிரிண்டருக்குரிய ரோனர் வாங்கவே பணம் இன்றி அதிபர் இருந்ததை நேரில் கண்டேன்.
இந்த நிலையில் பாடசாலையின் பெயரால் பழைய மாணவர்கள் இப்படி வீண் செலவு செய்வது நியாயமா?
காட்லிக் கல்லூரி மட்டுமல்ல யாழ்பாணத்தின் பிரபல பாடசாலைகள் பலவற்றின் பெயரால் இந்த கூத்துகளே லண்டனில் நடக்கிறது.
இந்த கூத்துகள் நிறத்தப்பட வேண்டும். இனியாவது பழைய மாணவர் சங்கங்கள் பொறுப்புடன் முன் மாதிரியாக திகழ வேண்டும்.
நானும் ஒரு காட்லிக் கல்லூரி பழைய மாணவன் என்பதற்காக முதன் மதலாக தற்போது வெட்கப் படுகிறேன்.

No comments:

Post a Comment