Sunday, May 15, 2016

•"இலவச" அறிவிப்பின் மூலம் ஆசையை தூண்டி தமிழனை ஏமாற்ற முயலும் அரசியல் கட்சிகள்!!

•"இலவச" அறிவிப்பின் மூலம் ஆசையை தூண்டி
தமிழனை ஏமாற்ற முயலும் அரசியல் கட்சிகள்!!
ஒருவனை ஏமாற்ற வேண்டுமானால் முதலில் அவன் ஆசையை தூண்ட வேண்டும் என்பதற்கிணங்க இலவச அறிவிப்பகள் மூலம் தமிழக மக்களின் ஆசையை தூண்டி அவர்களை ஏமாற்ற அரசியல் கட்சிகள் முனைகின்றன.
இவ அரசியல் கட்சிகள் ; ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்கள் மீது உள்ள 211483 கோடி ரூபா கடன் குறையப் போவதில்லை. மாறாக மேலும் அதிகரிக்கப்போகிறது.
இவர்கள் ஆட்சிக்கு வந்தால் கடனுக்காக கட்டும் வட்டித் தொகை 10754 கோடி ரூபா நீங்கப் போவதில்லை. மாறாக அதிகரிக்கப் போகிறது.
இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசு தமிழகத்தில் இருந்து வசூலிக்கும் வரி 85000கோடி ருபா குறையப் போவதில்லை. மாறாக அதுவும் அதிகரிக்கப் போகிறது.
இந் நிலையில,; ஜெயா அம்மையார் ஆட்சியை தக்கவைக்கத் தவிப்பது தமிழக மக்களுக்கு நன்;மை செய்யவதற்கு அல்ல. மாறாக சொத்து குவிப்பு வழக்கில் தண்டனையில் இருந்து தப்புவதற்காகவே.
கடந்த ஜந்து அண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் காய்ந்து போயிருக்கும் கலைஞர் கருணாநிதி கும்பல் இம்முறை எப்படியும் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்று தவிப்பது கொள்ளையடிக்கவும் வாரிசு அரசியலை மேற்கொள்ளவுமே.
வெறும் மஞ்சள் பையுடன் வந்த கலைஞர் குடும்பத்தின் இன்றைய சொத்து மதிப்பு 50000கோடிக்கு ரூபாவுக்கும் அதிகம் என்கிறார்கள.
குடும்பமே இல்லாத ஜெயா அம்மையாரின் சொத்து மதிப்பு 30000 கோடிக்கு ரூபாவுக்கு மேல் என்கிறார்கள்.
தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தபடியாலே இவர்களால் இத்தன அயிரம் கோடி ரூபா சொத்துக்கள் சேர்க்க முடிந்தது.
அதனால்தான் எப்படியும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பொய் வாக்குறுதிகளையும் ஆசையைத் தூண்டும் இலவச அறிவிப்புகளையும் செய்கிறார்கள்.
இம்முறை கலைஞர் கருணாநிதி வெற்றி பெற்றால்,
•தமிழின அழிப்பை மேற்கொண்ட காங்கிரஸ் சோனியா மேலும் தைரியம் பெற்று தொடர்ந்து அழிவை மேற்கொள்வார்.
•தமிழின அழிப்பை மேற்கொண்ட சோனியா விசாரண மற்றும் தண்டனையில் இருந்து தப்பிவிடுவார்.
•பணமும் அமைச்சு பதவியும் கொடுத்தால் தமது இனத்தை அழித்தவர்களையும் தமிழ் இனம் ஏற்றுக்கொள்ளும் என்ற அவப்பெயர் உருவாகும்
•ஸ்டாலினுக்கு பதவி வழங்கி வாரிசு அரசியல் பூரணமாக நிகழும்.
•கலைஞர் குடும்பம் தமது சொத்து மதிப்பை மேலும் 50 ஆயிரம் கோடியாக உயர்த்தும்
எனவே யார் வெல்ல வேண்டும் என்பதைவிட கலைஞரின் காங்கிரஸ் திமுக கூட்டு தோற்கடிக்கப்படவேண்டும் என்பதே தமிழக மக்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment