Sunday, May 15, 2016

•கருங்காலிகள்!

•கருங்காலிகள்!
இன்று நான் ஒரு கதை சொல்லப் போகிறேன். ஓங்கிய பெருங்காடு. அதில் நிறைய கருங்காலி மரங்கள் வளர்ந்து இருந்தன. ஒருநாள் அவற்றை வெட்டுவதற்காக மரவியாபாரி வந்திருந்தான். அதைப் பார்த்த இளம் மரங்கள் பயந்துபோய் தாய் மரத்திடம் முறையிட்டன. அப்போது மரவியாபாரியின் கையில் இருந்த இரும்புக் கோடரியைப் பார்த்த தாய்மரம் " இன்று எமக்கு ஆபத்து இல்லை. பயப்படாதீர்கள்" என்றது. அதுபோல் மரவியாபாரியாலும் அவ் மரங்களை அன்று வெட்ட முடியவில்லை. அடுத்தநாள் மரவியாபாரி மீண்டும் வந்தான். மீண்டும் இளம் மரங்கள் தாயிடம் முறையிட்டன. மரவியாபரியின் கையில் இருந்த மரப்பிடி போட்ட கோடாரியைக் கண்ட தாய்மரம் கூறியது" எம்மில் ஒருவன் அவன் கைப்பிடியாக மாறிவிட்டான். எனவே இன்று எமது அழிவு நடக்கப்போகிறது" என்றது. ஆம், கருங்காலி மரத்தை பிடியாக போட்டதால் வியாபாரியால் மரத்தை தறிக்க முடிந்தது. இதனாலேயே ஒரு இனத்தில் எதிரியுடன் சேர்ந்து துரோகம் செய்பவர்கள் "காட்டிக்கொடுக்கும் கருங்காலி" என அழைக்கப்டுகிறார்கள்.
குறிப்பு-
•இந்த கதையை படித்ததும் மீண்டும் இந்திய அரசுக்கு கைக்கூலியாக மாறிய எம்மவர்கள் சிலரின் நினைவு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.
•குறிப்பாக புலத்தில் இருந்துகொண்டு அன்னை சோனியாவின் கண்களில் ஈரத்தை கண்டேன் என்பவர்களையோ அல்லது தமிழீழம் பெற்றுதர கலைஞர் கருணாநிதி மீண்டும் பதவிக்கு வரவேண்டும் என குரல் கொடுப்போர்களையோ நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பு இல்லை.

No comments:

Post a Comment