Sunday, May 15, 2016

•"பெரியண்ணை"த்தனமாக நடந்துகொள்ளும் சில இந்திய ஊடகவியலாளர்கள்

•"பெரியண்ணை"த்தனமாக நடந்துகொள்ளும் சில இந்திய ஊடகவியலாளர்கள்
இந்திய அரசியல்வாதிகள் மட்டுமன்றி சில இந்திய ஊடகவியலாளர்களும் பெரியண்ணைத்தனமாக எம்மீது நடந்துகொள்ள முயல்கிறார்கள்.
அண்மையில் லண்டன் வந்த "இந்து" பத்திரிகை எடிட்டர் பன்னீர்செல்வம் அவர்கள் பேச்சு இந்த பெரியண்ணைத்தனத்தை நன்கு வெளிப்படுத்தியது.
இந்திய ஆதிக்கம் என்பது ஈழத்தவர்களின் கற்பனையேயொழிய உண்மையில் அப்படி ஒன்று இல்லை என்று அவர் கூறினார்.
இலங்கை மட்டுமன்றி நேபாளம், மாலைதீவு, போன்ற நாடுகள்கூட இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக குரல் கொடுக்கின்றன. ஆனால் அவை வெறும் கற்பனை என்று இவர் எமக்கு போதிக்க முயல்கிறார்.
இவர் இலங்கையில் இருந்தபோது பேச்சுவாhத்தைக்கு என்று அழைத்துவந்த புலி உறுப்பினர் ஜோனி கொலை, ஊடகவியலாளர் குகாமூர்த்தி கொலை போன்றவற்றில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என கூறுகிறார்கள். ஆனால் இவரோ தன்னை வெறும் ஊடகவியலாளராக காட்டிக்கொள்கிறார்.
இவரிடம் நாம் கேட்க விரும்புவது,
ஒரு நாளைக்கு இரண்டு கோடி செலவு செய்து இரண்டரை வருடங்கள் ஈழத்தில் இந்திய ராணுவம் யுத்தம் செய்தது ஈழத்தவர்களின் வெறும் கற்பனையா?
8000 தமிழ் மக்களை கொன்று நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வல்லுறவு செய்து பல கோடி ரூபா பெறுமதியன சொத்துகளை சேதப்படுத்தியது வெறும் கற்பனையா?
1971ல் ஜே.வி.பி கிளர்ச்சியை அடக்குவதாக கூறி 4 ஆயிரம் சிங்கள இளைஞர்களை குண்டு வீசிக் கொன்றது வெறும் கற்பனையா?
இவை யாவும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்திய பெரியண்ணையின் ரவுடித் தனம் இன்றி வேறு என்ன?
இந்த பன்னீர் செல்வம் மட்டுமன்றி இன்னும் சிலர் பிபிசி தமிழோசையில் இருக்கிறார்கள். இவர்களும் அதே பெரியண்ணைத்தனத்துடனனேயே ஈழத் தமிழர்களை பார்க்கின்றனர்.
அண்மையில் ஒரு இந்திய ஊடகவியலாளருக்கு ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்வதற்குரிய புலமைபரிசு வழங்கப்பட்டுள்ளது. அவர் தமது ஆராய்ச்சிக்கு தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு போருக்கு பின்னர் இலங்கை ஊடகங்களின் பங்கு
இலங்கையில் எத்தனை பத்திரிகைகள் வெளிவருகின்றன எனபது கூடத் தெரியாமல் அவர் இந்த அராய்ச்சி தலைப்பை எடுத்திருக்கிறார். என்னே அவலம் இது!
இவர்கள் தமிழர்களாக இருந்து ஈழத் தமிழினத்தின் மீது இப்படி நடந்து கொள்கிறார்களே என்ற வருத்தத்தைவிட, இவர்களுக்கு சில ஈழத் தமிழர்கள் மேடைகொடுத்து வரவேற்கிறார்களே என்பதுதான் மிகவும் வருத்தம் தருகிறது.

No comments:

Post a Comment