Sunday, May 15, 2016

•இவர் மலைகளை அகற்றிய மூடக் கிழவன் அல்ல. இவர் தனது மக்களுக்காக கிணறு வெட்டிய அப்பாவி

.•இவர் மலைகளை அகற்றிய மூடக் கிழவன் அல்ல.
இவர் தனது மக்களுக்காக கிணறு வெட்டிய அப்பாவி.
சீனாவில் ஒரு கிழவன் தினமும் மலையைச் சுற்றி தனது விவசாய நிலத்திற்க சென்று வந்தான்.
மலையைச் சுற்றி செல்வதால் தினமும் அதிக நேரம் வீண் விரயமாவதாக நினைத்தான். எனவே மலையை வெட்டி பாதை அமைக்க விரும்பினான்.
கிழவன் மலையை வெட்டி பாதை அமைக்க முயல்வதை மூடத்தனம் என எல்லோரும் கிண்டல் செய்தார்கள்.
இருந்தும் கிழவன் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் மலையை வெட்டினான். கிழவன் ஆரம்பித்த பாதையை இறுதியாக கிழவனின் மகன் அமைத்து முடித்தான்.
இந்த கதையை கூறி சீனாவின் விடுதலைக்கு மூன்று மலைகள் தடையாக இருக்கின்றன. அவற்றை அகற்றி வெற்றி பெறுவோம் என மாசேதுங் கூறினார்.
அதுபோல் இந்தியாவில் கிணறு வெட்ட ஆரம்பித்தவரை மூடத்தனம் என அவரின் குடும்பத்தவர்களே கிண்டல் செய்தனர்.
சாதி குறைந்தவர் என்பதால் அவரது மனைவிக்கு தண்ணீர் அள்ள உயர்சாதியினரால் தடுக்கப்பட்டார்.
தன் மனைவிக்காக தொடர்ந்து 40 நாட்கள் கிணறு வெட்டினார். இன்று அவரது மனைவி மட்டுமல்ல அவரது சாதியினரும் அதில் தண்ணீர் எடுக்கின்றார்கள்.
இவரது மனைவியை தண்ணீர் எடுக்கவிடாமல் தடுத்த உயர்சாதியினர்கூட இவர் கிணற்றில் இப்போது தணணீர் எடுக்கிறார்கள்.
மாவட்ட கலெக்டர் தேடிச் சென்று பாராட்டியிருக்கிறார். பத்திரிகைகள் எல்லாம் செய்தியை பிரசுரித்து பிரபலப்படுத்தியுள்ளன.
ஆரம்பத்தில் வீண் முயற்சி என்று கிண்டல் அடிப்பார்கள்
வெற்றி பெற்றுவிட்டால்; விடா முயற்சி என்று பாராட்டுவார்கள்.
இது புலத்தில் போராடும் தமிழ் மக்களுக்கும் பொருந்தும்.
.
.

No comments:

Post a Comment